என் மலர்
நீங்கள் தேடியது "ஷிவானி"
- செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பம்பர்.
- இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
'8 தோட்டாக்கள்' மற்றும் 'ஜீவி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெற்றி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'பம்பர்'. இதில் ஷிவானி நாராயணன், ஜி.பி. முத்து, தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ் தியாகராஜா தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார்.
கேரள மாநில "பம்பர்" லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஜூலை 7ம் தேதி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.
- செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பம்பர்.
- இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
'8 தோட்டாக்கள்' மற்றும் 'ஜீவி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெற்றி தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் 'பம்பர்'. இதில் ஷிவானி நாராயணன், ஜி.பி. முத்து, தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ் தியாகராஜா தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார்.
கேரள மாநில "பம்பர்" லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் ஜூலை 7ம் தேதி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் வெற்றி பேசியதாவது, முதன்முறையாக நான் ஒரு பாடலுக்கு நடனம் ஆட முயற்சி செய்துள்ளேன். தொடர்ந்து திரில்லர் படம் மட்டும்தான் செய்கிறேன் என்று என் மீது ஒரு விமர்சனம் இருக்கிறது, இந்த படத்தில் அது மாறும் என்று நம்புகிறேன். இயக்குனர் கதையின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவர் நினைத்தது போலப் படம் வந்துள்ளது. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் அனைத்து பாடல்களும் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக இந்த படம் உங்களுக்குப் பிடிக்கும், படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
- செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பம்பர்.
- இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ளார்.
வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பம்பர். இந்த படத்தில் 8 தோட்டாக்கள் மற்றும் ஜீவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஷிவானி நாராயணன், ஜி.பி. முத்து, தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்திற்கு கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றியுள்ளார். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மு.காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.
வெற்றி - ஷிவானி
கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, திருவனந்தபுரம், புனலூர் மற்றும் சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
பம்பர் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகளும் விரைவில் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.