என் மலர்
முகப்பு » தேஜா
நீங்கள் தேடியது "தேஜா"
கிரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கைப்படத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான 9 நாயகிகள் நடிக்கின்றனர். #NTRBiopic #Balakrishna
ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி வருகிறது. பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கிறார்.
‘என்.டி.ஆர். பயோபிக்’ எனத் தற்போது பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யா பாலன் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத்திசிங், சாவித்திரி கதாபாத்திரத்தில் நித்யா மேனன், சரோஜா தேவி கதாபாத்திரத்தில் அனுஷ்கா, சவுகார் ஜானகி கதாபாத்திரத்தில் ஷாலினி பாண்டே, ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத், ஜெயப்பிரதா கதாபாத்திரத்தில் ஹன்சிகா, கிருஷ்ண குமாரி வேடத்தில் மாளவிகா நாயர் நடிக்கின்றனர்.
இதுதவிர, சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணாவும், அவருடைய மனைவியாக மஞ்சிமா மோகனும் நடிக்கின்றனர். இப்படி ஒரே படத்தில் 9 முன்னணி நடிகைகள் நடிப்பதால், இப்போதே இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்தப் படத்தில் முரளி சர்மா, பிரசாத் ரவுல், நாக சைதன்யா, மகேஷ் பாபு, ராணா டகுபதி, மோகன் பாபு மஞ்சு, ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
கிரிஷ் இயக்கும் இந்த படத்தை பாலகிருஷ்ணாவே தயாரிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது. #NTRBiopic #Balakrishna
கிரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கைப் படத்தில் ஜெயப்பிரதா வேடத்தில் நடிகை ஹன்சிகா நடிக்க இருக்கிறார். #NTRBiopic #JayaPrada #Hansika
இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான மறைந்த என்.டி.ஆர். வாழ்க்கை திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் என்டிஆராக நடிப்பது என்டிஆரின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா. என்.டி.ஆர். மனைவியாக இந்தி நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார்.
மேலும் இந்தப் படத்தில் முரளி சர்மா, பிரசாத் ரவுல், நாக சைதன்யா, மகேஷ் பாபு, ராணா டகுபதி, மோகன் பாபு மஞ்சு, ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
படத்தில் என்டிஆருடன் நடித்த நடிகைகளின் கதாபாத்திரங்களும் இந்தப் படத்தில் இடம்பெறுகிறது. ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் பிரீத்தி சிங் நடிக்க, சாவித்திரி வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார்.
மேலும், ஜெயசுதா வேடத்தில் பாயல் ராஜ்புத் நடிக்க, ஜெயப்பிரதா வேடத்தில் தமன்னா நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இப்போது ஜெயப்பிரதா வேடத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தின் முதல் பாகம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.
பிரபுதேவாவின் குலேபகாவலி படத்துக்குப் பிறகு நடிகை ஹன்சிகா கைவசம் விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை, அதர்வாவின் 100, மகா என மூன்று படங்கள் தமிழில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #NTRBiopic #JayaPrada #Hansika
தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தில் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் ராணாவின் மனைவி வேடத்தில் மஞ்சிமாக மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #NTRBiopic #ManjimaMohan
சிம்புவுக்கு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். பொதுவாகவே கவுதம் மேனனின் படங்களில் கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளும் பேசப்படுவது வழக்கம். அது இப்படத்தின் வாயிலாக மஞ்சிமா மோகனுக்கும் கிடைத்தது.
தொடர்ந்து விக்ரம் பிரபுவுடன் சத்ரியன், உதயநிதியுடன் இப்படை வெல்லும் போன்ற படங்களில் நடித்தாலும், அவருக்கான வரவேற்பு அதன்பிறகு பெரிதாக இல்லை. தற்போது அவருக்கு தமிழில் கவுதம் கார்த்திக்குடன் நடிக்கும் தேவராட்டம் படம் மட்டுமே உள்ளது.
இந்நிலையில் தெலுங்கில் தற்போது உருவாகி வரும் என்.டி.ஆர் வாழ்க்கைப் படத்தில் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் ராணாவுக்கு மனைவியாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உருவாகி வரும் இப்படத்தில் இணைவதன் வாயிலாக தெலுங்கில் தனது இரண்டாவது படத்தில் நடிக்க உள்ளார் மஞ்சிமா.
ஏற்கனவே அச்சம் என்பது மடமையடாவின் தெலுங்கு பதிப்பான ‘சாகசம் ஸ்வாசகா சகிக்கோ’வின் மூலம் தெலுங்கில் அவர் அறிமுகம் ஆகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #NTRBiopic #ManjimaMohan
பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணா டகுபதி நடிக்க இருக்கிறார். #NTRBiopic
பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் என்.டி.ராமாராவ் மகன் பாலகிருஷ்ணா அவருடைய அப்பா என்.டி.ஆர். வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் என்.டி.ராமாராவின் மனைவி பசவதாரகம் வேடத்தில் வித்யாபாலனும், ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தி சிங்கும், சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷூம் நடிக்க இருக்கின்றனர்.
இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணா டகுபதி நடிக்க இருக்கிறார். நாயுடு கதாபாத்திரத்தில் நடிப்பதில் பெருமை என்று ராணா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Coming together to tell you a story of an incredible human phenomenon called “N.T.RamaRao” pic.twitter.com/O1j8TKkQnx
— Rana Daggubati (@RanaDaggubati) August 3, 2018
கிரிஷ் ஜகர்லமுடி இயக்கும் இந்த படத்தை, பாலகிருஷ்ணாவே தயாரிக்கிறார். #NTRBiopic
பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #NTRBiopic
தமிழ் நாட்டில் பிறந்து கதாநாயகியாகி தமிழ் சினிமாவில் வெற்றி பெற்று பின்னர் இந்திக்கும் சென்று கொடிகட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. கடந்த பிப்ரவரி மாதம் மர்மமான முறையில் இறந்தார்.
அவரது வாழ்க்கை வரலாற்றில் நடிக்க நடிகைகள் போட்டி போடுகிறார்கள். ஆனால் ஸ்ரீதேவியாக நடிக்கும் வாய்ப்பை தட்டி சென்றுள்ளார் ரகுல் பிரீத்தி சிங். முழு நீள படத்துக்காக அல்லாமல் தெலுங்கில் உருவாகும் என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் ரகுல் பிரீத்தி சிங். இந்த படத்தில் என்.டி.ஆர் மகன் பாலகிருஷ்ணா என்.டி.ஆராகவும், அவரது மனைவியாக வித்யாபாலனும் நடிக்க இருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிக்கிறார்.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. கிரிஷ் ஜகர்லமுடி இயக்கும் இந்த படத்தை, பாலகிருஷ்ணா தயாரிக்கிறார். #NTRBiopic #RakulPreetSingh
பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படத்தில் என்.டி.ராமாராவ்வின் மனைவி கதாபாத்திரத்தில் நடிகை வித்யாபாலன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #NTRBiopic
பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் என்.டி.ராமாராவ் மகன் பாலகிருஷ்ணா அவருடைய அப்பா என்.டி.ஆர். வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் என்.டி.ராமாராவின் மனைவி பசவதாரகம் வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். படத்தின் கதையை கேட்டு முதலில் தயக்கம் காட்டிய வித்யாபாலன், பிறகு சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார்.
என்.டி.ஆரின் மனைவி வேடம் என்றாலும், அவரை எதிர்த்து செயல்படும் வேடம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த படத்தில் வித்யாபாலனுக்கு வலுவான கதாபாத்திரம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
என்.டி.ஆர் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கிய அதேநாளில், கடந்த மார்ச் மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. கிரிஷ் ஜகர்லமுடி இயக்கும் இந்த படத்தை, பாலகிருஷ்ணாவே தயாரிக்கிறார். #NTRBiopic
×
X