என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » 6 km
நீங்கள் தேடியது "6 km"
ஆந்திராவில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை போர்வையில் தொட்டில் கட்டி 6 கி.மீ. தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். #AndhraPregnantWoman #AndhraRoad
விசாகப்பட்டினம்:
![](https://img.maalaimalar.com/InlineImage/201806091530038251_1_pregnant-woman2._L_styvpf.jpg)
இந்நிலையில், அனுக்கு கிராமத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. சாலை வசதி இல்லாததால் அந்த கிராமத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வர முடியவில்லை. இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து போர்வையில் தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். சுமார் 6 கி.மீ. தூரம் இவ்வாறு தூக்கி வரப்பட்ட அந்த கர்ப்பிணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி கேள்விப்பட்ட தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. அனிதா, வருத்தம் தெரிவித்துள்ளார். #AndhraPregnantWoman #AndhraRoad
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது அனுக்கு கிராமம். பழங்குடியின மக்கள் வாழும் இந்த மலை கிராமத்திற்கு முறையான சாலை வசதிகள் இல்லை. எனவே, வாகன போக்குவரத்து கிடையாது. அந்த கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அருகில் உள்ள ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர்.

×
X