search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 Uttar Pradesh Police arrested"

    உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் 2 போலீஸ் அதிகாரிகளை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. #unnaocase
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இதனை அடுத்து, அந்த பெண்ணின் தந்தை மர்மமான முறையில் போலீஸ் காவலில் உயிரிழந்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

    குல்தீப் சிங் செங்கார் சி.பி.ஐ ஆல் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைக்காவலில் உள்ளார். இந்நிலையில், உன்னாவ் மாவட்டத்தில் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

    அசோக் சிங் மற்றும் கம்தா பிரசாத் சிங் ஆகிய இருவரும் சஸ்பெண்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவர் மீதும் குற்றவியல் சதி மற்றும் ஆதாரங்களை அழித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர். #unnaocase

    ×