என் மலர்
நீங்கள் தேடியது "கே 13"
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 மாடல் அதிரடி தள்ளுபடியில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் ஐபோன் 13 மினி, ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் உள்ளன. புதிய ஐபோன் 13 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து பழைய ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் விலை பண்டிகை காலக்கட்டத்தின் போது அதிரடியாக குறைக்கப்பட்டன.
அதிக விலை காரணமாக ஐபோன் 13 மாடலை வாங்க பெரும்பாலானோர் ஆர்வம் செலுத்தாமல் இருந்தனர். இந்த நிலையில், புதிய ஐபோன் 13 வாங்க சரியான நேரம் வந்துள்ளது. தற்போது ஐபோன் 13 மாடல் ரூ. 24 ஆயிரம் வரை குறைந்த விலையில் கிடைக்கிறது.

ஆப்பிள் விற்பனையாளரான ஐஸ்டோர் இந்தியா ஆப்பிள் ஐபோன் 13 மாடலுக்கு அசத்தல் கேஷ்பேக் மற்றும் எக்சேன்ஜ் தள்ளுபடி வழங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 6 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை மாத தவணையில் ஐபோனை வாங்குவோருக்கும் வழங்கப்படுகிறது.
இத்துடன் பழைய ஐபோன்களை எக்சேன்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரை தள்ளுபடி பெற முடியும். அந்த வகையில் ஐபோன் 13 மாடலை கேஷ்பேக் மற்றும் எக்சேன்ஜ் சலுகை சேர்த்து ரூ. 55,900 விலையில் வாங்கிடலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் உற்பத்தி குறித்த புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 உற்பத்திக்கு தேவையான உபகரணங்களை ஒதுக்க ஐபேட் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ஆப்பிள் மேற்கொண்ட திட்டத்தில் தற்போது 50 சதவீத ஐபேட் யூனிட்களே உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆசிய சந்தைகளில் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டது, ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிக தட்டுப்பாடு போன்ற சூழ்நிலைகளிலும், மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஐபோன் 13 உற்பத்தி சீராக நடைபெற்று வந்தது. உற்பத்தி நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தம் மற்றும் அதிக யூனிட்களை வாங்கும் திறன் உள்ளிட்ட காரணங்களால் இது சாத்தியமானது.

வரும் மாதங்களில் ஐபேட் மாடல்களை விட ஐபோன் 13 மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என ஆப்பிள் எதிர்பார்க்கிறது. இதன் காரணமாகவே ஐபோன் 13 உற்பத்தியில் ஆப்பிள் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதுகுறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி தமிழரசு - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் `கே 13' படத்தின் முன்னோட்டம். #K13 #Arulnidhi #ShraddhaSrinath
எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர், சாந்த ப்ரியா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `கே 13'.
அருள்நிதி - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் காயத்ரி, யோகி பாபு, ரமேஷ் திலக், எருமைசாணி விஜய், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - அரவிந்த் சிங், இசை - சாம்.சி.எஸ்., படத்தொகுப்பு - ரூபன், ஒலி வடிவமைப்பு - டி.உதயகுமார், கலை - கமலநாதன், சண்டைப்பயிற்சி - சுதேஷ், நடனம் - அசார், ஆடை வடிவமைப்பு - பிரியங்கா, பிருத்விராஜன் சந்தோஷ், நிர்வாக தயாரிப்பு - சிவக்குமார்.எம்.கே., இணை தயாரிப்பு - கிஷோர் சம்பத் & தீஷாஸ்ரீ, தயாரிப்பு - எஸ்.பி.ஷங்கர் & சாந்த ப்ரியா, எழுத்து, இயக்கம் - பரத் நீலகண்டன்.

படம் பற்றி நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேசும் போது,
கே 13 என்பது கே பிளாக்கில் 13-ஆம் நம்பர் வீடு. ஆனால் அந்த வீட்டில் என்ன ஸ்பெஷல் என்பது தான் படத்தின் கதை. இது வெறும் அப்பார்ட்மண்ட் பெயர் அல்ல, கதாபாத்திரமாக பிரதிபலிக்கும். இந்த படத்தில் மலர்விழி என்ற கதாபாத்திரத்தில் ஒரு எழுத்தாளராக நடித்திருக்கிறேன். அருள்நிதி கதை உருவாக்குபவராக, படம் இயக்கும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். இது சாதாரணமாக நாம் பார்த்த திரில்லர் படம் போல் இல்லாமல் வித்தியாசமானதாக இருக்கும். படத்தின் டிரைலர் சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக அனைவரையும் கவரும்படியாக, ரசிகர்களை யோசிக்க வைக்கும் விதமாக இருப்பது சிறப்பு என்றார்.
படம் வருகிற மே 3-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #K13 #Arulnidhi #ShraddhaSrinath
கே 13 படத்தின் டீசர்:
பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியிருக்கும் `கே 13' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #K13 #Arulnidhi
அருள்நிதி நடிப்பில் `புகழேந்தி எனும் நான்', `கே 13' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. இதில் `கே 13' படத்தை பரத் நீலகண்டன் இயக்குகிறார். அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன், யோகி பாபு, ரமேஷ் திலக், எருமைசாணி விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
Mystery Unveils on May 1st in your Favourites Cinemas#K13FromMay1@sankarsp007@arulnithitamil@ShraddhaSrinath@dir_barath@kisham77@narentnb@AntonyLRuben@AravinndSingh@SamCSmusic@adhikravi@ur_rameshthilak@VijayVzOfficial@iYogiBabupic.twitter.com/EhDbgyFk8Y
— SP CINEMAS (@thespcinemas) April 19, 2019
சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா இந்த படத்தை தயாரித்துள்ளனர். #K13 #Arulnidhi #ShraddhaSrinath
பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் த்ரில்லர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #K13 #Arulnidhi
அருள்நிதி நடிப்பில் `புகழேந்தி எனும் நான்', `கே 13' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. இதில் `கே 13' படத்தை பரத் நீலகண்டன் இயக்குகிறார். அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். யோகி பாபு, ரமேஷ் திலக், எருமைசாணி விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் பரத் கூறுகையில், "ஆதிக் மிகவும் ஜாலியான மனிதர், ஆனால் அதற்கு நேர்மாறாக, இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க நேர்ந்தது. எனினும், அவர் மிகச்சிறப்பாக நடித்துக் கொடுத்தார். படத்தில் அவரது பகுதி பார்வையாளர்களை பெரிதும் கவனிக்க வைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
#K13 Teaser Countdown Starts !
— SP CINEMAS (@thespcinemas) March 10, 2019
Director @Adhikravi 👍 #K13Diaries@sankarsp007@arulnithitamil@ShraddhaSrinath@dir_barath@kisham77@narentnb@AntonyLRuben@AravinndSingh@ur_rameshthilak@VijayVzOfficial@DoneChannel1pic.twitter.com/rOse7sMkBh
சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கின்றனர். #K13 #Arulnidhi #ShraddhaSrinath #AdhikRavichandran
பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படத்திற்கு தலைப்பு வைத்து பர்ஸ்ட்லுக் வெளியிட்டிருக்கிறார்கள். #K13
அருள்நிதி தற்போது பரத் நீலகண்டன் இயக்கத்தில் நடித்துள்ளார். இதில் அருள்நிதிக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘கே 13’ (K13) என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.
இப்படத்தின் தலைப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி இயக்குனர் பரத் கூறும்போது, ‘K13 ஒரு வீட்டின் முகவரி, அது இந்த படத்தின் கதையுடன் மிகவும் நெருங்கிய தொடர்பை உடையது. சில வரம்புகளுக்கு உட்பட்டு, படத்தை பற்றி நாங்கள் இப்போது எதுவும் சொல்ல முடியாது. பார்வையாளர்களே படத்தை பார்த்து அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்.
K13 ஒரு இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்து பார்க்கும் வகையிலான ஒரு திரில்லர் படமாக இருக்கும். நாயகன், நாயகி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களும் மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அவர்களை இதில் நடிக்க தேர்ந்தெடுத்ததற்கான காரணம், அவர்கள் இருவருமே சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். மேலும் தங்கள் படம் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும், உடனடியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க அவசரம் காட்டாதவர்கள். நல்ல கதைக்காக எவ்வளவு காலமும் காத்திருப்பவர்கள்" என்றார்.

இந்த K13 படத்தை எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்தா பிரியா தயாரிக்கிறார்கள். கிஷோர் சம்பத் மற்றும் டெஸாஸ்ரீ டி இணை தயாரிப்பு. தர்புகா சிவா இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை டிசம்பர் 13ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறைக்கு எழும்பூர் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #Sasikala #ForeignExchangeCase #EgmoreHighCourt
சென்னை:
ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு 1996-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் கோர்ட்டு முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, உடல் நலம் காரணமாக நேரில் ஆஜராக முடியாமல் போனது.
இந்நிலையில், அன்னிய செலாவணி மோசடி வழக்கில், மறு குற்றச்சாட்டு பதிவுசெய்ய வரும் 13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. #Sasikala #ForeignExchangeCase #EgmoreHighCourt