என் மலர்
முகப்பு » 2018 Mini Cooper S
நீங்கள் தேடியது "2018 Mini Cooper S"
2018 மினி கூப்பர் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
இந்தியாவில் 2018 மினி கூப்பர் கார் வெளியிடப்பட்டுள்ளது. 2018 கூப்பர் எஸ் மற்றும் கூப்பர் டி என இரண்டு மாடல்களின் விலை ரூ.29.70 லட்சம் முதல் துவங்குகிறது.
2018 மினி கூப்பர் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புற வடிவமைப்புகள் மேம்படுத்தப்பட்டு புதிய கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் மூன்று மற்றும் ஐந்து கதவு வேரியன்ட்களில் கிடைக்கிறது. மினி கூப்பர் எஸ் மாடல் கன்வெர்டிபிள் வேரியன்ட்-லும் வழங்கப்படுகிறது.
புதிய 2018 மினி கூப்பர் விலை ரூ.29.70 லட்சசத்தில் துவங்கி அதிகபட்சம் கன்வெர்டிபிள் மாடலின் விலை ரூ.37.10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை புதிய கூப்பர் மாடலில் சிக்னேச்சர் ஸ்டைல் மினி சில்ஹௌட் மற்றும் சிறு அப்டேட்களை கொண்டுள்ளது.
மினி லோகோ புதிய மாடலின் பொனெட்-க்கு மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் புதிய வடிவமைப்பு கொண்ட ஹெட்லேம்ப்கள், வட்ட வடிவம் கொண்ட எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் மற்றும் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் டெயில் லைட் இம்முறை யூனியன் ஜாக் வடிவமைப்பு கொண்டிருக்கிறது.
உள்புறத்தில் 2018 மினி கூப்பர் புதிய ஸ்டீரிங் வீல், சென்ட்ரல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, லெதர் செஸ்டர் மால்ட் இருக்கைகள், பேக்லிட் சர்ஃபேஸ் ஆப்ஷன் கொண்டுள்ளது. இத்துடன் மினி எக்சைட்மென்ட் பேக் 12 வெவ்வேறு நிறங்களில் ஆம்பியன்ட் லைட்டிங் கொண்டுள்ளது.
இத்துடன் 8.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 20 ஜிபி இன்டெர்னல் மெமரி, வயர்லெஸ் சார்ஜிங், ஹார்மன் கார்டன் 360 வாட் ஸ்பீக்கர் சிஸ்டம், ஸ்போர்ட்ஸ் சீட் மற்றும் லெதர் ஸ்டிராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல், கார்னெரிங் பிரேக் கன்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 2018 மினி கூப்பர் எஸ் மற்றும் டி மாடல்களில் 2 லிட்டர் 4-சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 189 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
2018 மினி கூப்பர் எஸ் மாடல் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை 3.5 நொடிகளில் செல்லும் என்றும் மணிக்கு அதிகபட்சம் 235 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மினி மாடலில் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஸ்போர்ட்ஸ் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
புதிய 2018 மினி கூப்பர் எஸ், டி மற்றும் கன்வெர்டிபிள் மாடல்கள் ஜூன் 2018 முதல் அனைத்து மினி விற்பனையாளர்களிடம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கூப்பர் கார் எமரால்டு கிரே மெட்டாலிக், ஸ்டார்லிட் புளு மெட்டாலிக் மற்றும் சோலாரிஸ் ஆரஞ்சு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
×
X