search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2020 FIFA U 17 Women World Cup"

    சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் அடுத்த ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமை இந்தியா பெற்றுள்ளது. #FIFAWomensWorldCup #U17WWC #IndianFootball #SAFF
    மியாமி:

    சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் அடுத்த ஆண்டின் உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன. இது தொடர்பாக நேற்று மியாமியில் நடந்த பிபா கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், அடுத்த ஆண்டு 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை இந்தியாவிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.



    ‘இந்திய கால்பந்து சங்கம், 2020ல் 17 வயதுக்குப்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பையை நடத்த உள்ளது’ என பிபா தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டது. இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிரபுல் படேலும் இதனை உறுதி செய்தார்.

    2017ம் ஆண்டு 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை போட்டியை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    தற்போது இந்தியாவின் தேசிய பெண்கள் அணி நேபாளத்தில் நடைபெறும் தெற்காசிய சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி வருகிறது. அங்கு புதன்கிழமை நடந்த போட்டியில் மாலத்தீவு அணியை 6-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. தெற்காசிய போட்டிகளில் இந்திய அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. #FIFAWomensWorldCup #U17WWC #IndianFootball #SAFF
    ×