என் மலர்
நீங்கள் தேடியது "2000 Rupee Note"
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.
- காணிக்கையில் பக்தர்கள் வழங்கிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வருகிற 30-ந் தேதியுடன் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நோட்டுகளை கையிருப்பில் வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தி மாற்றிக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வாங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் சுமோட்டோ உள்ளிட்ட தனியார் உணவு நிறுவனங்களும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வருகின்றன.
கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணத்தையும் உடனடியாக எண்ணி அதில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன்படி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் மொத்தம் ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது.
ரொக்கப்பணமாக ரூ.5 கோடியே 9 லட்சத்து 13 ஆயிரத்து 830ம், தங்கம் 1419 கிராமும், வெள்ளி 18,185 கிராமும், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 1366-ம் கிடைத்துள்ளன. இது தவிர பட்டு, பரிவட்டம், நவதானியங்கள், வெளிநாட்டு கடிகாரம் உள்ளிட்ட பொருட்களும் காணிக்கையாக கிடைத்தன.
காணிக்கையில் பக்தர்கள் வழங்கிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு முன்பே உண்டியல்கள் திறந்து எண்ணப்படும். ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை இன்னும் 2 நாட்களில் மாற்றியாக வேண்டும் என்பதால் அங்குள்ள உண்டியல்களையும் திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிராமக் கோவில்கள் மற்றும் சமுதாயத்துக்கு பாத்தியப்படட குலதெய்வக் கோவில்களிலும் உண்டியல்கள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
- சினிமா தியேட்டர்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படவில்லை.
- கடைகள், வர்த்தக நிறுவனங்களிலும் இந்த நோட்டுகளை வாங்குவதை நிறுத்திவிட்டனர்.
சென்னை:
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. மக்களிடம் குறைவான அளவே புழக்கத்தில் இருந்த இந்த நோட்டுகள் நாளை மறுநாளுக்கு(செப்டம்பர் 30-ந்தேதி) பிறகு செல்லாது என்று ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவித்தது.
இதனை தொடர்ந்து வங்கிகள் மூலமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் நடவடிக்கை தொடங்கியது. கிட்டத்தட்ட 5 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டும், பலர் இன்னும் வங்கிகளில் இந்த நோட்டுகளை மாற்றியும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்தும் வருகின்றனர்.
இந்த சூழலில் காலக்கெடு முடிவதால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் பஸ்களில் கொடுத்தால் வாங்க வேண்டாம் என்று கண்டக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றால், அதற்கு கண்டக்டர்களே பொறுப்பு என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்தது. இதேபோல் சினிமா தியேட்டர்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படவில்லை.
கடைகள், வர்த்தக நிறுவனங்களிலும் இந்த நோட்டுகளை வாங்குவதை நிறுத்திவிட்டனர். இதே போல பெட்ரோல் பங்குகளிலும் இன்று முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 5,900 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இந்த பங்குகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெறப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில் காலக்கெடு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.