என் மலர்
நீங்கள் தேடியது "1380 kg gold seize"
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ஆவடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் 1381 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். #LoksabhaElections2019 #ECflyingsquad
திருவள்ளூர்:
பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது.
தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் இன்று நடத்திய சோதனையில், ஆவடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உரிய ஆவணங்களின்றி 1,381 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்த தங்கம் பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.#LoksabhaElections2019 #ECflyingsquad