என் மலர்
நீங்கள் தேடியது "வரையாடுகள்"
- தமிழகத்தில் தற்போது 3,122 வரையாடுகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது
- 5 ஆண்டுகளில் செயல்படுத்த ரூ.25.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உடுமலை
தமிழகத்தின் மாநில விலங்கு நீலகிரி வரையாடுகள். தமிழகத்தில் தற்போது 3,122 வரையாடுகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.அழிவின் விளிம்பில் இவை உள்ளன. அவற்றை மீட்கவும், எண்ணிக்கையை அதிகரிக்கவும் நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழக அரசு டிசம்பர் 2022ம் ஆண்டு அறிவித்தது.
இத்திட்டத்தை, 2022 - 2027 என, 5 ஆண்டுகளில் செயல்படுத்த ரூ.25.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் மூலம் அவற்றின் உண்மையான வாழ்விடங்கள் மீட்கப்பட உள்ளன. வரையாடுகள் தற்போது தமிழகம், கேரளாவில் பரவலாக உள்ளன. இதையடுத்து இரு மாநிலங்களிலும் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பை நடத்த வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி நவம்பர்மாதம் தென்மேற்கு பருவமழைக்குப் பிறகு மற்றும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் என தமிழக வனத்துறை இரு விதமாக, கணக்கெடுப்பை நடத்த திட்டமிட்டுள்ளது.