என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » டிசம்பர் 22
நீங்கள் தேடியது "டிசம்பர் 22"
வரும் 22-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் என ஐகோர்ட் மதுரைக் கிளையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று தெரிவித்தனர். #JactoGeo #Protest
மதுரை:
பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். 7-வது ஊதிய குழுவின் 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதற்கிடையே, மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகளின் யோசனையை ஏற்று வேலை நிறுத்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மதுரை ஐகோர்ட் கிளையில் வேலைநிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற உறுதிமொழியை நீதிமன்றத்திலிருந்து ஜாக்டோ ஜியோ இன்று திரும்பப் பெற்றது.
இதுதொடர்பாக அந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறுகையில், திட்டமிட்டபடி ஜனவரி 22ம் தேதி எங்களது வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசுத்தரப்பு அவகாசம் மட்டுமே கோருகிறது என தெரிவித்துள்ளது.
ஜாக்டோ-ஜியோ, அரசுத்தரப்பு வாதத்தை தொடர்ந்து, மதுரை ஐகோர்ட் கிளை இந்த வழக்கை ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. #JactoGeo #Protest
தலைநகர் டெல்லியில் வரும் 22ம் தேதி 31-வது ஜிஎஸ்டி குழு கூட்டம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. #GST #GSTCouncilMeet
புதுடெல்லி:
நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த வருடம் ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.
இதன்மூலம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201812071650246784_1_gsti-1._L_styvpf.jpg)
இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குழுவின் 31-வது கூட்டம் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #GST #GSTCouncilMeet
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 22-ம் தேதி டெல்லி செல்கிறார். #EdappadiPalaniswamy #Delhi
சென்னை:
கஜா புயல் நேற்று முன்தினம் அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை மறுநாள் (20-ம் தேதி) பார்வையிட உள்ளேன் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 22ம் தேதி டெல்லி செல்கிறார்.
டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி, கஜா புயல் குறித்த சேத விவர அறிக்கையை மத்திய அரசிடம் அளித்து நிவாரண நிதி கோர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #EdappadiPalaniswamy #Delhi
இந்தியாவில் ஐடெல் நிறுவனம் விலை குறைந்த ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது ஹெச்.டி. பிளஸ் ஃபுல் ஸ்கிரீன் கொண்ட விலை குறைந்த மாடலாக அமைந்துள்ளது. #Smartphones
சீனாவைச் சேர்ந்த டிரான்சிஷன் ஹோல்டிங்கின் ஐடெல் இந்தியாவில் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
ஐடெல் ஏ22, ஏ22 ப்ரோ மற்றும் ஏ45 என்ற பெயர்களில் அறிமுகமாகி இருக்கிறது. மூன்று புதிய ஸ்மார்ட்போன்களிலும் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐடெல் ஏ45 மாடலில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
ஐடெல் ஏ22 சீரிஸ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 210 சிப்செட், ஏ45 மாடலில் மீடியாடெக் MT6739 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஏ22 மற்ரும் ஏ45 மாடல்களில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் (கோ எடிஷன்) மற்றும் ஏ22 ப்ரோ மாடலில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201808221121527889_1_Itel-A45-Blue._L_styvpf.jpg)
ஐடெல் ஏ45 சிறப்பம்சங்கள்:
- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739WA 64-பிட் பிராசஸர்
- பவர் விஆர் ரோக் GE8100 GPU
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 5 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- விஜிஏ இரண்டாவது கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2700 எம்.ஏ.ஹெச். பேட்டரி
![](https://img.maalaimalar.com/InlineImage/201808221121527889_2_Itel-A-series._L_styvpf.jpg)
ஐடெல் ஏ22 / ஏ22 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 5-இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 டிஸ்ப்ளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் குவவால்காம் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர்
- அட்ரினோ 304 GPU
- 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி - ஏ22
- 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி - ஏ22 ப்ரோ
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) - ஏ22
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ - ஏ22 ப்ரோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 5 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ்
- 2 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2400 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ஐடெல் ஏ45 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஆந்த்ராசைட் கிரே மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஐடெல் ஏ45 விலை ரூ.5,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐடெல் ஏ22 மாடல் ஸ்பேஸ் கிரே, ஷேம்பெயின் கோல்டு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது, இதன் விலை ரூ.5,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐடெல் ஏ22 ப்ரோ போர்டாக்ஸ் ரெட், ஷேம்பெயின் கோல்டு மற்றும் மேட் பிளாஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.6,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று புதிய ஐடெல் ஸ்மார்ட்போன்களும் ஆஃப்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றுக்கு உடனடி கேஷ்பேக் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் ரூ.2,200 மதிப்புடைய கேஷ்பேக் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.
×
X