search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2nd ODI match"

    வங்காளதேச அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி போராடி வெற்றி பெற்றது. #WIvBAN
    புரோவிடன்ஸ்:

    வெஸ்ட் இண்டீஸ் - வங்காளதேச அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 49.3 ஓவர்களில் 271 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    ஹெட்மயர் சதம் அடித்தார். அவர் 93 பந்தில் 125 ரன் (3 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்தார். ரூபல் உசேன் 3 விக்கெட்டும், சகீப்-அல்-ஹசன், முஷ்டா பிசுர் ரகுமான் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய வங்காளதேசம் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் 3 ரன்னில் வெற்றி பெற்றது. முஷ்பிகுர் ரகிம் 68 ரன்னும், சகீப்-அல்-ஹசன் 56 ரன்னும் எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் தொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்று இருந்தது. 3-வது மற்றும் கடைசி ஆட்டம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது. #WIvBAN
    ×