என் மலர்
முகப்பு » தலீபான்கள்
நீங்கள் தேடியது "தலீபான்கள்"
அமெரிக்கா உடனான அமைதி பேச்சுவார்த்தையை தலீபான்கள் ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Taliban
தோகா:
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் அமெரிக்கா, அங்கு அமைதியை ஏற்படுத்தும் விதமாக தலீபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. இதற்கு தலீபான்களும் சம்மதித்தனர். அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலீபான்கள் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையை சவுதி அரேபியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால் தலீபான்களோ கத்தார் தலைநகர் தோகாவில்தான் அமைதி பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அமெரிக்கா அதனை ஏற்றுக்கொண்டது.
அதன்படி இருதரப்புக்கும் இடையேயான 2 நாள் பேச்சுவார்த்தை நேற்று தொடங்க இருந்தது. ஆனால் தலீபான்கள் இதில் பங்கேற்க முடியாது எனக்கூறி அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிட்டனர். அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான செயல் திட்டத்தில் தலீபான்களுக்கு உடன்பாடு இல்லாததால் அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைதி பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் பங்கேற்க தலீபான்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டும் என்றால் எங்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தலீபான்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Afghanistan #Taliban
காபூல்:
அமெரிக்காவில் ராணுவ தலைமையகம் பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் 2001-ம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினர் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தி 3 ஆயிரம் பேரை கொன்று குவித்தனர்.
உடனே தலீபான்களுக்கு புகலிடம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து, தலீபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்படைகளுக்கும், தலீபான்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் மூண்டது. தொடர்ந்து 18-வது ஆண்டாக அது நீடிக்கிறது.
சமீபத்தில் கஜினி நகரை பிடிப்பதற்காக தலீபான்கள் கடுமையாக சண்டையிட்டனர். இந்த சண்டையில் ஆப்கானிஸ்தான் படையினர் 100 பேரும், அப்பாவி பொதுமக்கள் 35 பேரும் பலியாகினர்.
இந்த நிலையில் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி தலீபான்கள் தலைவர் மவுலவி ஹைபதுல்லா அகுன்ஜதா வெளியிட்டு உள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இருக்கிற வரையில் அமைதிக்கு வழி இல்லை. அமைதி திரும்ப வேண்டும் என்றால் எங்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என கூறி உள்ளார். #Afghanistan #Taliban

×
X