என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "498 பேர்"

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்திய வழக்கில், கோர்ட்டில் ஆஜராகும்படி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 498 பேருக்கு ஆந்திர போலீசார் சம்மன் வழங்கினர். #Redsandalwood
    திருவண்ணாமலை:

    ஆந்திர மாநிலம், திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டுவதற்கு அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி சில ஏஜெண்டுகள் தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கூலித்தொழிலாளர்களை அழைத்து செல்கின்றனர். அவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் செம்மரங்களை வெட்டும்போது, ஆந்திர மாநில வனத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட போளூர், ஜமுனமரத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் 498 பேர் மீது வழக்கு உள்ளது.

    இந்த வழக்கில் தொடர்புடையவர்களை ஆந்திர கோர்ட்டில் ஆஜர்படுத்தவும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் ஆந்திர மாநில செம்மரகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காந்தாராவ், திருவண்ணாமலை எஸ்.பி. சிபி சக்கரவர்த்தியிடம் கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து எஸ்.பி. உத்தரவுப்படி தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த போலீசார் 10 குழுக்களாக சென்று வருகிற 30-ந் தேதி ஆந்திர மாநில கோர்ட்டில் ஆஜராகும்படி 498 பேருக்கு கோர்ட்டு உத்தரவு நகலை வழங்கினர்.

    இதேபோல் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாருடன் ஆந்திர வனத்துறை மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். #Redsandalwood
    ரூ.6,498 கோடி சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக நிரவ் மோடி உள்பட 24 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. #PNBCase #NiravModi #EDFile

    மும்பை:

    லட்சுமி விலாஸ் வங்கி அளித்த உத்தரவாத கடிதங்களை பயன்படுத்தி, பல்வேறு வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கிய வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார்.


    உத்தரவாத கடிதங்கள் மூலம், நிரவ் மோடி பெற்ற ரூ.6 ஆயிரத்து 498 கோடி கடன்தொகையை அவர் வெளிநாட்டில் போலி நிறுவனங்களுக்கு சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.இந்த வழக்கில், அமலாக்கத்துறை நேற்று மும்பை தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அது, 12 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை ஆகும்.

    நிரவ் மோடி, அவருடைய தந்தை, சகோதரர், சகோதரி, மைத்துனர் உள்பட 24 பேர் மீது இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதை கோர்ட்டு விரைவில் ஆய்வு செய்யும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #PNBCase #NiravModi #EDFile


    ×