என் மலர்
நீங்கள் தேடியது "5 year old girl"
- குடியிருப்பின் மையப்பகுதியில் குழந்தைகள் விளையாடுவது வழக்கம்
- சகோதரியின் மொபைலில் அச்சிறுமி உடனடியாக படமெடுத்தார்
அமெரிக்காவின் தென்கிழக்கின் ஓரத்தில் உள்ளது புளோரிடா மாநிலம்.
இம்மாநிலத்தில் உள்ள ஆர்லேண்டோ பகுதியில் சமர்செட் அபார்ட்மென்ட்ஸ் எனும் பெரும் குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மையப்பகுதியில் திறந்தவெளியில் உள்ள பூங்காவில் அங்குள்ள குழந்தைகள் விளையாடுவது வழக்கம்.
இங்குள்ள ஒரு வீட்டில் தனது பாட்டியின் பராமரிப்புக்காக கார்லோஸ் ரிவெரா லூசியானோ எனும் 46 வயது ஆண் சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் கண்ணாடி கதவின் வழியாக ஒரு 5 வயது சிறுமி தென்பட்டிருக்கிறாள். அவளை பார்த்து லூசியானோ, காற்றில் முத்தங்களை பறக்க விட்டார். பிறகு தன் உடலை ஆபாசமாக வெளிப்படுத்தும் செய்கைகளிலும் ஈடுபட்டார்.
இச்செயலை அச்சிறுமி தனது சகோதரியின் மொபைல் போனில் கார்லோசிற்கு தெரியாமல் புத்திசாலித்தனமாக உடனடியாக வீடியோ படம் பிடித்தார். இந்த வீடியோவை கண்ட அச்சிறுமியின் தாயார் அதிர்ச்சியடைந்து, உடனே அமெரிக்காவில் அவசர உதவிக்கான எண்ணான 911-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர், அந்த வீடியோவை கண்டு அதில் உள்ள கார்லோசின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். மேலும், அவர்கள் அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து பெற்றோர்களிடமும் விழிப்புணர்வுக்காக இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.
இக்குற்றச்சாட்டை மறுத்த கார்லோஸ் தன்னிடமும் இது குறித்த வீடியோ உள்ளதாக கூறினார். ஆனால், அவரால் காவலர்களிடம் எந்த வீடியோவும் சமர்ப்பிக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் ஆரஞ்ச் கவுன்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த 5-வயது சிறுமியின் புத்திசாலித்தனத்தை அங்குள்ள பலரும் பாராட்டி வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடி ஓ.பி.காலனியை சேர்ந்தவர் கவுதம் (வயது 30). இவருடைய மனைவி ரம்யா(30). இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஜினிசா(5) என்ற பெண் குழந்தை உள்ளது.
முதலாம் வகுப்பு படிக்கும் ஜினிசா, தன்னுடைய 3 ஆண்டு சேமிப்பு தொகையான 25 ஆயிரத்து 879 ரூபாயை கேரள நிவாரண நிதிக்காக வழங்கி இருக்கிறார். குடும்பத்துடன் கேரளா சென்று கேரள முதல் மந்திரி(பொறுப்பு) இ.பி.ஜெயராஜனிடம் வழங்கினார்கள். #KeralaFlood #KeralaReliefFund
ஜப்பானில் உள்ள கங்வா என்ற இடத்தை சேர்ந்த இளம்பெண் யூரி (வயது 25). இவர், வாலிபர் ஒருவருடன் வாழ்ந்து வந்தார்.
அவர்களுக்கு யுவா என்ற பெண் குழந்தை பிறந்தது. பின்னர் யூரி அந்த வாலிபரை பிரிந்து புனாட்டோ (33) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
முதல் கணவருக்கு பிறந்த யுவாவையும் தன்னுடன் வைத்து வளர்த்து வந்தார். நாளடைவில் அந்த குழந்தை மீது யூரிக்கு வெறுப்பு ஏற்பட்டது. 2-வது கணவர் புனாட்டோவும் வெறுப்பை காட்டினார்.
அவர்கள் இருவரும் குழந்தை யுவாவை கொடுமைப்படுத்தினார்கள். தற்போது அவளுக்கு 5 வயது ஆகி இருந்தது. தொடர்ந்து கொடுமைப்படுத்தியதுடன் உணவும் கொடுக்காமல் பட்டினி போட்டனர். இதில், அந்த குழந்தை இறந்து விட்டது.
இதன் பிறகு போலீசுக்கு புனாட்டோ போன் செய்து தனது குழந்தை திடீரென மயங்கி விழுந்து விட்டதாகவும், இதய துடிப்பு இல்லை என்றும் கூறினார்.
போலீசார் அங்கு வந்து பார்த்தனர். அந்த குழந்தை இறந்து கிடந்தது. 5 வயதில் குழந்தைகள் 20 கிலோ வரை எடை இருக்கும். ஆனால், இந்த குழந்தை 12 கிலோதான் எடை இருந்தது. மிகவும் ஒல்லியாக இருந்தது. எனவே, சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
யுவாவின் நோட்டு புத்தகத்தை பார்வையிட்டனர்.
அப்போது ஒரு இடத்தில் தனது தாயும், வளர்ப்பு தந்தையும் தன்னை தினமும் கொடுமைப்படுத்துகிறார்கள். இதை யாராவது தடுத்து நிறுத்துங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய போது, கணவன் - மனைவி இருவருமே அந்த குழந்தைக்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டு கொன்றதாக கூறினார்கள். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். #Tamilnews