என் மலர்
நீங்கள் தேடியது "தலைவி"
- ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியிருந்த திரைப்படம் ‘தலைவி’.
- இப்படத்தில் கங்கனா ரணாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவான படம் 'தலைவி'. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்திருந்தார். எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்தார். மேலும், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்தப் படத்தை விப்ரி மோஷன் பிக்சர்ஸ், கர்மா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் விஷ்ணுவர்தன் இந்தூரி, ஷைலேஷ் ஆர் சிங் ஆகியோர் தயாரித்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் விநியோக உரிமையை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் பெற்றது.
இந்நிலையில் படத்தின் விநியோக உரிமைக்காக செலுத்திய முன்பணம் ரூ.6 கோடியை திருப்பித் தரும்படி, அந்த நிறுவனம் படத் தயாரிப்பாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியது. கடந்த ஒன்றரை வருடங்களாகக் கேட்டும் பதில் ஏதும் வராததால், ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.