search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "68 பேர் பலி"

    இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #IndonesiaRain
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா மாகாணத்தில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித்தீர்த்தது. இடைவிடாது பெய்த மழையால் நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதனால் தலைநகர் ஜெயபூரா மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வெள்ளக்காடாகின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

    சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்ததாலும், மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அத்துடன் மின் இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.



    கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 68 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 55 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் சுலாவேசி மாகாணத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் அதனை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதில் 70 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.  #IndonesiaRain
    கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவில் இன்று அதிகாலை 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. #Earthquake #Greece
    ஏதென்ஸ்:

    கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜகிந்தோஸ் பகுதியில் இன்று அதிகாலை 4.25 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.



    நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. கிரீஸ் நாட்டில் இந்த அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. #Earthquake #Greece
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் இருந்து 68 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். #MGRcentenaryfunction

    மதுரை:

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனை முன்னிட்டு சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாடும் கைதிகளை பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்ய அரசு முடிவு எடுத்தது.

    இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று 7-வது கட்டமாக 68 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் பெண் கைதியும் ஒருவர்.

    மதுரை மத்திய சிறையில் இருந்து 6 கட்டமாக 100 பேர் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் 68 பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். #MGRcentenaryfunction

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் 68 கைதிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
    சென்னை:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் முதற்கட்டமாக 67 கைதிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 6-ந் தேதி, சென்னை புழல் சிறைச்சாலையில் 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவு பெற்ற (25.2.2018 அன்றைய தேதி அடிப்படையில்) 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 68 கைதிகளை விடுதலை செய்யப்பட உள்ளனர். அதன்படி புழல் மத்திய சிறையில் 44 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 52 பேரும், இதர சிறைச்சாலைகளில் இருந்து 16 பேரும் என மொத்தம் 68 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

    இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. 
    ×