என் மலர்
நீங்கள் தேடியது "Cheran"
- டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கியதோடு, தொடர்ந்து ஹாரன் அடித்தபடி வந்துள்ளார்.
- சிசிடிவி காட்சிகளுடன் இயக்குநர் சேரன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் தனியார் பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயக்குனர் சேரன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பெரியகங்கணா குப்பத்தின் வழியாக இயக்குநர் சேரன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் தனியார் பஸ் ஒன்று வந்தது. அதன் டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கியதோடு, தொடர்ந்து ஹாரன் அடித்தபடி வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சேரன் தனது காரை சாலையில் நிறுத்தி கீழே இறங்கினார். பின்னால் வந்த தனியார் பஸ்சும் சாலையில் நின்றது.
இயக்குநர் சேரன் தொடர்ந்து ஹாரன் அடிப்பதாக கூறி தனியார் பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் சேரனை சமாதானம் செய்து அனுப்பி வைத்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடலூரில் தனியார் பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயக்குனர் சேரன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகளுடன் இயக்குநர் சேரன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில், இயக்குநர் சேரன் நடுவழியில் தகராறு செய்தது தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படம் குறித்த அறிவிப்பை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- நீண்டநாள் ஆசை ஒன்று நிறைவேறி இருக்கிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகர் சேரன். தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் படியாக பல படங்களை இயக்கி நடித்துள்ள சேரன், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக தெரிவித்தார். அதன்படி இயக்குநரும், நடிகருமான சேரன் மலையாள திரையுலகில் நடிகராக களம் இறங்குகிறார்.
இது தொடர்பான பதிவில், "நண்பர்களே... முதன்முதலாக நீண்டநாள் ஆசையாக இருந்த ஒன்று நிறைவேறி இருக்கிறது.. மலையாள திரைப்படம் ஒன்றில் ஆகச்சிறந்த நடிகரான டொவினோ தாமஸ் உடன் இணைந்து 'இஸ்க்' படத்தின் இயக்குனரான அனுராஜ் மனோகர் இயக்கத்தில் நடிக்கிறேன்.. என்றும்போல உங்கள் ஆதரவும் அன்பும் தேவை.. நன்றி," என குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏ.வி.ராஜூவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகர் கருணாஸ் இன்று புகார்
- கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார்.
கூவத்தூர் குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகர் கருணாஸ் இன்று புகார் அளித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, "கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது .இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
- அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவின் பேச்சு சர்ச்சையான நிலையில், இப்போது அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
- திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான், இயக்குநர் சேரன் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்
கூவத்தூரில் நடிகைகள் அழைத்து வரப்பட்டதாக அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவின் பேச்சு சர்ச்சையான நிலையில், இப்போது அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
பிரபல நடிகை குறித்து சர்ச்சை பேச்சு.. "நான் அப்படி பேசவில்லை.." ஏ.வி.ராஜூ பரபரப்பு விளக்கம்#avraju #admk #thanthitvhttps://t.co/9UdUYMmZzZ
— Thanthi TV (@ThanthiTV) February 20, 2024
இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, "கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
திரிஷா விவகாரத்தில் நடிகை கஸ்தூரி, மன்சூர் அலிகான், இயக்குநர் சேரன் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சமீப காலமாக சினிமா நடிகைகளை பொதுவெளியில் கொச்சையாக பேசுவது அதிகரித்துள்ளது.
- ஏ.வி.ராஜுவுக்கு கட்சிக்குள் பிரச்சினை இருக்கலாம், அதற்காக நடிகைகளை அசிங்கமாக பேசுவதா?
நடிகை திரிஷாக்கு ஆதரவு நடிகை கஸ்தூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சமீப காலமாக சினிமா நடிகைகளை பொதுவெளியில் கொச்சையாக பேசுவது அதிகரித்துள்ளது. வாய், நாக்கு இருப்பதற்காக வாய்க்கு வந்தபடி பேசுவதா? பார்க்காத விஷயத்தை பார்த்தமாதிரி எப்படி பேசலாம். ஏ.வி.ராஜுவுக்கு கட்சிக்குள் பிரச்சினை இருக்கலாம், அதற்காக நடிகைகளை அசிங்கமாக பேசுவதா?அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
My video statement on AV Raju's shocking slander on Trisha, Karunaas and actresses in general. @trishtrashers @karunaasethu
— Kasturi (@KasthuriShankar) February 20, 2024
I believe a swift and strong reaction is warranted from the affected parties. https://t.co/CYBMItalEV
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, "கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது .இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான், இயக்குநர் சேரன் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- கூவத்தூர் விவகாரத்தில் நடிகையை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம்
- போகிற போக்கில் நடிகைகள் குறித்து கேவலமாக பேசியிருப்பது தனது மனதை நோகச் செய்கிறது.
கூவத்தூர் விவகாரத்தில் நடிகையை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போகிற போக்கில் நடிகைகள் குறித்து கேவலமாக பேசியிருப்பது தனது மனதை நோகச் செய்கிறது. சமூகத்தை பாதிக்கும் ஆபத்தான செயல் என மன்சூர் அலிகான் ஆடியோ வெளியிட்டுள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிஷா, "கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது .இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநர் சேரன் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தடத்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்மந்தப்படுத்தி ஒரு கூறியிருக்கிறார்.
- கீழ்த்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
திரைத்துறை மற்றும் நடிகை திரிஷா தொடர்பான அதிமுக முன்னாள் நிர்வாகி A.V.ராஜூவின் பேச்சுக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றைய சமூக வலைத்தளங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்ட திரு.A.V.ராஜீ என்பவர் திரைத்துறையை குறித்து சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தடத்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்மந்தப்படுத்தி ஒரு கூறியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் திரு.கருணாஸ் அவர்களையும் சம்மந்தப்படுத்தி இந்த கீழ்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார்.
அரசியலில் ஒருவரை, ஒருவர் தாக்கி கொள்வதற்கு அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, கீழ்த்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இத்தகைய அநாகரிகமான கீழ்த்தரமான செயலை, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறோம்.
பஞ்சாயத்து தலைவரிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் முதல் பாரத குடியரசின் தலைவராக திருமதி.முர்மு அவர்கள் வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, இந்த பாரத தேசத்தில் "பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மேலும் நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்புக் கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்குப் பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது
- ஏ.வி.ராஜு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளா
"கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது .இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என த்ரிஷா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், எந்த ஆதாரமும் இன்றி திரைத்துறையினர் மீது அவதூறு பரப்பும் சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி
- கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார்
எந்த ஆதாரமும் இன்றி திரைத்துறையினர் மீது அவதூறு பரப்பும் சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையானது. அதில், "கூவத்தூரில் காசு கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி என்றும், கூவத்தூர் விடுதியில் நடிகைகள் வேண்டும் என கேட்டவர் வெங்கடாச்சலம்" என சொல்லி பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டார். ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் சேரன், "ஏ.வி.ராஜுவின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில், நடிகர் சங்க நிர்வாகிகளான விஷால், கார்த்தி ஆகியோரை டேக் செய்துள்ள சேரன், நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- இயக்குனர் சேரன் பல படங்களை இயக்கியுள்ளார்.
- இவர் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.
பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.
இந்நிலையில் இயக்குனர் சேரன் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ராமதாஸாக நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவர் ராமதாஸ் வாழ்க்கை படத்தில் அவரது இளம் வயது நிகழ்வுகள், டாக்டராக பணி செய்து கொண்டே பின்தங்கிய வன்னிய சமுதாய மக்களின் ஏழ்மை நிலையை அகற்றவும், கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், தனி ஒதுக்கீடு பெறவும் போராட்டங்கள் நடத்தியது மற்றும் அரசியல் கட்சி தொடங்கியது உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் சேரன் கன்னட நடிகர் சுதீப் நடிக்கும் படத்தைத் தமிழ், கன்னடத்தில் இயக்குகிறார். அதை முடித்துவிட்டு மருத்துவர் ராமதாஸ் வாழ்க்கைக கதையை இயக்குவார் என்றும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
- இயக்குனர்- நடிகராக வலம் வருபவர் சேரன்.
- இவரது தந்தை சினிமா ஆப்பரேட்டராக பணிப்புரிந்தவர்.
பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார்.
இவரின் தந்தை எஸ். பாண்டியன் சினிமா ஆப்பரேட்டராக பணிப்புரிந்தவர். 84 வயதான பாண்டியன் சிறிது காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் இன்று (நவம்பர் 16) காலை 6.30 மணிக்கு அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள பழையூர்பட்டியில் இருக்கும் அவர்களது வீட்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை 5 மணி அளவில் பழையூர்பட்டியில் உள்ள வீட்டில் நடைபெறும். சேரன் தந்தை காலமானதை தொடர்ந்து பல்வேறு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- நடிகர் கிச்சா சுதீப் 'நான் ஈ' படத்தில் நடித்து பிரபலமானார்.
- இவர் விஜய்யின் ‘புலி’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகர் சுதீப் தமிழில் வெளியான 'நான் ஈ' படத்தில் சமந்தாவுடன் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் வெளியாகி ஹிட்டான சேது மற்றும் ஆட்டோகிராப் போன்ற படங்களின் ரீமேக்கிலும் நடித்துள்ளார். மேலும், விஜய்யின் 'புலி' படத்திலும் நடித்து ரசிகர்களை கவந்தார்.
கிச்சா 47 போஸ்டர்
இந்நிலையில், நடிகர் கிச்சா சுதீப்பின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் 47-வது படத்தை இயக்குனர் சேரன் இயக்கவுள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தங்களது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
We are very excited to announce our next film in Kannada with the one & only BAADSHAH @KicchaSudeep ♥️?
— Sathya Jyothi Films (@SathyaJyothi) September 2, 2023
#Kichcha47 - Directed by the veteran Filmmaker @directorcheran ??@iampriya06@TheSudeepTrends@KicchafansKKSFA@KSSS_Official_ #HBDKicchaSudeep pic.twitter.com/auRS8vUPEX