என் மலர்
முகப்பு » ஐபோன் XR
நீங்கள் தேடியது "ஐபோன் XR"
சர்வதேச சந்தையில் ஆப்பிள் ஐபோன் மாடல்களின் விற்பனை குறைந்திருப்பதை தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களின் விலையை குறைக்கிறது. #iPhoneXR
சீனாவில் சில ஐபோன் மாடல்களின் விலையை குறைக்க ஆப்பிள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் XR, ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் உள்ளிட்ட மாடல்களின் விலையை குறைக்க ஆப்பிள் நிறுவனம் சீன ஐபோன் விற்பனையாளர்களுக்கு தகவல் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
விலை குறைக்கப்பட்ட ஐபோன் மாடல்களில் ஐபோன் XR மாடலுக்கு அதிகபட்சமாக 66 டாலர்கள் வரை குறைக்கப்பட்டுள்ளது. மற்ற ஐபோன் மாடல்களுக்கு 59 டாலர்கள் குறைக்கப்பட்டுள்ளது.
விற்பனை குறைவு மற்றும் சாதனங்களுக்கான மோகம் குறைவந்திருப்பதைத் தொடர்ந்து ஐபோன்களின் விலையை குறைப்பது ஆப்பிள் நிறுவனத்திற்கு சரியான முடிவாகவே பார்க்கப்படுகிறது. விலை குறைப்பு தவிர பை-பேக் சலுகைகள் மற்றும் இதர வகைகளில் தள்ளுபடி வழங்க அந்நிறுவனம் முயற்சிப்பதாக தெரிகிறது.
மேலும் ஆப்பிள் நிறுவனம் இதுபோன்ற சலுகைகளை தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவிக்கிறது. அந்த வகையில் ஐபோன் XR விலை 449 டாலர்கள் முதல் என்றும் ஐபோன் XS 699 டாலர்கள் விலையில் துவங்குகிறது. முன்னதாக இந்த ஐபோன்களின் விலை முறையே 699 டாலர்கள் மற்றும் 999 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
புதிய ஐபோன்களின் விற்பனை துவங்கியது முதல் ஐபோன் XR பிரபல மாடலாகவும், அதிகம் விற்பனையாகும் மாடலாகவும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் ஐபோன்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்தியா மற்றும் இதர நாடுகளில் விலை குறைப்பு சார்ந்த அறிவிப்பு வெளியாகுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த புத்தம் புதிய ஐபோன் XR முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கி இருக்கிறது. #iPhoneXR
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XR மாடல்களை கடந்த மாதம் அறிமுகம் செய்த நிலையில், இவற்றின் முன்பதிவு இந்தியாவில் துவங்கியுள்ளது.
புதிய ஐபோன் மாடல்கள் அக்டோபர் 26-ம் தேதி முதல் இந்தியா உள்பட 50 நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் புதிய ஐபோன் XR 64 ஜி.பி. மாடல் ரூ.76,900, 128 ஜி.பி. விலை ரூ.81,900 மற்றும் 256 ஜி.பி. விலை ரூ.91,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் XR மாடல் அமேசான் வலைதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்த தளத்தில் முன்பதிவு செய்வோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5 சதவிகிதம் உடனடி தள்ளுபடி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இதேபோன்று ஏர்டெல் ஆன்லைன் தளத்திலும் புதிய ஐபோன் முன்பதிவு நடைபெறுகிறது. அந்த வகையில் பயனர்கள் ரூ.14,999 முன்பணம் செலுத்தி மீதித்தொகையை ரூ.3,499 என்ற வகையில் 24 மாதத்திற்கு செலுத்தலாம். இத்துடன் ஒவ்வொரு மாதமும் 10 ஜி.பி. டேட்டா, மற்றும் மூன்று மாதங்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும் ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் சந்தா எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. ஏர்டெல் ஆன்லைன் தளத்தில் எளிய மாத தவணை முறை வசதி, பில்ட்-இன் போஸ்ட்பெயிட் சலுகையில் அன்லிமி்ட்டெட் காலிங் மற்றும் பிரீமியம் தரவுகள் கொண்டிருக்கிறது.
இத்துடன் பேடிஎம் மால் தளத்தில் முன்பதிவு செய்து ரூ.7,000 எக்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் XR விற்பனை விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் XR சிறப்பம்சங்கள்:
- 6.1 இன்ச் 1792x828 பிக்சல் எல்.சி.டி. 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
- 6-கோர் ஏ12 பயோனிக் 64 பிட் 7 என்.எம். பிராசஸர்
- 4-கோர் GPU, M12 மோஷன் கோ-பிராசஸர், நியூரல் என்ஜின்
- 3 ஜி.பி. ரேம்
- 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
- ஐ.ஓ.எஸ். 12
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
- டூயல் சிம் (நானோ+இரண்டாவது இசிம் அல்லது சீனாவில் பிரத்யேக சிம் ஸ்லாட்)
- 12 எம்பி வைடு-ஆங்கிள் பிரைமரி கேமரா, f/1.8, ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ட்ரூ டோன் ஃபிளாஷ்
- 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
- ட்ரூ டெப்த் கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்
- 2942 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்
- ஃபாஸ்ட் சார்ஜிங்
ஆப்பிள் ஐபோன் XR மாடல் வைட், பிளாக், புளு, எல்லோ, கோரல் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி புதிய ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. #iPhoneXS #iPhoneXSMax
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது. புதிய ஐபோன் மாடல்கள் உலகம் முழுக்க 30-க்கும் அதிகமான நாடுகளில் இன்று முதல் முன்பதிவு செய்யப்படுகிறது.
ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. மேலும் சில நிறங்கள் மற்றும் ஸ்டோரேஜ் வேரியன்ட்கள் ஏற்கனவே கிடைக்கிறது.
பிளிப்கார்ட் தளத்தில் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ.13,500 வரை தள்ளுபடி, வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5% தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
பிளிப்கார்ட் போன்றே ஏர்டெல் ஆன்லைன் வலைத்தளத்திலும் புதிய ஐபோன்களுக்கான முன்பதிவுகள் துவங்கி இருக்கிறது. ஏர்டெல் ஸ்டோரில் இருந்து ஐபோனினை வெளியீட்டு தினத்தன்றே பெறும் வசதியும், செப்டம்பர் 28-ம் தேதி மாலை 6.00 மணி முதல் டோர் டெலிவரி வசதியும் வழங்கப்படுகிறது.
இதேபோன்று ஜியோவின் ஆன்லைன் ஸ்டோரிலும் புதிய ஐபோன்களுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளது. ஜியோ தளத்தில் முன்பதிவு செய்வோருக்கு ஐபோன் வெளியீட்டுக்கு பின் மூன்று முதல் ஐந்து நாட்களில் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களில் புதிய ஐபோன் மாடல்களை 12 மற்றும் 24 மாதங்களில் ஒரு மாத தவணை முறை வசிதயில் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை டிசம்பர் 31, 2018 வரை செல்லுபடி ஆகும்.
புதிய ஐபோன் மாடல்களின் விலை விவரம்:
ஆப்பிள் ஐபோன் XS 64ஜிபி – ரூ.99,900
ஆப்பிள் ஐபோன் XS 256ஜிபி – ரூ.1,14,900
ஆப்பிள் ஐபோன் XS 512ஜிபி – ரூ.1,34,900
ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் 64ஜிபி – ரூ.1,09,900
ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் 256ஜிபி – ரூ.1,24,900
ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் 512ஜிபி – ரூ. 1,44,900
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மாடல்களின் பேட்டரி மற்றும் ரேம் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. #iPhoneXS
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. வழக்கம் போல் ஆப்பிள் நிறுவனம் இம்முறையும் புதிய ஐபோன்களின் பேட்டரி மற்றும் ரேம் சார்ந்த விவரங்களை வழங்கவில்லை. இந்த விவரங்கள் சான்றளிக்கும் வலைத்தளங்கள் அல்லது டியர்டவுன் வீடியோக்களில் தெரியவந்துள்ளது.
அந்த வகையில் புதிய ஐபோன்களின் விவரங்கள் இம்முறை சீனாவின் TENAA வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன் X மாடலில் 2716 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருந்தது.
5.8 இன்ச் ஐபோன் XS மாடலில் 2658 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், 6.5 இன்ச் ஐபோன் XS மேக்ஸ் மாடலில் 3174 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஐபோன்களிலும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 6.1 இன்ச் ஐபோன் XR மாடலில் 2942 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்மாபர்ட்போனின் வன்பொருள் விவரங்கள் ஐஃபிக்சிட் அல்லது டெக்இன்சைட்ஸ் டியர்டவுன் மூலம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்கள் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகிறது. ஐபோன் XS விலை ரூ.99,900 மற்றும் ஐபோன் XS மேக்ஸ் விலை ரூ.1,09,900 முதல் துவங்குகிறது. ஐபோன் XR விலை ரூ.76,900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 26-ம் தேதி முதல் கிடைக்கும்.
×
X