search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10th Class General Examination"

    • 17 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்தது
    • கல்வித்துறை அறிவிப்பிற்கு பிறகு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 9,319 மாணவர்கள், 8,968 மாணவிகள் என மொத்தம் 18,287 பேர் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.

    இதில் 8,163 மாணவர்கள், 8,541 மாணவிகள் என மொத்தம் 16,704 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 87.60 சதவீதம் பேரும், மாணவிகள் 95.24 சதவீதம் பேரும் என மொத்தம் 91.34 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் 59 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. இதில் 23 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    கடந்த ஆண்டு வேலூர் மாவட்டம் 79.80 சதவீதம் தேர்ச்சி பெற்று 38-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு தேர்வு முடிவில் 91. 34 சதவீதம் தேர்ச்சி பெற்று 17 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் அளிப்பது குறித்து அறிவிப்பு வரவில்லை.

    கல்வித்துறை அறிவிப்பிற்கு பிறகு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்தார்.

    • நடப்புக் கல்வி ஆண்டிற்கான (2022-2023) 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கியது.
    • இத்தேர்வு மையங்களில் 22,599 மாணவர்கள், 21,965 மாணவிகள் என மொத்தம் 44,564 தேர்வர்கள் பொதுத் தேர்வினை எழுதுகின்றனர்.

    சேலம்:

    நடப்புக் கல்வி ஆண்டிற்கான (2022-2023) 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 189 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 179 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காக வும், 10 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மையங்களில் 22,599 மாணவர்கள், 21,965 மாணவிகள் என மொத்தம் 44,564 தேர்வர்கள் பொதுத் தேர்வினை எழுதுகின்றனர்.

    தடையில்லா மின்சாரம்

    இத்தேர்வுகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் வகையில் 28 வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், 37 வழித்தட அலுவலர்கள், 189 முதன்மை கண்காணிப் பாளர்கள், 189 துறை அலுவலர்கள், 3430 அறை கண்காணிப் பாளர்கள், 210 ஆசிரிய ரல்லா பணியாளர்கள் மற்றும் தேர்வுமையங்களை கண்காணிக்கும் பொருட்டு முதுகளை, பட்டதாரி ஆசிரியர்கள் நிலையில் 250 ஆசிரியர்கள் பறக்கும் படைக்குழுக்களாகவும் என பல்வேறு நிலைகளிலும் தேர்வு பணிகளைக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள், விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்கள் மற்றும் தேர்வு மையங்க ளுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் நியமிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்வு மையங்களில் தடையில்லா மின்சார வசதிகள் வழங்கிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சமூக அறிவியல் தேர்வு

    5-வது நாளான இன்று அறிவியல் பாட தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விைன மாணவ- மாணவிகள் உற்சாகமாக எழுதினர். தொடர்ந்து வருகின்ற 20-ந்தேதியுடன் (வியாழக்கிழமை) 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைகிறது. கடைசி நாளான அன்று சமூக அறிவியல் பாட தேர்வு நடக்கிறது.

    இந்த பாடத்தை படிக்கும் வகையில் மாணவ- மாணவிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (19-ந்தேதி) ஆகிய 2 நாட்கள் விடுமுைற விடப்பட்டுள்ளது.

    முழுவாண்டு விடுமுறை

    வருகிற 20-ந்தேதி மதியம் 1.15 மணி அளவில் தேர்வு முடிவடைந்ததும், மாணவ- மாணவிகளுக்கு முழுவாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது.

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோப்புப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
    • தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகதினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை கல்வி மாவட்டத்தில் உள்ள தோப்புப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்று 2021-22-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 31 மாணவ-மாணவிகள் எழுதினர்.

    இதில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தனர். இதனால் தோப்புப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.

    இதனையடுத்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளை தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினர்.

    இதோபோல் கவுந்தப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் பொதுத்தேர்வை 221 மாணவிகள் எழுதினர். இதில் 219 மாணவிகள் தேர்ச்சி பெற்று 99 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    பள்ளியில் 600-க்கு 584 மதிப்பெண் ஒரு மாணவி பெற்றுள்ளார். 500-க்கும் மேல் 44 மாணவிகள் பெற்று ள்ளனர். வணிகவியல் பாடத்தில் 2 பேரும், கணினி தொழில் நுட்பத்தில் ஒருவரும், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் 2 பேரும், கணக்குபதிவியல் 2 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இதேபோல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 200 மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 192 பேர் தேர்ச்சி பெற்று 96 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 196 மாணவர்கள் எழுதினர். இதில் 189 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 160 மாணவர்கள் எழுதினர். இதில் 128 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகதினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

    • 10-ம் வகுப்புபொது தேர்வு முடிவுகள் வெளியானது. கடலூர் மாவட்டத்தில் 89.60 சதவீதம் பேர் தேர்ச்சி ெபற்றுள்ளனர்.
    • கடலூர் மாவட்டத்தில் 231 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் 15,227 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். கடலூர் மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் இன்று 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 34,391 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 17,834 பேரும், மாணவிகள் 16,557பேரும் அடங்குவர்.இன்று வெளியான தேர்வு முடிவுகளில் 30,816 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அதாவது மாணவர்கள் 15,274 பேரும், மாணவிகள் 15,542 பேரும் வெற்றி பெற்று உள்ளனர். தேர்ச்சி விகிதம் 89.60 சதவீதம் ஆகும்.

    கடலூர் மாவட்டத்தில் 231 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் 15,227 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியானதில் 12,877 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி விகிதம் 84.57 சதவீதம் ஆகும். கடலூர் மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர்.

    ×