search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2019 Renault Duster"

    ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 டஸ்டர் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #RenaultDuster



    இந்தியாவில் 2019 ரெனால்ட் டஸ்டர் கார் அறிமுகமானது. புதிய டஸ்டர் 2019 காரின் துவக்க விலை ரூ.7.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ.13.09 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    2019 ரெனால்ட் டஸ்டர் மாடலில் பல்வேறு புதிய அம்சங்களுடன் விலை குறைவான ஆட்டோமேடிக் வெர்ஷனும் அறிமுகமாகி இருக்கிறது. ரெனால்ட் டஸ்டர் 2019 மாடலில் மேம்படுத்தப்பட்ட தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

    பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய டஸ்டர் மாடலில் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. உள்ளிட்டவை பரவலாக அனைத்து வேரியன்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளது. 2019 டஸ்டர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது.



    புதிய டஸ்டர் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர் @5600 ஆர்.பி.எம். மற்றும் 142 என்.எம். டார்க் @4000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

    இத்துடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் இருவித டியூனிங்கில் கிடைக்கிறது. இதன் பேஸ் என்ஜின் 84 பி.ஹெச்.பி. பவர் @3750 ஆர்.பி.எம். மற்றும் 200 என்.எம். டார்க் @2000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இதன் உயர் ரக வேரியன்ட் 108 பி.ஹெச்.பி. பவர் @3900 ஆர்.பி.எம். மற்றும் 248 என்.எம். டார்க் @2250 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.

    இந்தியாவில் 2019 ரெனால்ட் டஸ்டர் கார் சமீபத்தில் அறிமுகமான ஹூன்டாய் கிரெட்டா, மாருதி சுசுகி எஸ்-கிராஸ், மஹிந்திரா டி.யு.வி.300 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
    ×