என் மலர்
நீங்கள் தேடியது "வெஸ்பா"
- பியஜியோ வெஸ்பா GTV மாடலில் 300சிசி சிங்கில் சிலண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
- வெஸ்பா GTV மாடலில் கீலெஸ் ஸ்டார்ட் ஸ்டாப், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் உள்ளது.
பியஜியோ நிறுவனம் தனது சக்திவாய்ந்த வெஸ்பா ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வெஸ்பா GTV மாடல் முதற்கட்டமாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 2023 மாடலில் ஏராளமான மாற்றங்கள், சிறு அப்கிரேடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அதன்படி இந்த மாடலில் 300சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 23.4 ஹெச்பி பவர், 26 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ரெட்ரோ ஸ்கூட்டரில் ஃபுல் எல்இடி லைட்கள், மேட் பிளாக் டிசைன் செய்யப்பட்டு உள்ளது.
இத்துடன் அலாய் வீல்கள், எக்சாஸ்ட் கவர், கிராப்ரெயில், ரியர்வியூ மிரர்கள் மற்றும் ஃபூட்ரெஸ்ட் உள்ளிட்டவை மேட் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. புதிய வெஸ்பா GTV மாடலில் கீலெஸ் ஸ்டார்ட் ஸ்டாப், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
2023 பியஜியோ வெஸ்பா GTV மாடல் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. எனினும், இரண்டு மாடல்களும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான். இந்தியா இதுபோன்ற மாடல்களுக்கான சந்தை இல்லை என்பதே காரணம் என்று தெரிகிறது.