search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "150 விக்கெட்"

    டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ரூதர்போர்ட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ஆவார்.
    புதுடெல்லி:

    ஐபிஎல் போட்டிகளின் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.லீக் ஆட்டங்கள் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்து இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.

    இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

    நேற்று நடந்த குவாலிபையர்-2 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது.



    இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ரூதர்போர்டை ஹர்பஜன் சிங் அவுட்டாக்கினார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்த 4 வது வீரர் மற்றும் 3வது இந்திய வீரர் என்ற பட்டியலில் இணைந்தார்.

    ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் மும்பை அணியின் லசித் மலிங்கா 169 விக்கெட்டுகள் எடுத்து  முதலிடத்திலும், டெல்லி அணியின் அமித் மிஸ்ரா 156 விக்கெட் எடுத்து இரண்டாவது இடத்திலும், 150 விக்கெட் எடுத்த கொல்கத்தா அணியின் பியூஷ் சாவ்லாவுடன் ஹர்பஜன் சிங்கும் இணைந்துள்ளார்.
    பிரேசிலில் அணை உடைந்து 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 150 பேரை காணவில்லை. இவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. #Brazildam

    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் புரு மாடின்கோ நகரம் அருகே ஒரு தனியாருக்கு சொந்தமான இரும்புதாது சுரங்கம் உள்ளது. அங்கு ஒரு அணை பயன்படுத்தப்படாமல் இருந்தது. நேற்று இரவு அந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த அணை உடைந்தது.

    உடனே அதில் இருந்த தண்ணீரும், சேறும் வெள்ளமாக பெருக்கெடுத்து வெளியேறியது.

    இச்சம்பவத்தில் இரும்புதாது சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் தவிர 150 பேரை காணவில்லை. இவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.

    இலங்கையில் ஒரே இடத்தில் 150 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SriLanka #HumanSkeletons #Grave
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு சிங்கள ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் லட்சக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

    இந்த போரின் போது சிங்கள ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டுகிறது. மேலும் போரின் போது மாயமானவர்களின் நிலை என்ன என்பது குறித்து இலங்கை அரசு பதில் அளிக்கவேண்டுமென அந்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது.



    இந்த நிலையில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மன்னார் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் கட்டுமான பணிகளுக்காக குழி தோண்டியபோது பிணக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு மேலும் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய மாவட்டம் முழுவதும் குழி தோண்டும் பணிகள் தொடங்கியது.

    இந்த பணி நேற்று 79-வது நாளாக நீடித்தது. அப்போது அங்கு உள்ள ஒரு இடத்தில் குழி தோண்டியபோது அதில் 150 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 14 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது ஆகும். ஒரே குழியில் 150 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #SriLanka #HumanSkeletons #Grave 
    இந்தியாவில் தலைவிரித்தாடும் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க ஆங்கிலேயர் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்று காந்தியின் செயலாளர் கல்யாணம் கூறியுள்ளார். #GandhiJayanti150 #MahatmaGandhi #Bribe

    மதுரை:

    மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சி யகத்தில் மகாத்மா காந்தியின் 150-வது ஜெயந்தி விழா நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட காந்தியின் செயலாளர் கல்யாணம் மகாத்மா காந்தியுடனான பல்வேறு வரலாற்றுத் தகவல்களை மாணவ-மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

    நாட்டில் வாழும் ஏழை மக்களின் நலன்களை சுற்றியே காந்தியின் சிந்தனையும், பேச்சும், செயலும் இருந்தது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் மவுன விரதம் கடைபிடிப்பார்.

    ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது காந்தியை கொலை செய்வதற்கு 6 முறை முயற்சி நடந்தது. அவர்கள் காப்பாற்றிக் கொடுத்த காந்தியை நாம் விடுதலை பெற்ற 5 1/2 மாதங்களில் இழந்தோம்.


    சுதந்திரத்துக்கு பின்னர் தான் இந்தியாவில் லஞ்சம், ஊழல் வரத்தொடங்கியது. தற்போது அது தலை விரித்தாடுகிறது. சுதந்திரம் அடைந்த பின்னர் நம்மால் நல்ல ஆட்சியை கொடுக்க முடியவில்லை.

    அந்த வெள்ளைக்காரன் ஆட்சி மறுபடியும் வந்தால் இந்தியா நன்றாக இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது.

    தவறு செய்தவர்களுக்கு உடனடியாக தண்டனை கிடைக்கும் நிலை ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தது. அவர்கள் நம்மை கொள்ளையடித்தது உண்மை தான்.

    அப்போது அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் லஞ்சம் வாங்க மாட்டார்கள்.

    நமது நாட்டில் இப்போது காந்தியை முற்றிலுமாக மறந்து விட்டார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் தற்போது காந்தியை தெய்வமாக வணங்குகிறார்கள்.

    3 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நமக்கு இன்னொரு காந்தி கிடைக்க மாட்டார். இந்தியா விடுதலையடையும் போது நேதாஜி தலைமையிலான ஆட்சிமுறை 5 ஆண்டுகளுக்கு அமைந்திருந்தால் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றியிருக்கும். ஜெனரல் கரியப்பாவும் இதே கருத்தை தான் கூறினார்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார். #GandhiJayanti150 #MahatmaGandhi #Bribe

    தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இதுவரை 8.39 கோடி வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டிருப்பதாக மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக செயலர் தெரிவித்துள்ளார். #SwachhBharatMission #HouseholdToilets
    புதுடெல்லி:

    மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதிவரை சர்வதேச சுகாதார மாநாட்டை மத்திய அரசு நடத்த உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

    இந்த மாநாடு தொடர்பான விளக்கக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக செயலாளர் பரமேஸ்வரன் ஐயர், கிராமப்புற சுகாதார மேம்பாடு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்கினார்.

    ‘தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 8.39 கோடிக்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சுமார் 4.4 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா கிராமங்களாக அறிவித்துள்ளன. தூய்மை இந்தியா திட்டம் தொடங்கியதில் இருந்து கிராமப்புற சுகாதார மேம்பாடு அதிகரித்துள்ளது. 2014ல் 550 மில்லியன் மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்திய நிலை இருந்தது. தற்போது அது 150 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது’ என்றார் பரமேஸ்வர ஐயர். #SwachhBharatMission #HouseholdToilets
    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு 15-ந் தேதி (சனிக்கிழமை) புதிய தூய்மை திட்டம் தொடங்க இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். #PMModi #MahatmaGandhi #SwachhataHiSeva
    புதுடெல்லி

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ந் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



    இதன் தொடர்ச்சியாக புதிய தூய்மை திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ‘தூய்மையே உண்மையான சேவை’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தை பிரதமர் மோடி வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கிவைக்கிறார்.

    இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி பிறந்த 150-வது ஆண்டை அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி நாம் தொடங்குகிறோம். பாபுவின் (காந்தியடிகள்) கனவை நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும், வரலாற்று சிறப்பு மிக்க தூய்மை இந்தியா திட்டமும் அன்றைய தினத்தில் 4-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அனைவரையும் நான் வணங்குகிறேன்.

    இதன் தொடர்ச்சியாக வருகிற 15-ந் தேதி காலை 9.30 மணியளவில் தூய்மையே உண்மையான சேவை என்ற திட்டத்தை நாம் தொடங்குகிறோம். அன்றைய தினம், தூய்மை இந்தியா திட்டத்தில் அயராது உழைத்து வரும் தொண்டர்களுடன் கலந்துரையாடுவதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்.

    இந்த திட்டத்தில் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இதுவே மகாத்மா காந்திக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை ஆகும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.  #PMModi #MahatmaGandhi #SwachhataHiSeva 
    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, பாதி தண்டனை காலத்தை கழித்த மூத்த கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. #MahatmaGandhi #BirthdayAnniversary
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, மூத்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு திட்டம் ஒன்றை கொண்டு வந்து அமல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * ஆண் கைதிகளுக்கு 60 வயதும், பெண் கைதிகளுக்கு 55 வயதும் முடிந்து இருக்க வேண்டும். மொத்த தண்டனை காலத்தில் பாதியளவை அனுபவித்து முடித்து இருக்க வேண்டும்.

    * வரதட்சணை சாவு, கற்பழிப்பு, ஆட்கடத்தல், பொடா, தடா, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம், அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் (பெமா), சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட முக்கிய சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள், இந்த பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட மாட்டார்கள்.

    * போதைப்பொருள் தடுப்புச்சட்டம், லஞ்ச ஊழல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின்கீழ் தண்டிக்கப்பட்டவர்களுக்கும் இந்த பொது மன்னிப்பு திட்டம் பொருந்தாது. அவர்கள் விடுவிக்கப்பட வாய்ப்பு இல்லை.

    * 70 சதவீத உடல் ஊனத்துடன் உள்ள மாற்றுத்திறனாளிகள் பாதி தண்டனைக் காலத்தை கழித்து இருந்தால் விடுதலை செய்யப்படுவார்கள். மீள முடியாத நோய் தாக்கியவர்கள், மூன்றில் ஒரு பங்கு தண்டனையை கழித்திருந்தால் அவர்களும் விடுவிக்கப்படுவார்கள்.

    * மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களும், மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்களும் விடுவிக்கப்பட மாட்டார்கள்.

    * 3 கட்டங்களாக இந்த பொது மன்னிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டு மூத்த கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். முதல் கட்டமாக வரும் அக்டோபர் 2-ந் தேதியும், 2-வது கட்டமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதியும் (சம்பரண் சத்தியாகிரக இயக்க நினைவு நாள்), 3-வது கட்டமாக அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதியும் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

    * மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் மத்திய அரசு அறிவுரை கடிதம் அனுப்பி வைக்கும். அவை ஒரு கமிட்டி அமைத்து தகுதியான நபர்களை தேர்வு செய்து, கவர்னருக்கு அனுப்பி அரசியல் சாசனம் பிரிவு 161-ன் கீழ் அவரது ஒப்புதல் பெற்று, கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. #MahatmaGandhi #BirthdayAnniversary #tamilnews 
    இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டாவது முறையாக 150க்கும் அதிகமான ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளனர். #RohitSharma #ShikharDhawan #IREvIND #INDvIRE

    அயர்லாந்து சென்று இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா - ஷிகர் தவான் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அரைசதம் கடந்தனர்.

    இந்த ஜோடி 16 ஓவர்கள் தாக்குபிடித்து விளையாடி 160 ரன்கள் குவித்தது. தவான் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா கடைசி ஓவரில் 97 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இது சர்வதேச டி20 போட்டிகளில் அவரது 17-வது அரைசதமாகும். விராட் கோலி 18 அரைசதங்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.



    சர்வதேச டி20 போட்டிகளில் தவான் - ரோகித் ஜோடி 150க்கும் அதிகமாக ரன்கள் அடிப்பது இது இரண்டாவது முறையாகும். இதன்மூலம் இந்த சாதனையை படைத்த முதல் ஜோடி என்ற சாதனையை இருவரும் படைத்துள்ளனர். முன்னதாக கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்த ஜோடி 158 ரன்கள் குவித்திருந்தது.

    கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் உடன் இணைந்து 165 ரன்கள் எடுத்ததே ஒரு இந்திய கிரிக்கெட் ஜோடி அதிகபட்ச ஸ்கோராகும்.

    இந்திய அணி இதுவரை 13 முறை சர்வதேச டி20 போட்டிகளில் 100 ரன்களுக்கும் அதிகமான பாட்னர்ஷிப் ரன்களை எடுத்துள்ளது. இந்த ஜோடியில் 7 முறை ரோகித் சர்மா இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #RohitSharma #ShikharDhawan #IREvIND #INDvIRE
    ×