search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "14 LAKHS"

    • 8 பேருக்கு ரூ.14 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது
    • கூடுதல் வட்டி வழங்க மறுத்த வங்கி

    அரியலூர்

    சேவை குறைபாடு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் 8 பேருக்கு வட்டி மற்றும் இழப்பீடாக ரூ.14 லட்சம் வழங்க வேண்டும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

    ரூ.4 கோடிடெபாசிட்

    சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் டி.விஜயலலிதா குமாரி. இவர், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பணியாளர். இவரிடம் சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் வங்கியின் கிளை மேலாளர், தங்கள் வங்கியில் டெபாசிட் செய்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வட்டி தொகையை விட முன்னாள் ஊழியர் என்ற அடிப்படையில் ஒரு சதவீத வட்டி கூடுதலாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதை நம்பிய விஜயலலிதா குமாரி தனது குடும்ப உறுப்பினர்களுடன் தன்னையும் சேர்ந்து 8 பேரின் வங்கி கணக்கில் ரூ.4 கோடியை டெபாசிட் செய்துள்ளார். இதற்கு வங்கியிலிருந்து கூடுதல் வட்டி தருவதாக தெரிவித்து டெபாசிட் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது.

    ஒரு சதவீத வட்டி வழங்க முடியாது

    ஆனால், கடந்த 2016 செப்டம்பர் மாதம் முதல், டெபாசிட் தொகைகளுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட ஒரு சதவீத வட்டியை வழங்க முடியாது என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளர். இதனால் அதிர்ச்சியடைந்த 8 பேரும், வங்கி ஒப்புக்கொண்ட வட்டி விகிதத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு தனித்தனியே வழக்கு தாக்கல் செய்தனர்.இந்த 8 வழக்குகளும் கடந்த ஜூலை மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.

    4 வார காலத்துக்குள் வழங்க வேண்டும்

    இந்த வழக்கை விசாரணை மேற்கொண்ட வந்க மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு, கூடுதலாக வட்டி தருவதாக வங்கி அளித்த வாக்குறுதியின் காரணமாக டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஒப்புக்கொண்ட வட்டி விகிதத்தை தன்னிச்சையாக குறைத்தது சேவை குறைபாடு.

    இதனால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 நபர்களுக்கும் வங்கி ஒப்புக்கொண்டு டெபாசிட் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி கூடுதல் வட்டி தொகை ரூ.11.50 லட்சமும், சேவை குறைபாடு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2.50 லட்சமும் 4 வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    ×