என் மலர்
நீங்கள் தேடியது "பூர்ணா"
- ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டெவில்'.
- இப்படத்திற்கு இயக்குனர் மிஷ்கின் இசையமைத்துள்ளார்.
'சவரக்கத்தி' இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "டெவில்". இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிக முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.
மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ். இளையராஜா படத்தொகுப்பையும் மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளார்கள். இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக "டெவில்" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் இசையமைப்பாளர் மிஷ்கின் பேசியதாவது, வாழ்க்கையில் அதிகமாக கஷ்டப்பட்ட நபர்களால் மட்டுமே சினிமாவை நேசித்து காதலிக்க முடியும். கஷ்டங்களை அனுபவிக்காமல் வளரும் ஒருவரால் சினிமாவிற்கு உண்மையாக இருக்க முடியாது என்பது என் எண்ணம். அதனால் தாய் தகப்பன் இல்லாத வாழ்க்கையில் கொடுமையான சோகத்தை அனுபவித்த இளைஞர்களை நான் உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவேன்.
ஒரு படத்தை நீங்கள் உண்மையாக எடுத்திருக்கிறீர்கள் என்றால், அந்த படத்திற்குள் கேளிக்கைகள், சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கலாம். அதை மீறி நெஞ்சைத் தைப்பது போல் ஒரு விஷயம் இருக்க வேண்டும் என்று சொல்வேன். அதுதான் திரைப்படத்திற்கான உயிர். நான் விதார்த்திடம் நீ இன்னும் 50 வருடம் நடித்துக் கொண்டிருப்பாய்… என்று கூறினேன். அவன் சினிமா இல்லை என்றால் இறந்துவிடுவான்… சினிமாவில் தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டே இருக்கும் நபர் விதார்த்.. நானும் அப்படித்தான் உழைத்துக் கொண்டே இருக்கிறேன். விஜய் சேதுபதியைப் போல் விதார்த் முகத்திலும் தமிழ் லான்ஸ்கெப் இருக்கும்.
Living truthfully in an imaginary situation என்பது நடிப்பு பற்றி கொடுக்கப்படும் விளக்கம். நடிக்கும் போது சுயத்தை இழப்பவர்கள் தான் சிறந்த நடிகர், நடிகைகள் என்பேன்.. பூர்ணா அந்த மாதிரியான நடிகை. சவரக்கத்தி படத்தில் என் அம்மாவின் கதாபாத்திரத்தை தான் எழுதியிருந்தேன்… அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது பூர்ணா… பூர்ணாவின் குழந்தை காலை எடுத்து என் தலையில் வைத்துக் கொண்டேன்.. அது போல் தான் பூர்ணாவின் காலையும்… பூர்ணா என் வாழ்க்கையில் மிக முக்கியமான பெண். அவள் வயிற்றில் நான் குழந்தையாகப் பிறக்க விரும்புகிறேன். என்னை ஒரு தாய் போல் அவள் பார்த்துக் கொள்வாள். என்னையும் அவளையும் குறித்து சிலர் தவறாகப் பேசுவார்கள். அவள் எனக்குத் தாய் போன்றவள். என் குழந்தையை விட அவள் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அவள் சாகும் வரைக்கும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்ற படங்களில் அவள் நடிப்பாளா என்று தெரியாது. என் படங்களில் எப்போதும் பூர்ணா இருப்பாள்.
என் தம்பி மிக எளிமையானவன், வாழ்க்கையின் கஷ்டங்களை இப்பொழுது புரிந்து கொள்ள துவங்கியிருக்கிறான்…. அவன் மொழியில் வளமை இல்லை என்றாலும் உணர்வு இருக்கிறது… வெற்றிமாறனுக்குப் பிறகு நாவலில் இருந்து கதையை எடுத்திருக்கிறான்… அந்த ஸ்கிரிப்டில் என்னை தலையிடக்கூடாது என்று சொல்லிட்டான்.. இன்றுவரை அந்த ஸ்கிரிப்டை எனக்கு படிக்க கொடுக்கவில்லை. கொடுக்கமாட்டேன் என்று கூறிவிட்டேன்… வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், எதற்காக வாழ வேண்டும் என்பதற்கான கேள்விகளின் பதில் இருப்பதால் இப்படம் நல்ல படம் என்பேன்… சில முயற்சிகள் எடுத்திருக்கிறான்… மிகச்சிறந்த படம் என்று சொல்வதற்கில்லை.
ஒரு பெண்ணின் உணர்வு நிலையில் ஏற்படும் குழப்பநிலை இது காதலா.. இல்லை காமமா என்கின்ற குழப்பத்தை பதிவு செய்திருக்கிறான்… இசையில் நூறு மார்க் வாங்குபவர்கள் எப்பொழுதும் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் தான். நான் இளையராஜா ஐயாவிடம் இருந்து சண்டை போட்டு வந்ததற்குப் பின்னர் 6 ஆண்டுகளாக இசையை கற்று வருகிறேன்… இப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்டதும் ஏற்றுக் கொண்டு இசையமைத்து இருக்கிறேன்…. என் இசைக்கு 35 மதிப்பெண் கொடுக்கலாம் என்று நம்புகிறேன்… தம்பி படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஓடும்… நன்றாக இல்லை என்றால், ஓடாது… பரவாயில்லை. தொடர்ச்சியாக நீ ஓடு… தோல்வி என்பது ஒன்றுமே இல்லை. நீ தொடர்ச்சியாக ஓடிக் கொண்டே இரு.. இந்த நிகழ்விற்கு வந்த அனைவருக்கும் நன்றி என்று பேசினார்.
- நடிகை பூர்ணா துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- சில தினங்களுக்கு இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
தமிழில் பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அருள்நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடி வீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா, துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில தினங்களுக்கு நடிகை பூர்ணாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்தார். பூர்ணா - ஷனித் அசிப் அலி தம்பதியினருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் பூர்ணா - ஷனித் அசிப் அலி தம்பதி குழந்தையின் பெயரை சமூக வலைத்தளத்தின் வாயிலாக அறிவித்துள்ளனர். அதன்படி குழந்தைக்கு ஹம்டன் ஆசிப் அலி என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நடிகை பூர்ணா துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- சில தினங்களுக்கு முன்பு பூர்ணா வளைகாப்பு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
தமிழில் பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அருள் நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடி வீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா, துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில தினங்களுக்கு முன்பு பூர்ணா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்ததையடுத்து வளைகாப்பு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
குழந்தையுடன் பூர்ணா
இந்நிலையில் நடிகை பூர்ணாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் மருத்துவமனையில் கையில் குழந்தையை ஏந்தியபடி மருத்துவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பூர்ணா - ஷனித் அசிப் அலி தம்பதியினருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- தசரா திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
- இதில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகை பூர்ணா, ஷனித் அசிப் அலி என்ற துபாய் தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகிற்குத் தற்காலிக ஓய்வு கொடுத்துள்ளார். தற்போது கர்ப்பமாக இருக்கும் பூர்ணா, இந்த ரமலான் மாதத்தில் தன் குழந்தையின் வரவை எதிர்பார்த்து காத்திருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர் சமீபத்தில் வெளியான தசரா திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷிற்காக தான் நடித்ததாக அவர் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், இதுபோன்ற சிறந்த திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் உணர்கிறேன். தசரா படக்குழுவினர் உடனான அனைத்து ஜாலியான தருணங்களையும் மிஸ் செய்கிறேன். ஆனாலும் நான் கீர்த்திக்காக இந்தப்படத்தில் நடிக்க விரும்பினேன் என்று கூறியிருக்கிறார்.
- சில தினங்களுக்கு முன்பு நடிகை பூர்ணா துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- இவர் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்ததையடுத்து வளைகாப்பு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
தமிழில் பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அருள் நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடி வீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா, சமீபத்தில் துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
பூர்ணா
சில தினங்களுக்கு முன்பு பூர்ணா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்ததையடுத்து வளைகாப்பு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது புதிய போட்டோஷுட் நடத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ள பூர்ணா, "வாழ்க்கையின் மிகப் பெரிய அதிசயம், உங்களுக்குள் உயிர் வளர்வதுதான்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.
- கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பூர்ணா.
- சில தினங்களுக்கு முன்பு துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தமிழில் பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அருள் நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடி வீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா, சமீபத்தில் துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன்பு பூர்ணா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் வளைகாப்பு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "என் வாழ்வின் மிகச் சிறந்த தருணம். என் குழந்தைக்கும் எனக்கும் நீங்கள் அளித்த ஆசிர்வாதத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
- முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பூர்ணா.
- கடந்த 2020-ல் பூர்ணா திருமண மோசடி கும்பலிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பானது.
தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா மலையாளம், தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு துபாய் தொழில் அதிபருடன் பூர்ணாவுக்கு திருமணம் நடந்தது.
கடந்த 2020-ல் பூர்ணா திருமண மோசடி கும்பலிடம் சிக்கியது பரபரப்பானது. அப்போது பூர்ணாவை ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு துபாயில் நகைக்கடை வைத்து இருப்பதாகவும், பூர்ணாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். பின்னர் சிலர் பூர்ணாவை பெண் கேட்டு அவரது வீட்டுக்கும் சென்றனர். அதன்பிறகு பூர்ணாவிடம் பணம் கேட்டும், தங்க கடத்தலில் ஈடுபடும்படியும் மிரட்டினர்.
இதுகுறித்து பூர்ணாவின் தாய் போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் விசாரணை நடத்தி ரபீக், முகமது செரீப், ரமேஷ், அஷ்ரப், ரகீம், அபுபக்கர் உள்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹனி வர்கீஸ் 10 குற்றவாளிகளையும் டிசம்பர் 12-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
- திரைத்துறையைச் சேர்ந்த பலர் கோல்டன் விசா பெற்று வருகின்றனர்.
- தற்போது நடிகர் விக்ரமிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.
ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.
விக்ரம்
இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு, சரத்குமார், கமல்ஹாசன், பாவனா ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர்.
பூர்ணா - விக்ரம் - ஷானித் ஆசிப் அலி
இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விக்ரமிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இதனை நடிகை பூர்ணா மற்றும் அவரது கணவர் ஷானித் ஆசிப் அலி வழங்கியுள்ளனர். இந்த புகைப்படத்தை பூர்ணா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பூர்ணா.
- சிலதினங்களுக்கு முன்பு துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தமிழில் பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அருள் நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடி வீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா, சில தினங்களுக்கு முன்பு துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நடிகர்-நடிகைகள் பலரும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது கணவருடன் துபாயில் குடியேறி இருக்கிறார்.
இந்நிலையில் பூர்ணாவுக்கு அவரது கணவர் விலை உயர்ந்த பொருட்களை திருமண பரிசாக வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. துபாயில் பெரிய சொகுசு வீடு ஒன்றை பூர்ணாவுக்கு பரிசாக கொடுத்துள்ளார். மேலும் 1,700 கிராம் தங்க-வைர நகைகளையும் பரிசாக வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
- கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பூர்ணா.
- திருமணம் குறித்த வதந்திக்கு நடிகை பூர்ணா ஒரு புகைப்படத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழில் 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. அதன்பின்னர் கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
பூர்ணாவுக்கு சில வாரங்களுக்கு முன்பு தொழில் அதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 'குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், எனது அடுத்த வாழ்க்கை பகுதிக்கு அடியெடுத்து வைக்கிறேன்' என்று அவர் தெரிவித்து இருந்தார்.
சமீபத்தில் பூர்ணாவின் திருமணம் நின்று விட்டதாக வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் பூர்ணா தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு "எப்போதும் என்னுடையவர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பூர்ணா- ஷானித் ஆசிப் அலியை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளார். தனது திருமணம் தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு, "சிறப்பு, நான் உலகின் மிக அழகான பெண்ணாக இல்லாமல் இருக்கலாம், அல்லது ஒரு நல்ல வாழ்க்கைத் துணையின் அனைத்து குணநலன்களையும் பெறாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் ஒருபோதும் என்னைக் குறைவாக உணரவில்லை.
நான் யார் என்பதற்காக நீங்கள் என்னை நேசித்தீர்கள், என்னை மாற்ற முயற்சிக்கவில்லை. என்னில் உள்ள சிறந்ததை வெளிக்கொணர நானே உழைக்க என்னை ஊக்கப்படுத்தினீர். இன்று, நம் நெருங்கிய சொந்தங்களுக்கு மத்தியில் நீங்களும் நானும் இந்த அற்புதமான ஒற்றுமை பயணத்தைத் தொடங்குகிறோம்.
இது கொஞ்சம் அதிகம் என்று எனக்குத் தெரியும், இன்ப துன்பத்தில் உங்களுடன் இருப்பேன் என்றும் எப்போதும் உங்கள் அன்புக்கு ஆதரவளிப்பதாகவும் உறுதியளிக்கிறேன் என பூர்ணா பதிவிட்டுள்ளார்.
- கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பூர்ணா.
- திருமணம் குறித்த வதந்திக்கு நடிகை பூர்ணா ஒரு புகைப்படத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழில் 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
பூர்ணாவுக்கு சில வாரங்களுக்கு முன்பு தொழில் அதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 'குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், எனது அடுத்த வாழ்க்கை பகுதிக்கு அடியெடுத்து வைக்கிறேன்' என்று அவர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பூர்ணாவின் திருமணம் நின்று விட்டதாக வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் திருமணம் ரத்தாகி விட்டது உண்மையா? என்று பூர்ணாவிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பூர்ணா தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு "எப்போதும் என்னுடையவர்" என்று குறிப்பிட்டு திருமண ரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எனது திருமணம் நிச்சயித்தபடி நடைபெறும் என்பதை உறுதிசெய்ய இந்த படம் போதுமா? என்று பூர்ணா கேட்பது போல் அவருடைய பதிவு உள்ளது. இதையடுத்து வலைத்தளத்தில் ரசிகர்கள் பூர்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.