என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "40 Days of Lent"

    • தவக் காலம் வருகிற 14-ந்தேதி முதல் தொடங்குகிறது.
    • கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள்.

    சென்னை:

    கிறிஸ்தவர்களின் தவக் காலம் வருகிற 14-ந்தேதி முதல் தொடங்குகிறது. இயேசு வனாந்தரத்தில் நோன்பு இருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள். இந்த காலத்தை தவக் காலம், தபசு காலம், இலையுதிர் காலம் என்று கூறுவது உண்டு.

    40 நாட்கள் கிறிஸ்தவர் கள் நோன்பு இருந்து தம்மை தாமே வெறுத்து தங்களுக்கு பிடித்த காரியங்களை தவிர்த்து ஆண்டவனை தியானிப்பார்கள். உண்ணும் உணவு, உடைகள் போன்ற அலங்காரங்களை தவிர்த்து பிறருக்கு உதவி செய்து ஆன்மீக வலிமையை இக்காலக் கட்டத்தில் பெறுவார்கள்.

    தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இது யூதர்களின் பாரம்பரியம். காலப்போக்கில் அனைத்து திருச்சபைகளும் `சாம்பல் புதன்' நாளை பின்பற்றி வருகிறார்கள்.

    குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை மக்கள் ஓலையினால் ஆன சிலுவையை எரித்து அதன் சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்வது வழக்கம். தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல் புதன் கிழமை வருகிற 14-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவ ஆலயங்களில் காலையிலும் மாலையிலும் சிறப்பு ஆராதனை நடைபெறும்.

    அதனைதொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகள் சிறப்பு வழிபாடு நடைபெறும். இயேசு உபவாசம் இருந்த தபசுக் காலத்தில் கிறிஸ்தவர்கள் கஷ்ட நாட்களாக கருதி அனைத்து வழிபாடுகளிலும் எளிமையாக பங்கேற்பார்கள். ஏழைகளுக்கு உதவி செய்யும் தியாக நாட்களாக இவை பின்பற்றப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்படும் அந்த நாட்களை நினைவு கூர்ந்து புனிதவாரம் அனுசரிக்கப்படுகிறது. பெரிய வியாழன், புனித வெள்ளியை தொடர்ந்து இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மார்ச் மாதம் 31-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    • மக்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்று பாடல் பாடி அவரை வரவேற்றனர்.
    • கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை பவனி நடை பெற்றது.

    சென்னை:

    இயேசு 40 நாட்கள் உபவாசம் இருந்து ஜெபித்து வந்த காலத்தை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இயேசு ஜெருசலேம் நகரில் கோவேறு கழுதையின் மீது பவனியாக அழைத்து செல்லப்பட்டார்.

    அப்போது குருத்தோலை களை பிடித்தவாறு ஜெருசேலம் மக்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்று பாடல் பாடி அவரை வரவேற்றனர். அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை பவனி நடை பெற்றது.

    சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இருந்து குருத்தோலைகளில் சிலுவையை செய்து கையில் பிடித்தவாறு கிறிஸ்தவர்கள் ஆலயத்தை சுற்றியும், தெருக்கள், வீதிகளிலும், பவனியாக சென்றனர்.

    சென்னையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகள், தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ) ஆலயங்கள், மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்தே, இ.சி.ஐ. உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது.

    சென்னை சாந்தோம் பேராலயம், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம், மாதவரம் புனித அந்தோணியார் ஆலயம், சின்னமலை தேவாலயம், கத்தீட்ரல் பேராலயம், புதுப்பேட்டை புனித அந்தோ ணியார் ஆலயம் உள்ளிட்ட சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆல யங்களிலும் இன்று குருத்தோலை பவனி நடந்தது.

     குருத்தோலை பவனியில் சென்ற கிறிஸ்தவர்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்ற பாடலை பாடியபடி சென்ற னர். பின்னர் ஆலயங்களில் பேராயர்கள், பாதிரியர்கள், போதகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

    • தவக்கலத்தில் வருகின்ற 7 வெள்ளிக்கிழமைகளும் சிறப்பு தினமாக கருதப்படும்.
    • 20-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    சென்னை:

    கிறிஸ்வர்களின் தவக்காலம் சாம்பல் புதன் கிழமையில் இருந்து தொடங்கி இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகையான ஈஸ்டர் வரை கடை பிடிக்கப்படுகிறது. இந்த காலத்தை இலையுதிர் காலம் என்றும் கூறுவது உண்டு.

    பாவத்தில் இருந்து விடுதலைப் பெற்று மீண்டும் நம்மை சீரமைத்து கொள்ளக் கூடிய காலமாக இந்த தவக்காலம் ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் முக்கியமாக கருதப்படுகிறது.

    நாளை (புதன்கிழமை) சாம்பல் புதனை யொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. நாளையில் இருந்து இயேசு சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளி வரை கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து எளிய முறையில் ஆலய வழிபாடுகளில் பங்கேற்பார்கள்.

    கத்தோலிக்க திருச்சபையில் நாளை நடைபெறும் சாம்பல் புதன் ஆராதனையில் சிலுவையை எரித்த சாம்பலை பூசி வழிபாடுவார்கள். இந்த சிறப்பு ஆராதனை நாளை காலையில் நடைபெறும்.

    தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) பெந்தேகோஸ்து, இ.சி.ஐ., லுத்தரன், மெத்தடிஸ்ட் உள்ளிட்ட பிற திருச்சபைகளில் சாம்பல் புதன் ஆராதனை நாளை மாலை நடைபெறும்.

    தவக்காலத்தில் பெண்கள் தலையில் பூ வைப்பதை தவிர்ப்பார்கள். அசைவ உணவு உள்ளிட்ட ஆடம்பர செலவினங்களை தவிர்த்து அவற்றை ஏழைகளுக்கு உதவிடும் வகையில் காணிக்கையாக ஆலயத்திற்கு செலுத்துவார்கள்.

    தவக்கலத்தில் வருகின்ற 7 வெள்ளிக்கிழமைகளும் சிறப்பு தினமாக கருதப்படும். ஒவ்வொரு வாரமும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அனைத்து திருச்சபைகளிலும் வெள்ளிக்கிழமை மாலை இந்த வழிபாடு நடைபெறும். இதில் குடும்பத்துடன் கிறிஸ்தவர்கள் பங்கேற்பார்கள்.

    அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் 13-ந்தேதி குருத்தோலை ஞாயிறு, 18-ந்தேதி பெரிய வெள்ளி, 20-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    ×