என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 16
நீங்கள் தேடியது "எப் 16 போர் விமானம்"
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், எப்-16 ரக விமானத்தை இந்திய விமானி சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறுவதை திட்டவட்டமாக மறுப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீது இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. அதற்கு மறுநாள், இந்திய-பாகிஸ்தான் போர் விமானங்கள் ஒன்றுக்கொன்று சண்டையில் ஈடுபட்டன. அப்போது, இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தன், பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. அபிநந்தனுக்கு நேற்று முன்தினம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
இந்தநிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், எப்-16 ரக விமானத்தை இந்திய விமானி சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறுவதை திட்டவட்டமாக மறுக்கிறோம். எங்கள் விமானம் எதுவும் சுட்டு வீழ்த்தப்படவில்லை. இது அடிப்படையற்றது. எப்-16 ரக போர் விமானங்களை கணக்கெடுத்து, சர்வதேச நிபுணர்களும், அமெரிக்க அதிகாரிகளும் இதை அப்போதே உறுதிப்படுத்தி உள்ளனர். நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் என்று காட்டவே அந்த விமானியை விடுதலை செய்தோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...பாகிஸ்தான் கோர்ட்டில் ஆளும் கட்சி பெண் தலைவரை அடித்து, உதைத்த வக்கீல்கள்
வான் மோதலின் போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. #PakistanF16 #IndianAirForce
பாலகோட்டில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் பிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை இடையே மோதல் நேரிட்டது. அப்போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என இந்திய விமானப்படை தெரிவித்தது. அந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட அம்ரான் ஏவுகணையின் சிதைவு பாகங்களையும் வெளியிட்டது. ஆனால் பாகிஸ்தான் மறுத்தது.
எப்.16 ரக போர் விமானம் என்பதை உறுதியாக கூறிய இந்தியா, அமெரிக்காவிற்கும் ஆதாரங்களை அனுப்பி வைத்தது. எப்16 ரக போர் விமானத்தை உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால் பாகிஸ்தான் ஒப்பந்த விதிகளை மீறியது என குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் “ஃபாரீன் பாலிசி” என்ற செய்தி இதழ், அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்தில் பாகிஸ்தான் வசம் உள்ள எப். 16 ரக விமானங்கள் எத்தனை உள்ளது என்பதை எண்ணி பார்த்ததாகவும், இதில், அமெரிக்காவால் வழங்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையில் எதுவும் குறையவில்லை என செய்தி வெளியிட்டது. இதனை இந்திய விமானப்படை மறுத்துள்ளது.
“இரு தரப்பு மோதலின் போது மிக் 21 விமானம், பாகிஸ்தானின் எப் 16 விமானத்தை நவ்சேகரா செக்டாரில் சுட்டு வீழ்த்தியது,” என இந்திய விமானப்படை ஸ்திரமாக கூறியுள்ளது. பாகிஸ்தான் விமானப்படையின் ரேடியோ தகவல் தொடர்பை இடைமறிப்பு செய்ததில் அந்நாட்டின் எப். 16 விமானம் ஒன்று நிலைக்கு திரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #PakistanF16 #IndianAirForce
இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்த எப்-16 விமானத்தை பயன்படுத்தவில்லை என பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது.
இஸ்லாமாபாத்:
இந்திய போர் விமானங்கள், பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாமை தாக்கியதற்கு மறுநாள், இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இதற்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எப்-16 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது.இந்நிலையில், இதை பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது. அதன் செய்தித்தொடர்பாளர் ஆசிப் காபூர் கூறியதாவது:-
கடந்த மாதம் 26-ந் தேதி, இந்திய போர் விமானங்கள், பாகிஸ்தான் வான் பகுதிக்குள் ஊடுருவி வந்து குண்டுகளை போட்டன.
ஆனால், உயிரிழப்போ, உள்கட்டமைப்புக்கு எவ்வித சேதமோ ஏற்படவில்லை. இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்த நாங்கள் எப்-16 விமானத்தை பயன்படுத்தவில்லை. நாங்கள் பயன்படுத்தியது, சீனாவுடன் இணைந்து தயாரித்த ஜேஎப்-17 ரக விமானங்களைத்தான். இந்த விமானங்களை பயன்படுத்தியது பற்றி அமெரிக்காவிடம் தெரிவித்து விட்டோம். எங்களின் தற்காப்புக்கு எது சரியோ, அதை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

×

X