என் மலர்
நீங்கள் தேடியது "பத்மஸ்ரீ"
- கே.ஜே.யேசுதாஸ் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
- இவர் 8 தேசிய விருதுகள் மட்டுமின்றி ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் பாடகர் கே.ஜே.யேசுதாஸ். இவர் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
8 தேசிய விருதுகள் மட்டுமின்றி ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். அது மட்மின்றி மத்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். இப்படி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான பாடகர் ஜேசுதாசுக்கு இன்று 84-வது பிறந்தநாள் ஆகும்.
இந்த ஆண்டு தனது பிறந்த நாளில் கேரளாவில் இருக்க ஜேசுதாஸ் விரும்பினார். ஆனால் அமெரிக்காவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிக்காக அவர் அங்கு சென்றிருக்கிறார். இதன் காரணமாக அவர் நினைத்தபடி தனது பிறந்தநாளில் கேரளாவில் இருக்க முடியாமல் போனது.
இருந்தபோதிலும் அவர் தனது பிறந்தநாளை ஆன்லைன் மூலமாக ரசிகர்களுடன் கொண்டாடினார். அவர் ஆன்லைனில் ரசிகர்கள் முன்னிலையில் தோன்றி, கேக் வெட்டினார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜேசுதாசுக்கு ஏராளமான நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள் மற்றும் பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.