என் மலர்
நீங்கள் தேடியது "9 RESOLUTIONS"
- மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய சாதாரண கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- ஒன்றியக்குழு தலைவர் தலைமையில் நடைபெற்றது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரணக் கூட்டம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் பரணி கார்த்திக்கேயன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், அந்தந்த பகுதி ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,தங்கள் பகுதிக்கு வேண்டிய குறை நிறைகளை முன்வைத்தனர். கூட்டத்தில் 9 தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்று பின்பு நிறைவேற்றப்பட்டது.
அப்போது மும்பாலை ஒன்றியக்குழு உறுப்பினர் நீலாவதி பேசுகையில், வடக்கு அம்மாபட்டினம் முருகன்கோவில் சாலை, வடக்கு மணமேல்குடி அம்மன்கோவில் சாலை மற்றும் அம்பால் நகரில் மின்மாற்றியை சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதே போன்று கரகத்திகோட்டை ஒன்றியக்குழு உறுப்பினர் கணேசன் பேசுகையில், கொடிக்குளம் கண்மாயிலிருந்து கரகத்திகோட்டை வரை சுமார் 30கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பழுதடைந்துள்ளது அதனை சரிசெய்ய வேண்டும் என்றார்.
கட்டுமாவடி ஒன்றியக்குழு உறுப்பினர் கணேசன் பேசுகையில் தங்கள் பகுதியில் அனைத்து தார்ச்சாலைகளை செப்பனிட்டு தர வேண்டும் என கூறினார். இதற்கு பதிலளித்த ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் அனைத்து கோரிக்கைகளும் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நிறைவேற்றித்தரப்படும் என தெரிவித்தார்.