என் மலர்
நீங்கள் தேடியது "பாகூர்"
பாகூர்:
பாகூர் அருகே குருவிநத்தம் சித்தேரியில் உள்ள ஒரு தனியார் மதுபான கடையில் மருதாடு கிராமத்தை சேர்ந்த மனநலம் பாதித்த 45 வயது பெண் துப்புரவு தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். நேற்று அந்த பெண் மதுக்கடையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட போது அங்கு மதுகுடித்து கொண்டு இருந்த குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது23), ரமேஷ்(25), மற்றும் சாவடியை சேர்ந்த பிரகாஷ் (28) ஆகியோர் அந்த பெண்ணிடம் தகராறு செய்தனர்.
அப்போது அந்த பெண்ணுக்கு ஆதரவாக நத்தப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (25) என்பவர் அந்த கும்பலிடம் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அய்யப்பன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ராஜசேகரை சரமாரியாக தாக்கினர். மேலும் அய்யப்பன் பீர் பாட்டிலை உடைத்து ராஜசேகரை குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த ராஜசேகர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து அய்யப்பன் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.