search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "8 Women Models Molested"

    • படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து கொண்டிருந்தனர்.
    • துப்பாக்கிகளுடன் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று படப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்தது. துப்பாக்கி முனையில் நடிகர்கள், மாடல் அழகிகளை சிறைபிடித்தனர்.

    ஜோகன்ஸ்பர்க்:

    தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்குக்கு மேற்கே உள்ள சிறிய நகரான க்ருகர்ஸ்டோர்ப் பகுதியில் இசை வீடியோ படப்பிடிப்பு நடந்தது. இதில் மாடல் அழகிகள் கலந்து கொண்டனர்.

    படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து கொண்டிருந்தனர். அப்போது துப்பாக்கிகளுடன் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று படப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்தது. துப்பாக்கி முனையில் நடிகர்கள், மாடல் அழகிகளை சிறைபிடித்தனர்.

    பின்னர் 8 மாடல் அழகிகளை அக்கும்பல் கற்பழித்தது. இதில் ஒரு பெண் 10 பேராலும், மற்றொரு பெண் 8 பேராலும் கற்பழிக்கப்பட்டனர்.

    படப்பிடிப்பில் இருந்த ஆண்களை நிர்வாணமாக்கிய அக்கும்பல் அவர்களிடம் இருந்த பொருட்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 3 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

    இதுகுறித்து காவல்துறை மந்திரி பெக்கி செலே கூறும்போது, "கற்பழிப்பில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டினர் போல் தெரிகிறது. அவர்கள் நாட்டில் சட்ட விரோதமாக சுரங்கங்களை தோண்டும் கும்பலை சேர்ந்தவர்கள் 20 சந்தேக நபர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார். தென்ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு குற்றச்செயல் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×