என் மலர்
முகப்பு » தா.பாண்டியன்
நீங்கள் தேடியது "தா.பாண்டியன்"
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீர் பிரச்சினை காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். #DPandian #RajivGandhiHospital
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீர் பிரச்சினை காரணமாக நேற்று இரவு 9 மணி அளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே 2 முறை இதே பிரச்சினைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மீண்டும் இதே பிரச்சினைக்காக நேற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தா.பாண்டியனின் உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். #DPandian #RajivGandhiHospital

மூச்சுத்திணறலுக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இ.கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியனை மு.க. ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.#DPandianHospitalised #MKStalin #MKStalinmeetsDPandian
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். முன்னாள் எம்.பி.யும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளருமான இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன்பின்னர் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள தா.பாண்டியனை பார்த்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் பொன்முடி, சென்னை (கிழக்கு) மாவட்ட தி.மு.க. செயலாளர் சேகர் பாபு உள்ளிட்டோர் வந்திருந்தனர். #DPandianHospitalised #MKStalin #MKStalinmeetsDPandian
×
X