search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10kgsgold"

    பூட்டானில் இருந்து கடத்திவந்த ரூ.3.18 கோடி மதிப்பிலான 10 கிலோ தங்கத்தை மேற்கு வங்காளம் மாநிலத்தில் வருவாய்துறை புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #10kgsgold #goldsmuggled
    புதுடெல்லி:

    சர்வதேச அளவில் நாளுக்குநாள் தங்கத்தின் விலை ஏறிகொண்டே வரும் நிலையில், இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரித்துகொண்டு வருகிறது. இதனால், வெளிநாடுகளில் இருந்து பல்வேறு வழிகளில் தங்கம் கடத்திவரும் நபர்களின் எண்ணிக்கையும் பெருகி கொண்டே வருகிறது.

    இந்நிலையில், பூட்டானில் இருந்து  ஜைகான் - புனேட்ஷோல்லிங் எல்லை வழியாக பீகார் மாநிலத்துக்கு தங்கம் கடத்தப்படுவதாக மத்திய அரசின் வருவாய்துறை புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையொட்டி, மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள சிலிகுரி மாவட்டத்தில் வருவாய்துறை புலனாய்வு அதிகாரிகள் தீவிரமான வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  

    ஃபுல்பாரி என்னும் இடத்தில் வேகமாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்ட அதிகாரிகள் அந்த காரினுள் இருந்த தலா ஒரு கிலோ எடையுள்ள 10 தங்க கட்டிகளை பறிமுதல் செய்ததுடன், கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்துள்ளனர். #10kgsgold #goldsmuggled 
    ×