என் மலர்
நீங்கள் தேடியது "வி.இசட்.துரை"
- வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர் சி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தலைநகரம்-2'
- இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'தலைநகரம்-2'. இப்படத்தை அஜித்தின் 'முகவரி', சிம்புவின் 'தொட்டி ஜெயா', பரத்தின் 'நேபாளி', ஷாமின் '6 கேண்டில்ஸ்', சுந்தர்.சி நடித்த 'இருட்டு' ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கியுள்ளார். 'தலைநகரம்-2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் 'தலைநகரம்-2' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் நடிகர் பரத் பேசியதாவது, "என்னுடைய திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களைத் தந்த இயக்குனர்கள் எல்லாருக்கும் நன்றிகள். அதில் முக்கியமானவர் துரை சார். நேபாளி படத்தில் என்னை அவ்வளவு சிறப்பாக வடிவமைத்தார். அவர் அதிக நாட்கள் உழைத்த படம் நேபாளி.
அவர் வேலையில் டெரராக இருப்பார். அவரின் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் இருக்கும். அதனால் தான் 20 வருடத்திற்கும் மேலாக இயக்குனராக வலம் வருகிறார். சுந்தர் சி சாரின் படத்தில் நடிக்க ஆசை, இந்த மேடையைப் பயன்படுத்தி இங்கே உங்களிடம் வாய்ப்பு கேட்டுக்கொள்கிறேன். சுந்தர் சி சார் அட்டகாசமாக இந்தக் கதையில் பொருந்திப்போகிறார். இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும் வாழ்த்துக்கள் நன்றி" என்றார்.