என் மலர்
முகப்பு » 2018 ரெனால்ட் குவிட்
நீங்கள் தேடியது "2018 டிரையம்ப் ஸ்பீடு ட்வின்"
டிரையம்ப் போன்வில் சீரிஸ் புதிய மோட்டார்சைக்கிளாக 2019 டிரையம்ப் ஸ்பீடு ட்வின் அறிமுகம் செய்யப்பட்டது. #Triumph #speedtwin
2019 டிரையம்ப் ஸ்பீடு ட்வின் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. புது மோட்டார்சைக்கிள் டிரையம்ப் போன்வில் சீரிஸ் இன் புது மாடலாக அறிமுகமாகி இருக்கிறது. புதிய 2019 டிரையம்ப் ஸ்பீடு ட்வின் மோட்டார்சைக்கிள் பிப்ரவரி 2019 வாக்கில் சர்வதேச சந்தையில் வெளியாகும் என தெரிகிறது.
புது டிரையம்ப் ஸ்பீடு ட்வின் 1938 ஆண்டுகளில் பிரபலமாக இருந்த மோட்டார்சைக்கிள் பெயரை திரும்பப் பெற்று இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள்கள் ட்வின்-சிலின்டர் மாடல்களுக்கு டிரென்ட்-செட்டராக இருந்தது. புது மோட்டார்சைக்கிள்கள் திரக்ஸ்டான் ஆர் மற்றும் டி120 மாடல்களின் ஒருங்கிணைந்த வடிவமாக பார்க்கப்படுகிறது.
2019 ஸ்பீடு ட்வின் மோட்டார்சைக்கிள் பழங்கால வடிவமைப்பில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. இன்டிகேட்டர்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், ட்வின் சைலன்சர்கள், பெரிய ஃபியூயல் டேன்க், ஹெட்லேம்ப் ஹோல்டர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.
2019 டிரையம்ப் ஸ்பீடு ட்வின் மாடலில் ரைடு-பை-வயர் தொழில்நுட்பம், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ரெயின், ரோடு மற்றும் ஸ்போர்ட் என மூன்று வித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது. 2019 ஸ்பீடு ட்வின் மாடலில் திரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டு இருந்த டேபுலார் சேசிஸ் கொண்டிருக்கிறது.
இதன் எடை 10 கிலோ வரை குறைவாக இருக்கிறது. புதிதாக மக்னீசியம் கேம் கவர்கள், அலுமினியம் ஸ்விங் ஆர்ம், ஆப்டிமைஸ் செய்யப்பட்ட என்ஜின் கவர்கள், புது கிளட்ச் அசெம்ப்ளி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
2019 டிரையம்ப் ஸ்பீடு ட்வின் மாடலில் 1200 சிசி ஸ்டிரெயிட் ட்வின் என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 96 பி.ஹெச்.பி. பவர், 112 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஜெட் பிளாக், சில்வர் ஐஸ்/ஸ்டாம் கிரே மற்றும் கோரோசி ரெட் / ஸ்டாம் கிரெ என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. #Triumph #speedtwin
ஹோன்டா நிறுவனத்தின் 2018 சி.ஆர்.வி. கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #AllNewCRV #HondaCRV
ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய 2018 சி.ஆர்.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2018 ஹோன்டா சி.ஆர்.வி. மாடலின் துவக்க விலை ரூ.28.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2018 ஹோன்டா சி.ஆர்.வி. மாடலின் வெளிப்புறம் அப்டேட் செய்யப்பட்டு புதிய வடிவமைப்பும், புதிய டீசல் இன்ஜின் மற்றும் ஏழு-பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2018 ஹோன்டா சி.ஆர்.வி. மாடலின் டாப்-என்ட் மாடல் விலை ரூ.32.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய 2018 ஹோன்டா சி.ஆர்.வி. மாடலில் புதிய ஷார்ப் மற்றும் ஆங்குலர் வடிவமைப்பு கொண்டுள்ளது. காரின் முன்பக்கம் க்ரோம் பார், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பகலில் எரியும் லைட்கள், எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள், சில்வர் ஸ்கிட் பிளேட் மற்றும் மஸ்குலர் பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது.
காரின் பக்கவாட்டில் புதிய ஹோன்டா சி.ஆர்.வி. மாடலில் புதிய டைமன்ட் கட், 3-ஸ்போக், 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. காரின் பின்புறம் மேம்படுத்தப்பட்ட டெயில் லைட் கிளஸ்டர், க்ரோம் பார், ஷார்க்-ஃபின் ஆன்டெனா மற்றும் ஸ்கிட் பிளேட் கொண்டுள்ளது.
புதிய ஹோன்டா சி.ஆர்.வி. மாடல்: வைட் ஆர்ச்சிட் பியல், ரேடியன்ட் ரெட், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், மாடன் ஸ்டீல் மெட்டாலிக் மற்றும் லூனார் சில்வர் மெட்டாலிக் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
புதிய 2018 ஹோன்டா சி.ஆர்.வி. மாடலின் உள்புறம் ஆடம்பரமாகவு்ம, பிரீமியம் தோற்றத்துடன் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுள்ளது. புதிய சி.ஆர்.வி. மாடலில் 7 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, டி.எஃப்.டி. எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், யு.எஸ்.பி. போர்ட், ஹெச்.டி.எம்.ஐ. போர்ட் மற்றும் எட்டு-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் லெதர் இருக்கைகள், டூயல்-சோன் கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள், பின்புற ஏ.சி. வென்ட்கள், எட்டு-வழி பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் மற்றும் டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் பிரீமியம் வுட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
2018 ஹோன்டா சி.ஆர்.வி. காரின் பெட்ரோல் வேரியன்ட் 2-லிட்டர் 4-சிலிண்டர், i-VTEC இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 151 பி.ஹெச்.பி. பவர், 189 என்.எம். டார்கியூ செயல்திறன், CVT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய காரில் புதிய 1.6 லிட்டர், 4-சிலிண்டர், o-DTEC டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 118 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன், 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
2018 பாரிஸ் மோட்டார் விழாவில் ரெனால்ட் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #RenaultKZE
பிரான்ஸ் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ரெனால்ட் புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை 2018 பாரிஸ் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் க்விட் ஹேட்ச்பேக் மாடலை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய க்விட் எலெக்ட்ரிக் மாடல் ரெனால்ட் K-ZE என பெயரிடப்பட்டுள்ளது.
வடிவமைப்பை பொருத்த வரை எலெக்ட்ரிக் வெர்ஷன் பார்க்க கிட்டத்தட்ட க்விட் ஸ்டான்டர்டு மாடலை போன்றே காட்சியளிக்கிறது. ரெனால்ட் K-ZE கான்செப்ட் மாடலில் ஸ்லீக் ஹெட்லேம்ப்கள், புதிய வடிவமைப்பு கொண்ட கிரில், மேம்படுத்தப்பட்ட பம்ப்பர், ஸ்கஃப் பிளேட் மற்றும் பெரிய ஃபாக் லேம்ப்களை கொண்டிருக்கிறது.
இத்துடன் புதிய K-ZE மாடலில் பெரிய சக்கரங்கள் மற்றும் கார் முழுக்க நீல நிற அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளது. K-ZE தொழில்நுட்ப அம்சங்களை அறிவிக்காத ரெனால்ட், இந்த கான்செப்ட் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது என அறிவித்துள்ளது.
எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடலில் டூயவ் சார்ஜிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருப்பதால், வணிகம் மற்றும் வீட்டில் உள்ள வழக்கமான சார்ஜிங் போர்ட்களிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். ரெனால்ட் K-ZE கான்செப்ட் சீன சந்தைக்கென வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சீனாவில் இதன் விற்பனை 2019-ம் ஆண்டில் துவங்க இருக்கிறது.
ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2018 ஏவியேட்டர் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்கூட்டர் விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #Honda
ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் 2018 ஏவியேட்டர் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2018 ஹோன்டா ஏவியேட்டர் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், பொசிஷன் லேம்ப்கள், 4-இன்-1 லாக், சீட் ஓப்பனர் ஸ்விட்ச், மஃப்ளர் ப்ரோடெக்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
2018 ஹோன்டா ஏவியேட்டர் மாடல் பியல் ஸ்பார்டன் ரெட் எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. முன்னதாக பியல் இக்னியஸ் பிளாக், மேட் செலின் சில்வர் மெட்டாலிக் மற்றும் பியல் அமேசிங் வைட் என மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய ஏவியேட்டர் ஸ்கூட்டரில் 109சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 9 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதே இன்ஜின் முந்தைய ஏவியேட்டர் மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது.
இதன் சஸ்பென்ஷன் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோ-ஷாக் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 12 இன்ச் மற்றும் 10 இன்ச் டியூப்லெஸ் டையர்கள் முறையே முன்புறம் மற்றும் பின்பக்கம் வழங்கப்படுகிறது. பிரேக்கிங் அம்சத்தை பொருத்த வரை 2018 ஏவியேட்டர் மாடலில் 130மில்லிமீட்டர் டிரம் பிரேக்கள் இரண்டு சக்கரங்களில் வழங்கப்படுகிறது.
இத்துடன் முன்புறம் 190மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இதனுடன் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
சமீபத்தில் ஹோன்டா நிறுவனத்தின் 2018 ஆக்டிவா i மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் பல்வேறு காஸ்மெடிக் மற்றும் இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது. ஹோன்டா ஆக்டிவா i தற்போதைய மாடலை விட மெல்லியதாக காட்சியளிக்கிறது.
இந்தியாவில் 2018 ஏவியேட்டர் மாடலின் துவக்க விலை ரூ.55,157 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #Honda #scooters
ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2018 நவி ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்கூட்டரின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #navi110
ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதிய 2018 நவி ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய மாடலை விட புதிய வெர்ஷன் பிரீமியம் மாடலாக உருவாகியுள்ளது.
கூடுதல் பிரீமியம் கட்டணத்திற்கு நவி மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் 2016-ம் ஆண்டில் ஹோன்டா நவி ஸ்கூட்டர் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. நவி ஸ்கூட்டர் முழுமையாக ஹோன்டா இந்தியா ஆய்வு மற்றும் வளர்ச்சி குழுமத்தால் வடிவமைக்கப்பட்டதாகும்.
இந்தியா தவிர ஹோன்டா நவி ஸ்கூட்டர் லத்தின் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. புதிய 2018 ஹோன்டா நவி மாடலில் புதிய ஃபியூயல் காஜ், மெட்டல் மஃப்ளர் ப்ரோடெக்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் கிராப் ரெயில், ஹெட்லைட் கவர்கள் மற்றும் ரியர்வியூ கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஸ்போர்ட் ரெட் நிறம் கொண்ட குஷன் ஸ்ப்ரிங் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹோன்டா நவி 2018 மாடல்: ரேன்ஜ் கிரீன் மற்றும் லடாக் பிரவுன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
இதுதவிர கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது. 2018 ஹோன்டா நவி ஸ்கூட்டரில் 109சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின் ஹோன்டா ஆக்டிவா மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர், 9 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஹோன்டா நவி மாடலின் முன்பக்கம் மற்றும் பின்புறம் முறையே 12 இன்ச் மற்றும் 10 இன்ச் டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஹோன்டா நவி 2018 ஸ்கூட்டர் விலை ரூ.44,775 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தற்சமயம் விற்பனையாகும் மாடலை விட ரூ.1,991 வரை விலை அதிகம் ஆகும். #navi110 #Scooter
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ 13-இன்ச் மற்றும் 15-இன்ச் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய சாதனங்கள் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MacBookPro2018
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மாடல்கள் டச் பார் வசதியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இரண்டு ஆப்பிள் சாதனங்களிலும் 8-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் 15-இன்ச் மாடலில் 6-கோர்கள் 70% வரை வேகமாக இயங்கும் என்றும் 13-இன்ச் மாடல் முந்தைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடும் போது இருமடங்கு வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் 32 ஜிபி மெமரி, ட்ரூ டோன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருப்பதால் சிறப்பான அனுபவம் பெற முடியும் என்பதோடு மூன்றாம் தலைமுறை கீபோர்டு வழங்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் T2 சிப் கொண்ட முதல் மேக்புக் ப்ரோ மாடல்கள் இது ஆகும்.
முன்னதாக இந்த சிப் ஐமேக் ப்ரோ மாடலில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சிப் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதியை வழங்குவதோடு, செக்யூர் பூட் மற்றும் என்க்ரிப்டெட் ஸ்டோரேஜ் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இத்துடன் இந்த சிப் மேக் சாதனங்களில் முதல் முறையாக சிரி (Hey Siri) அம்சத்தையும் வழங்குகிறது.
15 இன்ச் மேக்புக் ப்ரோ (2018)
- 6-கோர் இன்டெல் கோர் i7 மற்றும் i9 பிராசஸர்கள்
- அதிகபட்சம் 2.9 ஜிகாஹெர்ட்ஸ் 4.8 ஜிகாஹெர்ட்ஸ் வரை டர்போ பூஸ்ட்
- 32 ஜிபி DDR4 மெமரி
- சக்திவாய்ந்த ரேடியான் ப்ரோ டிஸ்கிரீட் கிராஃபிக்ஸ் மற்றும் 4 ஜிபி வரை வீடியோ மெமரி
- அதிகபட்சம் 4TB வரையிலான SSD ஸ்டோரேஜ்
- ட்ரூ டோன் டிஸ்ப்ளே தொழில்நுட்பம்
- ஆப்பிள் T2 சிப்
- டச் பார் மற்றும் டச் ஐடி
13 இன்ச் மேக்புக் ப்ரோ (2018)
- குவாட்கோர் இன்டெல் கோர் i5 மற்றும் i7 பிராசஸர்கள்
- அதிகபட்சம் 2.7 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 4.5 ஜிகாஹெர்ட்ஸ் வரை டர்போ பூஸ்ட்
- இருமடங்கு eDRAM
- இன்டெல் ஐரிஸ் ப்ளஸ் இன்டகிரேடெட் கிராஃபிக்ஸ் 655 மற்றும் 128 எம்பி eDRAM
- அதிகபட்சம் 2TB வரை SSD ஸ்டோரேஜ்
- ட்ரூ டோன் டிஸ்ப்ளே தொழில்நுட்பம்
- ஆப்பிள் T2 சிப்
- டச் பார் மற்றும் டச் ஐடி
புதிய 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ப்ரோ (2018) மாடல்களின் விலை ரூ.1,49,900 ( அமெரிக்காவில் 1799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.1,23,150) மற்றும் ரூ.1,99,900 (அமெரிக்காவில் 2399 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.1,64,220) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் 2018 மேக்புக் ப்ரோ மாடல்களின் விற்பனை இம்மாதத்திலேயே தேர்வு செய்யப்பட்ட ஆப்பிள் விற்பனையாளர்களிடம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேக்புக் ப்ரோ மாடல்களுக்கு ஏற்ற லெதர் ஸ்லீவ்களையும் ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கிறது.
13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ப்ரோ சேடிள் பிரவுன், மிட்நைட் ப்ளு நிறங்களில் லெதர் ஸ்லீவ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விலை 179 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,260) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் லெதர் ஸ்லீவ்கள் உயர் ரக லெதர் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதோடு மென்மையான மைக்ரோஃபைபர் லைனிங் செய்யப்பட்டுள்ளது. #MacBookPro2018 #Apple
ரிலையன்ஸ் ஜியோவின் டபுள் தமாக்கா சலுகைக்கு போட்டியாக பிஎஸ்என்எல் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ரிலையன்ஸ் ஜியோவின் டபுள் தமாக்கா சலுகைக்கு போட்டியாக பிஎஸ்என்எல் புதிய சலுகையை அறிவித்துள்ளது.
ரூ.149 விலையில் பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 4 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 2018 உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் புதிய சலுகை ஃபிஃபா உலக கோப்பை சிறப்பு டேட்டா எஸ்டிவி 149 (FIFA World Cup Special Data STV 149) என அழைக்கப்படுகிறது.
ஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை ஜியோவின் ரூ.149 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
கோப்பு படம்
புதிய பிஎஸ்என்எல் சலுகை ஏர்டெல் வழங்கும் ரூ.149 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் சேவை வழங்கப்படும் அனைத்து வட்டாரங்களிலும் இன்று (ஜூன் 14) முதல் வழங்கப்படுகிறது.ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை விட புதிய பிஎஸ்என்எல் சலுகை அதிக டேட்டா வழங்குகிறது. எனினும் புதிய சலுகையில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவை வழங்கப்படவில்லை.
புதிய பிஎஸ்என்எல் சலுகை அந்நிறுவன அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் முன்னணி ரீசார்ஜ் அவுட்லெட்களில் கிடைக்கிறது. புதிய சலுகை பிஎஸ்என்எல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக கிடைக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன நேரலை டிவி செயலிகளில் 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகளை இலவசமாக லைவ் ஸ்டிரீமிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவன நேரலை டிவி செயலிகள் - ஜியோ டிவி ஆப் மற்றும் ஏர்டெல் டிவி செயலிகளில் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை இலவசமாக நேரலையில் ஸ்ட்ரீம் செய்ய முடியும் என அறிவித்துள்ளன.
ரஷ்யாவில் நடைபெற இருக்கும் 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ஜூன் 14-ம் தேதி துவங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் சேவைகளை பயன்படுத்துவோர் இலவசமாக பார்த்து ரசிக்க முடியும். கூடுதலாக இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளிடையே நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் டிவி செயலியில் உலக கோப்பை 2018 கால்பந்து போட்டிகளை வாடிக்கையாளர்கள் வெவ்வேறு உள்ளூர் மொழிகளில் பார்த்து ரசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் போட்டி அட்டவணை விவரங்களும் வங்கப்படுகிறது. போட்டி மட்டுமின்றி, இதர சுவாரஸ்ய வீடியோக்களையும் செயலியில் பார்த்து ரசிக்க முடியும். இலவச சேவைகளை பெற பயனர்கள் தங்களின் ஏர்டெல் டிவி செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.
கோப்பு படம்
இதேபோன்று ஜியோ டிவி செயலியிலும் பிரீமியம் ஸ்போர்ட் தரவுகளை இலவசமாக பார்த்து ரசிக்கும் வசதி வழங்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று உலக கோப்பை கால்பந்து போட்டிகள் மட்டுமின்றி இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடும் டெஸ்ட் கிரிகெட் போட்டிகளையும் இலவசமாக பார்த்து ரசிக்க முடியும்.
ஜியோ டிவி செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பத்து கோடிகளை கடந்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்டெல் டிவி செயலியை சுமார் ஐந்து கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் ஏர்டெல் டிவி ஆப் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை இலவசமாக பயன்படுத்த முடியும் என ஏர்டெல் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் 2018 சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், இதன் ஸ்பை படங்கள் கசிந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி விரைவில் 2018 சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் வெளியிட இருக்கிறது.
இந்நிலையில், வெளியீட்டுக்கு முன் 2018 சியாஸ் சோதனை செய்யப்படுகிறது. இதில் புதிய செடான் மாடலின் உள்புற விவரங்கள் தெரியவந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட முன்பக்கம் காரின் தோற்றத்தை வித்தியாசப்படுத்துகிறது. முன்பக்கம் ஸ்லோப்பிங் பொனெட், சிறிய கிரிள், புதிய வடிவமைப்பு கொண்ட ஸ்வெப்ட் பிளாக் ஹெட்லேம்ப், பம்ப்பர், ஏர் டேம் மற்றும் புதிய ஃபாக் லேம்ப்களை கொண்டுள்ளது.
பக்கவாட்டில், 2018 சியாஸ் மாடலில் மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள், க்ரோம் டோர் ஹேன்டிள்கள், ORVMகள் வழங்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட சியாஸ் மாடலின் பின்புறம் தற்போதைய மாடலை போன்று உருவாக்கப்பட்டு இருக்கும் நிலையில், எல்இடி டெயில் கிளஸ்டர் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
உள்புறமும் புதிய மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்படாதது போன்றே காட்சியளிக்கிறது. எனினும் இதில் க்ரூஸ் கன்ட்ரோல் அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன் கேபின் 2-DIN ஆடியோ சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் ஸீட்டா (Zeta) வேரியன்ட்-இல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல்ஃபா வேரியன்ட் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படும் என்றும் ஒட்டுமொத்த டேஷ்போர்டு தற்போதைய மாடல்களில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.
2018 மாருதி சியாஸ் மாடலில் புத்தம் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலில் 1.4 லிட்டர் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதன் டீசல் வேரியன்ட் 1.3 லிட்டர் இன்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் ஸ்மார்ட் ஹைப்ரிட் வெஹிகில் சுசுகி (SHVS-Smart Hybrid Vehicle From Suzuki) தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது.
இரண்டு இன்ஜின்களின் டிரான்ஸ்மிஷனை பார்க்கும் போது பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களில் 5-ஸ்பீடு மேனுவல் கிஸர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய மாடலில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: @ikanishktyagi
சென்னையை சேர்ந்த ஆப் டெவலப்பர் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆப்பிள் டிசைன் விருது வென்றிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கலிஃபோர்னியா:
சென்னையை சேர்ந்த ஆப் டெவலப்பர் ஸ்டார்ட்-அப் வேப்பிள்ஸ்டஃப் (WapleStuff) ஆப்பிள் டிசைன் விருது 2018 வென்றுள்ளது. கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நடைபெற்று வரும் ஆப்பிள் 2018 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் இதற்கான அறிவிப்பு வெளியானது.
கேல்ஸி (Calzy) என்ற கால்குலேட்டர் செயலிக்காக வேப்பிள்ஸ்டஃப் இந்த விருதை வென்றுள்ளது. மேக், ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் இந்த செயலி கிடைக்கிறது. 2018 ஆப்பிள் டிசைன் விருது மொத்தம் 10 செயலிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.159 விலையில் கிடைக்கும் கால்ஸி ஆப் ஐஓஎஸ் 10.0 மற்றும் அதற்கும் புதிய இயங்குதளங்களில் கிடைக்கிறது. பிளே ஸ்டோரில் 5 புள்ளிகளுக்கு 4.7 புள்ளிகளை பெற்றிருக்கிறது. கால்ஸி செயலியில் வரும் மெமரி ஏரியா அம்சம், அதிகப்படியான எண்களை சேமித்து வைத்து, பல்வேறு கால்குலேட்டிங் செஷன்களில் பயன்படுத்த முடியும்.
ஆப்பிள் 2018 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதியை டெவலப்பர்களுக்கு அறிவித்தது. புதிய ஏஆர் கிட் 2 மல்டிமீடியா இன்டராக்ஷன்களை தனித்துவம் மிக்கதாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் மெஷர் எனும் புதிய செயலி கேமராவில் பொருட்களின் அளவுகளை கண்டறிய வழி செய்கிறது.
இத்துடன் அடோப் கிரியேட்டிவ் கிளவுட் மற்றும் ஐஓஎஸ் தளங்களில் டெவலப்பர்களுக்கு ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி எடிட்டிங்-இல் சிறப்பான அனுபவத்தை பெற முடியும். இந்த ஆண்டு டெவலப்பர் நிகழ்வில் ஹார்டுவேர் சார்ந்த எவ்வித அறிவிப்புகள் இன்றி முழுமையான மென்பொருள் விழாவாக அமைந்தது.
2018 ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வில் ஐஓஎஸ் 12 இயங்குதளத்துடன் வாட்ச் ஓஎஸ் 5, டிவி ஓஎஸ் 5 மற்றும் மேக் ஓஎஸ் மோஜேவ் உள்ளிட்ட இயங்குதளங்களும் அறிவிக்கப்பட்டன. இத்துடன் சிரி வாய்ஸ் அசிஸ்டன்ட் அதிகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சுமார் 1000 கோடி ரிக்வஸ்ட்களை சிரி பெறுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வில் வாட்ச் ஓஎஸ் 5, டிவி ஓஎஸ் 12 இயங்குதளங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் சுவாரஸ்ய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #WWDC2018 #watchos5
கலிஃபோர்னியா:
ஆப்பிள் நிறுவன டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் வாட்ச் சாதனத்துக்கு புதிய வாட்ச் ஓஎஸ் மற்றும் ஆப்பிள் டிவி 4K சாதனத்துக்கான டிவி ஓஎஸ் இயங்குதளங்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளத்தில் உடல்நலம் சார்ந்த புதிய வசதிகளும், வாக்கி டாக்கி அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
டிவி ஓஎஸ் 12 இயங்குதளத்தில் டால்பி அட்மோஸ் ஆடியோ, பொழுதுபோக்கு தரவுகள் மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்க மிக எளிமையான புதிய வசதிகளை ஆப்பிள் சேர்த்து இருக்கிறது.
ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் 5 முக்கிய அம்சங்கள்:
- ஆக்டிவிட்டி ஷேரிங்: வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளம் கொண்டு வாடிக்கையாளர்கள் மற்ற ஆப்பிள் வாட்ச் பயனரை ஏழு நாட்கள் போட்டிக்கு அழைப்பு விடுக்க முடியும். இதன் மூலம் இருவரும் உடற்பயிற்சிகளில் போட்டியிட முடியும்.
- ஆட்டோ-வொர்க் அவுட் டிடெக்ஷன்: இந்த அம்சம் பயனருக்கு சரியான உடற்பயிற்சியை துவங்க அலெர்ட் வழங்குவதோடு, அவர்களுக்கு ரெட்ரோஆக்டிவ் கிரெடிட் வழங்குகிறது. இந்த அம்சம் உடற்பயிற்சியை நிறுத்துவதற்கும் நினைவூட்டுகிறது.
- யோகா மற்றும் ஹைக்கிங்: ஆப்பிள் வாட்ச் புதிய இயங்குதளம் பயனர் யோகா மற்றும் இதர பயிற்சிகளை மேற்கொள்ளும் போதும் மிக துல்லியமாக டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது.
- வாக்கி டாக்கி: புதிய வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வாக்கி டாக்கி அம்சம், மூலம் சிறிய வாய்ஸ் மெசேஜ்களை அனுப்ப முடியும். ஒரு வாட்ச் சாதனத்தில் இருந்து மற்றொரு வாட்ச் சாதனத்துக்கு ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார் பதிப்பு வாட்ச் 3 மூலம் இயங்குகிறது.
- பாட்கேஸ்ட்: சிரியை பயன்படுத்தி பயனர்கள் இனி ஆப்பிள் பாட்கேஸ்ட்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும்.
- வாட்ச் ஓஎஸ் 5-இல் சிரி: சிரி வாட்ச் ஃபேஸ் இனி மூன்றாம் தரப்பு செயலிகளா நைக்ஃ ரன் கிளப், க்ளோ பேபி மற்றும் மோபைக் உல்ளிட்டவற்றில் இருந்து ஆக்ஷனபிள் தரவுகளை காண்பிக்கும்.
- ஆக்ஷனபிள் நோட்டிஃபிகேஷன்கள்: மூன்றாம் தரப்பு செயலிகளில் இனி இன்டராக்டிவ் கன்ட்ரோல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் செயலிகளை திறக்காமலே அவற்றை பயன்படுத்த முடியும். இத்துடன் புதிய பிரைட் பேன்ட் மற்றும் வாட்ச் ஃபேஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிவி ஓஎஸ் 12 முக்கிய அம்சங்கள்:
புதிய டிவி ஓஎஸ் 12 இயங்குதளத்தை பொருத்த வரை ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சுவாரஸ்ய அம்சங்களை சேர்த்து இருக்கிறது. அந்த வகையில் சீரோ சைன்-இன் அம்சமானது பயனரின் பிராட்பேன்ட் நெட்வொர்க்-ஐ கண்டரிந்து சப்போர்ட் செய்யும் செயலிகளில் டிவி ஓஎஸ் 12 தானாக சைன் இன் செய்யும்.
மற்ற அம்சங்களை பொருத்த வரை ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் இருந்து ஆப்பிள் டிவிக்கு மிக எளிமையாக சைன் இன் செய்ய ஆட்டோஃபில் பாஸ்வேர்டு வழங்கப்படுகிறது. ஆப்பிள் டிவியை பயன்படுத்துவோருக்கான ஆப்பிள் டிவி ரிமோட் பயனர்களின் ஐபோன், ஐபேட்களின் கன்ட்ரோல் சென்டரில் தானாக சேர்க்கப்பட்டு விடும்.
ஹோம் கன்ட்ரோல் சிஸ்டம்களான கன்ட்ரோல்14, க்ரெஸ்ட்ரான் மற்றும் சாவன்ட் உள்ளிட்டவற்றை கொண்டு ஆப்பிள் டிவியை இயக்க முடியும். இத்துடன் சிரியை பயன்படுத்தி வாய்ஸ் சர்ச் மற்றும் கன்ட்ரோல் செய்ய முடியும்.
டிவி ஓஎஸ் தளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டால்பி அட்மோஸ் வசதி டிவி ஓஎஸ் 12 தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆப்பிள் டிவி 4K சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஐடியூன்ஸ் ஆப் அதிகளவு 4K ஹெச்டிஆர் திரைப்படங்களை வழங்குகிறது. அந்த வகையில் அட்மோஸ் வசதி சேர்க்கப்பட்டு இருப்பது ஆப்பிள் டிவி தரவுகளுக்கு சிறப்பான ஆடியோ அனுபவத்தை இதுவரை இல்லாத அளவு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஐடியூன்ஸ் கொண்டிருக்கும் அனைத்து தரவுகளிலும் டால்பி அட்மோஸ் வசதி தானாக அப்டேட் செய்யப்படும் என்றும் ஆப்பிள் அறிவித்துள்ளது. டிவி ஆப் மட்டுமே தற்சமயம் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் வசதியை வழங்குகிறது. டிவி ஆப் தற்சமயம் வரை 100 சேனல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் நேரலை விளையாட்டு மற்றும் செய்திகளும் அடங்கும். #WWDC2018 #watchos5 #tvOS12
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர்கள் நிகழ்வில் ஐஓஎஸ் 12 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #WWDC2018 #iOS12
கலிஃபோர்னியா:
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வு கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நகரில் துவங்கியது. மென்பொருள் சார்ந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 12 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் இயங்கும் புதிய ஐஓஎஸ் தளத்தில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவன மென்பொருள் பொறியியல் துறைக்கான மூத்த துணை தலைவர் க்ரியாக் ஃபெட்ரிகி ஐஓஎஸ் 12 இயங்குதளத்தை அறிமுகம் செய்த டெவலப்பர் நிகழ்வை துவங்கி வைத்தார். தற்சமயம் ஐஓஎஸ் 11 இயங்குதளம் கொண்ட அனைத்து சாதனங்களிலும் ஐஓஎஸ் 12 அப்டேட் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஐஓஎஸ் 12:
புதிய இயங்குதளத்தில் ஆப்பிள் நிறுவனம் ஆக்மென்ட்டெட் ரியாலி்டி எஃபெக்ட்களை வழங்க USDZ எனும் புதிய ஃபார்மேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபார்மேட் கொண்டு பல்வேறு வசதிகளை வழங்க ஆப்பிள் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அந்த வகையில் அடோப் நிறுவனம் மெஷர் எனும் புதிய ஏஆர் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் அடுத்த தலைமுறை ஏஆர் கிட் 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் சிறப்பான ஃபேஸ் டிராக்கிங், முக அங்கீகார அம்சத்தை மேம்படுத்துகிறது. ஷேர்டு எக்ஸ்பீரியன்சஸ் அம்சம் ஒரே சமயத்தில் பலருடன் ஏஆர் செயலியில் உரையாடவும், விளையாடவும் வழி செய்கிறது.
புதிய இயங்குதளம் இயங்கும் அனைத்து சாதனங்களிலும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் மேம்படுத்தப்பட்ட போட்டோஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய செயலியில் தேடல் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டைப் செய்யும் முன்பே உங்களுக்கான பரிந்துரைகளை வழங்குகிறது.
இத்துடன் ஃபார் யு எனும் புதிய டேப் நீங்கள் எடுத்த புகைப்படங்களை எடுத்துக் காண்பிப்பதோடு அவற்றில் எஃபெக்ட்களை சேர்ப்பது மற்றும் அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள பரிந்துரை செய்யும். ஐஓஎஸ் 12 தானாகவே நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய புகைப்படங்களை தேர்வு செய்து அவற்றை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் பரிந்துரைக்கும்.
ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் சிரி அதிகம் மேம்படுத்தப்பட்டு பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நீங்கள் பயன்படுத்தும் செயலி குறித்த நோட்டிஃபிகேஷன்களை சரியான நேரத்தில் உங்களுக்கு நினைவூட்டும். அதாவது ஜிம் சார்ந்த செயலிகளை டிராக் செய்ய பயன்படுத்தும் பட்சத்தில், நீங்கள் அங்கு சென்றும் செயலியை இயக்க வேண்டும் என சிரி உங்களுக்கு நினைவூட்டும்.
ஐபேட்களுக்கான நியூஸ் செயலி ஐஓஎஸ் 12 தளத்தில் புதிய சைடுபார் கொண்டிருக்கிறது. இதன்மூலம் ஒரு சேவையில் இருந்து மற்றொரு சேவைக்கு மிக எளிமையாக மாற முடியும். இதே போன்று கிடைக்கும் புதிய பிரவுஸ் அம்சம் கொண்டு பல்வேறு புதிய சேனல்கள் மற்றும் தலைப்புகளை கண்டறிய முடியும். கூடுதலாக நியூஸ் ஆப் ஸ்டாக்ஸ் செயலியுடன் இணைக்கப்படுகிறது. இதனால் வணிகம் சார்ந்த செய்திகளை ஸ்டாக்ஸ் செயலியில் வாசிக்கும் போதே வணிகம் சார்ந்த இதர செய்திகளையும் படிக்க முடியும்.
இத்துடன் ஐஓஎஸ் செயலியில் டு நாட் டிஸ்டர்ப் (DND) சேவையும் சேர்க்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் DND அம்சம் உங்களது நோட்டிஃபிகேஷன்களை மறைத்து, லாக் ஸ்கிரீனை சுத்தமாக காண்பிக்கும். இத்துடன் ஒவ்வொரு செயலியிலும் நீங்கள் பயன்படுத்தும் நேரத்தை மிக நுனுக்கமாக காண்பிக்கும். இதனால் ஒவ்வொரு செயலியில் நீங்கள் செலவழிக்கும் நேரத்தை சரியாக தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் நீங்கள் ஒவ்வொரு செயலியை பயன்படுத்த குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து விட்டால், நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் எச்சரிக்கை செய்யப்படும். இதன் மூலம் செயலிகளில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க முடியும்.
ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் வரும் நோட்டிஃபிகேஷன்கள் ஒன்றிணைக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரே செயலியில் இருந்து உங்களுக்கு வரும் அனைத்து நோட்டிஃபிகேஷன்களும் பட்டியலிடப்படும், அவற்றை க்ளிக் செய்ததும் பட்டியலை முழுமையாக பார்க்க முடியும். இந்த பட்டியலை வலது புறம் ஸ்வைப் செய்தால் அனைத்தையும் க்ளியர் செய்ய முடியும்.
டங் டிடெக்ஷன் அம்சம் ஐஓஎஸ் 12 தளத்தின் சுவாரஸ்ய அம்சமாக இருக்கிறது. இந்த அம்சம் அனிமோஜிக்களின் நாக்கை வெளியேற்றும். இத்துடன் அனிமோஜியின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக மீமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்களது முகத்தை அனிமேஷன் வடிவில் உருவாக்கி ஐமெசேஜில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. மெசேஜஸ் கேமராவில் இதுபோன்ற பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஃபேஸ்டைம் அம்சத்தில் இனி க்ரூப் கால்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இனி ஒரே சமயத்தில் 32 பேருடன் க்ரூப் கால்களை பேச முடியும். இத்துடன் வீடியோவில் ஒருவர் பேசும் போது, அவரின் வீடியோ தானாக பெரியதாகும் படி நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. க்ரூப் ஃபேஸ்டைம் அம்சம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் கொண்டு ஆடியோ முறையிலும் பதில் அளிக்க முடியும்.
×
X