என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6.3 ரிக்டர்"

    • நீலாயதாட்சியம்மன், காயாரோகண சாமி கோவிலில் அதிபத்த நாயனாருக்கு தனி சன்னதி உள்ளது.
    • இந்த காட்சிகளை கடற்கரையில் திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

    நாகையில் நீலாயதாட்சியம்மன், காயாரோகண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    அதிபத்த நாயனார், நாகையில் உள்ள நுழைப்பாடி எனும் நம்பியார் நகரில் மீனவ சமுதாயத்தில் பிறந்தவர். சிவ பக்தரான அவர், மீன்பிடி தொழில் செய்து வந்தார். சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்டு இருந்த அதிபத்தர் தினமும் கடலுக்கு சென்று தான் பிடிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து கடலில் விடுவது வழக்கம்.

    சில நேரங்களில் வலையில் சிக்கும் ஒரு மீனையும் சிவபெருமானுக்கு அர்ப்பணித்து விட்டு வெறுங்கையுடன் வீட்டுக்கு செல்வார். இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. இவரது பக்தியை சோதிக்க நினைத்த சிவபெருமான், ஒரு நாள் அவரது வலையில் வெள்ளி மீனை சிக்க வைத்தார். இந்த வெள்ளி மீனை அதிபத்தர் கடலில் விட்டார்.

    அடுத்த நாள், தங்க மீனை சிக்க வைத்தார். அந்த தங்க மீனையும் அவர் எந்தவித தயக்கமும் இன்றி சிவபெருமானுக்கு அர்ப்பணித்து கடலில் விட்டார். அவரது பக்தியை உணா்ந்த சிவபெருமான், பார்வதியுடன் அதிபத்தருக்கு காட்சியளித்தார் என்பது வரலாறு.

    இந்த நிகழ்வை நினைவு கூரும்வகையில் ஆண்டு தோறும் நாகை புதிய கடற்கரையில் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திர நாளில் அதிபத்தர், சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தஆண்டு அதிபத்த நாயனார், சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் விழா நேற்று நடந்தது. வழக்கமாக நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி மீன்கள் ஊர்வலமாக கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அந்த கோவிலில் குடமுழுக்கு திருப்பணிகள் நடந்து வருவதால் ஊர்வலம் நடைபெறவில்லை.

    இதனால் நேற்று நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் கோவில் மற்றும் அதிபத்தர் நாயனார் வணங்கிய அமுதீசர் கோவில்களில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி மீன்களையும், ஆரிய நாட்டுத்தெரு பஞ்சாயத்தார்கள் சீர்வரிசை பொருட்களையும் ஊர்வலமாக புதிய கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

    இதனைத்தொடர்ந்து புதிய கடற்கரையில், சீர்வரிசை தட்டுக்களை வைத்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் அதிபத்த நாயனாரின் உற்சவ சிலையை பைபர் படகில் ஏற்றி கடலுக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அதிபத்த நாயனார் வெள்ளி மற்றும் தங்க மீனை பிடிக்கும் காட்சியும், அதை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து கடலில் விடும் காட்சியும் அப்போது சிவபெருமான், பார்வதியுடன் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

    இந்த காட்சிகளை கடற்கரையில் திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

    • அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர் அதிபத்தநாயனார்.
    • அதிபத்தர் என்று தூய தமிழால் அழைக்கப்பட்டார்.

    இன்று (வெள்ளிக்கிழமை) அதிபத்த நாயனார் குருபூஜை. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான அதிபத்தநாயனார் நாகையில் வாழ்ந்தவர். பக்தியிலும் அதிதீவிர பக்தி உடையவர். ஆதலால் அதி பக்தராய் விளங்கிய நாயனார், அதிபத்தர் என்று தூய தமிழால் அழைக்கப்பட்டார். இவர் மீனவ குலத்திற்கு விளக்காக அவதரித்தவர்.

    சிவபெருமானிடம் இருந்த அதீதமான பக்தியினால், தமது வலையில் விழும் மீன்களுள் ஒன்றை மீண்டும் கடலிலேயே சிவார்ப்பணமாக விடும் வழக்கத்தை ஒவ்வொருநாளும் மேற்கொண்டிருந்தார். ஒருநாள் அவ்வலையில் ஒரே ஒரு மீன் மட்டும் அகப்பட்டது. அதுவும் தங்கமாக ஜொலிக்கும் விலை மதிப்பற்ற ஒன்று. அப்படி இருந்தும் அதனை ஒரு பொருட்டாகத் தனக்கென்று எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் கடலிலேயே விட்டுவிட்டார்.

    நாயனாரது பக்தியை மெச்சிய பெருமான் ரிஷப வாகனத்தில் அம்பிகையுடன் தோன்றி அவருக்கு அருளினார் என்பது பெரியபுராணம் காட்டும் வரலாறு.

    நாயனார் அருள் பெற்ற ஆவணி மாத ஆயில்ய நட்சத்திரத்தன்று நாகை காயாரோகணேஸ்வர சுவாமி ஆலயத்தில் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் இதனைக் காண அடியார்கள் வருகிறார்கள். பகலில் நடைபெறும் உற்சவம் இது.

    • கலிய நாயனார் கதையை அறிந்து கொள்ளலாம்.
    • ஆடி மாதம் கேட்டை நட்சத்திர தினத்தன்று அவரது குருபூஜை நடத்தப்படுகிறது.

    63 நாயன்மார்களில் கலிய நாயனாரும் ஒருவர். இவர் சென்னை திருவொற்றியூரில் பிரபலமான எண்ணெய் வணிகர் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதில் இருந்தே சிவபெருமான் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். திருவொற்றியூர் வடிவுடையம்மன் சமேத தியாகராஜ சுவாமி கோவிலில் தினமும் விளக்கேற்றி தொண்டு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஒருநாள் கூட தவறாமல் இவர் சிவனுக்கு விளக்கேற்றி வந்தார்.

    இவரது பக்தியை பரிசோதிக்க சிவபெருமான் முடிவு செய்தார். அதன்படி கலிய நாயனாரின் செல்வங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது. துன்பங்களும், வறுமையும் அவரை வாட்டி வதைத்தன. என்றாலும், கலிய நாயனார் திருவொற்றியூர் ஆலயத்தில் தினமும் விளக் கேற்றி வழிபட தவறவில்லை. பணம் எல்லாம் கைநழுவி சென்றதால் கூலி வேலைக்கு சென்று பிழைத்து வந்தார். கூலி வேலையில் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை விளக்கேற்ற செலவழித்தார்.

    சொந்த வீடு, நிலம் அத்தனையையும் விற்று அவர் திருவொற்றியூர் ஆலயத்தில் விளக்கேற்றும் கடமையை செய்தார். ஒரு கட்டத்தில் அவரிடம் ஒரு பைசாகூட இல்லாத நிலை உருவானது. விளக்கேற்ற எண்ணெய் வாங்க பணம் இல்லாததால் மிகவும் வருந்தினார். திருவொற்றியூர் ஆலயத்துக்குள் சென்று தனது உடலை வெட்டி ரத்தத்தை எடுத்து அதில் விளக்கேற்ற முடிவு செய்தார். வாளை ஓங்கிய அவர் தன்னை வெட்டிக்கொள்ள தயாரானார். அப்போது சிவபெருமான் அவரது பக்தியை மெச்சி அவரை தடுத்து நிறுத்தி ஆட்கொண்டார்.

    அன்று முதல் அவரது சிறப்பு அனைவராலும் பேசப்பட்டது. சிவபெருமானின் காட்சியை நேரில் தரிசித்த அவருக்கு திருவொற்றியூர் ஆலயத்தில் உள் பிரகாரத்தில் ஒரு பகுதியில் நினைவு குறிப்புகள் உள்ளன. அங்கு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கேட்டை நட்சத்திர தினத்தன்று அவரது குருபூஜை நடத்தப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) இந்த குருபூஜை நடத்தப்பட உள்ளது.

    • 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    வில்லியனூர் பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை திருக்காமேஸ்வரர் ஆலய தேரோட்ட பிரம்மோற்சவ விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் நடந்து வருகிறது.

    நேற்று 6-ம் நாள் உற்சவம் நடைபெற்றது. காலையில் 63 நாயன்மார்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வன்னியர் பாதுகாப்பு தலைவர் செந்தில்கவுண்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முக்கிய விழாவான தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை வன்னியர் மடம் தனி அதிகாரி ராமதாஸ் மற்றும் ஆலய சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    குமரி மாவட்டத்தில் கடந்த 11 மாதத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த 63 பேர் மீது போலீசார் குண்டர் சட்டத்தில் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை கண்காணித்து அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்தவர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் 3 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கொலையில் தொடர்புடைய கீழசரக்கல்விளையை சேர்ந்த பிரதீப் (வயது 22). இளங்கடை பகுதியை சேர்ந்த மனோ என்ற உஷ்மான் (30), கோட்டார்கம்பளம் தெருவை சேர்ந்த ரமேஷ் (20) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    மேலும் இதேபோன்று மற்றொரு கொலை முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதையத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பரிந்துரை செய்தார். இதையடுத்து 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அவர்களை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளை ஜெயிலில் அடைத்தனர்.

    கடந்த 11 மாதங்களில் குண்டர் தடுப்புச்சட்டத்தில் 63 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. #tamilnews
    ஈக்வடார் நாட்டின் மத்திய பகுதியில் சுமார் 6.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. #EuadorEarthquake
    குவைட்டோ:

    ஈக்வடார் நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என அமெரிக்க புவிசார் மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் தெற்கு அம்பாடோ நகரத்திலிருந்து சுமார் 94 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பகுதியை மையமாக கொண்டு 112 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.

    இந்த திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    கடந்த 2016-ம் ஆண்டில் ஈக்வடார் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் 7.8 என்ற ரிக்டர் அளவிற்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 650-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #EuadorEarthquake
    ×