என் மலர்
நீங்கள் தேடியது "Ilaiyaraaja"
- சென்னை-28, மங்காத்தா, மாநாடு போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியவர் வெங்கட் பிரபு.
- இவர் இயக்கும் அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் 'மன்மத லீலை'. வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படமான இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்து ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட் நடிகைகள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

என்சி22
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார்.

இளையராஜா - வெங்கட் பிரபு
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணி இப்படத்தின் மூலம் முதன்முறையாக இணையவுள்ளதால் படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வெங்கட்பிரபு இதுவரை இயக்கிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி மட்டுமே இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா.
- இவரின் சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார்.
இதையடுத்து பாரதியாரின் நினைவு நாளையொட்டி, இளையராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''எல்லா வருடங்களும் எனக்கு இந்த நாளில் பாரதியாரின் நினைவு வரும். அது என்னை வருத்தும். என்னை பாரதியாரோடு ஒப்பிட்டு பார்த்து, 'நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? என்று அவன் தன்னை தானே நொந்துகொண்டானில்லையா? 'நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?' தன்னை நல்லதோரு வீணையாகவும் அவனை உருவாக்கிய அம்மையே சக்தியே என்னை நலங்கெட புழுதியில் ஏறிந்துவிடுவாயோ என அவனின் நொந்தல் என்னை வருத்தும்.

இளையராஜா
அவருக்கு ஆறுதல் சொல்லும் வகையில் என் பட பாடலில் நான் பதில் சொல்லியிருக்கிறேன். 'உன் குத்தமா என் குத்தமா' பாடலில் வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு என்று பாரதிக்கு நான் ஆறுதல் சொல்லியிருக்கிறேன். பாரதி கலங்குவதை என்னால் தாங்க முடியவில்லை. இன்று நதிகள் இணைப்பு திட்டத்தைப் பற்றி நாமெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவன் சிறுவயதில் நதிகள் இணைப்பு திட்டத்தை அப்போதே கற்பனை செய்திருக்கிறான்.
அவனை நினைத்து நாம் மரியாதையும், வணக்கமும், அஞ்சலியும் செலுத்துவது மாபெரும் ஒப்பற்ற விஷயம். பாரதியாரின் நினைவு நாளை நினைவில் கொண்டு தமிழக அரசு இந்த நாளை அவரின் பெயரால் அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. தமிழக அரசு வாழ்க.. மு.க.ஸ்டாலின் வாழ்க..'' என்று தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியின் நினைவு நாளில், வாழ்க பாரதியின் புகழ். pic.twitter.com/pOOwpCOo43
— Ilaiyaraaja (@ilaiyaraaja) September 11, 2022
- தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான்.
- இவர்களின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களாக வலம் வருபவர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான். இவர்கள் இருவரும் அண்மையில் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றனர். ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த இளையராஜா சமீபத்தில் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்து எடுத்த புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இளையராஜா
இதனிடையே ஏ.ஆர் ரஹ்மான் கனடா நாட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு அவரை கவுரவிக்கும் வகையில், மார்க்கம் (Markham) நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு 'ஏ.ஆர் ரஹ்மான்' எனப் பெயர் வைக்கப்பட்டது. இது தொடர்பான சில புகைப்படங்களைப் பகிர்ந்து அறிக்கையும் ஏ.ஆர் ரஹ்மான் வெளியிட்டிருந்தார்.

ஏ.ஆர். ரஹ்மான்
இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மான், இளையராஜாவுடன் பேட்டரி வாகனத்தில் தான் பயணிக்கும் வீடியோ ஒன்றை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். ஆனால் எங்கள் இலக்கு எப்போதும் தமிழ்நாடு தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைவரின் மனம் கவர்ந்த இரு இசையமைப்பாளர்கள் ஒரே வீடியோவில் தோன்றுவதால் இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது.
- இப்படம் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இப்படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது. 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நட்சத்திரம் நகர்கிறது
மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்துக்கு இரண்டாம் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நட்சத்திரம் நகர்கிறது
இந்நிலையில் இப்படம் பற்றி இயக்குனர் பா.இரஞ்சித் பேசியதாவது , "நட்சத்திரம் நகர்கிறது" காதல் படம் அல்ல காதலைப்பற்றிய படம். ஆணும் பெண்ணும் சந்திக்கும் பொழுது காதலாகத்தான் ஆரம்பமாகுது. அது குடும்பத்துக்கு தெரியும் பொழுதுதான் சமூகத்தின் பிரச்சினையாக மாறுகிறது. இங்கே காதலுக்கு ஒரு மதிப்பீடு இருக்கு. காதல் வர்க்கத்தையும் ஜாதியையும் பின்னிபிணைந்ததாக இருக்கிறது. காதல் பெர்சனலாக இருக்கும்பொழுது எந்த பிரச்சினையும் இல்லை.

நட்சத்திரம் நகர்கிறது
இப்போ காதலை ஒரு பொலிட்டிக்கல் டெர்ம் ஆக மாற்றி வச்சிருக்காங்க. அதை பற்றி விவாதிக்கிற படம்தான் நட்சத்திரம் நகர்கிறது. இதில் ஆண் பெண் காதல்கள் மட்டும் இல்லாது ஒரு பாலின காதலைப் பற்றியும், திருநங்கையின் காதலைப் பற்றியும் பேசுகிறோம். பாண்டிச்சேரியில் நாடக தியேட்டரில் நடிக்கக்கூடுகிற நடிகர்கள் அவர்களின் எமோஷ்னல், காதலை விவரிக்கிறது இந்தப்படம். ஒரு காதலை குடும்பமும் சமூகமும் எப்படிப்பார்க்கிறது என இந்த படம் முழுக்க பேசுகிறோம். நவீன சினிமாவின் தாக்கத்தில் எழுதியிருக்கிறேன் படம் நல்லா வந்திருக்கு.

பா.இரஞ்சித்
இசைஞானி இளையராஜாவுடன் இணைவீர்களா? என்கிற கேள்விக்கு, எனக்கு ரொம்ப பிடித்தவர்களை தூர நின்று பார்ப்பேன். இசைஞானியோடு இணைந்து வேலை செய்ய முடியும்னு இன்றுவரை நான் நினைத்ததில்லை. அவர் கிட்ட நெருங்கவே தயக்கம் இருக்கு. அவர் பெரிய மேதை. இசைஞானி இளையராஜா இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்கவே முடியாது. எனக்கு வழிகாட்டிய என் முன்னத்தி ஏரை நம்பித்தான் எங்கள் வீட்டில் என்னை சினிமாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர் பாடல்கள் எனக்கு சினிமா பாடல்கள்களாய் இல்லாமல் தன்னம்பிக்கை பாடல்களாக இருந்திருக்கிறது. ராஜாவை தினம் தினம் ரசிப்பவன் நான் என்றார்.
- தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்து மக்களின் மனங்களை கவர்ந்தவர் இளையராஜா.
- சில தினங்களுக்கு முன்பு மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா தமிழில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார்.

விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களை பாராளுமன்ற மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கும் நடைமுறைப்படி, இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா பதவியேற்று அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் 75-வது சுதந்திர தின விழாவை திருவண்ணாமலையில் உள்ள ரமாண ஆசிரமத்தில் இளையராஜா தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- ஆரோகணம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன்
- இவர் தற்போது புதிய படம் ஒன்று இயக்கி வருகிறார்.
தமிழில் 2012-ஆம் ஆண்டு வெளியான 'ஆரோகணம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். தொடர்ந்து இவர் இயக்கிய 'நெருங்கி வா முத்தமிடாதே', 'அம்மணி' மற்றும் 'ஹவுஸ் ஓனர்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

லட்சுமி ராமகிருஷ்ணன்
அதுமட்டுமல்லாமல் இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் புதிய படம் ஒன்று இயக்கி வருகிறார். இப்படத்தில் மிஷ்கின், சமுத்திரக்கனி, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக லட்சுமி ராமகிருஷ்ணன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
And …blessed to have on board , the one and only, the legendary maestro 🙏🙏 what an experience it is!! looking forward to the RR sessions of my next directorial , final stages of shooting in progress… pic.twitter.com/t1Nbp5O0cV
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) August 11, 2022
- நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராக இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இதற்கு வாழ்த்து கூறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. தற்போதைய நிலையில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராகேஷ் சின்கா உள்பட 5 பேர் நியமன எம்.பி.க்களாக உள்ளனர்.
மேலும் காலியாக உள்ள இடங்களுக்கு எம்.பி.க்களை நியமனம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த இசைஞானி இளையராஜாவை மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்து உள்ளது. இசைத்துறையில் அவர் செய்த அளவிட முடியாத சாதனைகளை அங்கீகரித்து கவுரவிக்கும் பொருட்டு இந்த பதவி வழங்கப்பட்டு உள்ளது.

இளையராஜா - கமல்ஹாசன்
இந்நிலையில் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன பதவி வழங்கியிருப்பதற்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம் என்று புகழாரம் சூட்டி பதிவிட்டுள்ளார்.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத @ilaiyaraaja அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) July 6, 2022
- நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராக இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இதற்கு வாழ்த்து கூறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. தற்போதைய நிலையில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராகேஷ் சின்கா உள்பட 5 பேர் நியமன எம்.பி.க்களாக உள்ளனர்.
மேலும் காலியாக உள்ள இடங்களுக்கு எம்.பி.க்களை நியமனம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த இசைஞானி இளையராஜாவை மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்து உள்ளது. இசைத்துறையில் அவர் செய்த அளவிட முடியாத சாதனைகளை அங்கீகரித்து கவுரவிக்கும் பொருட்டு இந்த பதவி வழங்கப்பட்டு உள்ளது.

இளையராஜா - மு.க.ஸ்டாலின்
இந்நிலையில் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன பதவி வழங்கியிருப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், 'இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட 'இசைஞானி' இளையராஜா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்!' என்று புகழாரம் சூட்டி பதிவிட்டுள்ளார்.
இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட 'இசைஞானி' @ilaiyaraaja அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்! pic.twitter.com/zCqWAzA7RJ
— M.K.Stalin (@mkstalin) July 6, 2022
- மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் இளையராஜா என அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
- இந்திய கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் பணியாற்றக்கூடிய ஆளுமை மிக்கவர் என திருமாவளவன் கருத்து
சென்னை:
இசையமைப்பாளர் இளையராஜாவை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து வருமாறு:-
கிராமிய இசையையும், ஆன்மிக இசையையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்று அடி அடியாக ரசிக்க வைத்த இசைஞானி இளையராஜா அவர்களின் குரல் நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒலிப்பது தமிழகத்திற்கும், தமிழருக்கும் பெருமை....
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்...
இசைஞானி இளையராஜா அவர்களின் இணையற்ற இசைக்கு இசைந்து அங்கீகாரம் கொடுத்து தமிழ்நாட்டின் இசைக்குரலை நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒலிக்கச் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் இளையராஜா என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு:-
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இசைஞானி இளையராஜா நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பண்ணைப்புரத்திலிருந்து புறப்பட்டு உலகம் முழுவதும் உள்ள மக்களின் மனங்களை இசையால் வென்ற இளையராஜா இந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்.
இசையால் மனக்காயங்களுக்கு மருந்திட்டவர். இந்திய மக்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் ஆற்றுப்படுத்தியவர். இது அவருக்கு சரியான அங்கீகாரம். அவர் இன்னும் உயர்ந்த அங்கீகாரங்களை பெறத் தகுதியானவர். அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள தடகள வீராங்கனை பி.டி.உஷா, தெலுங்கு திரைப்பட எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத், கல்வியாளர் வீரேந்திர ஹெக்டே ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் பணி சிறக்கட்டும்!
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.\

'மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள #இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள். இந்திய கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் பணியாற்றக்கூடிய ஆளுமை மிக்கவர். பாரத ரத்னா விருது பெறவும் முழுமையான தகைமை உடையவர் இசைஞானி இளையராஜா அவர்கள்' என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- பல்வேறு எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் நியமன எம்.பி.க்கள் பெயர்கள் பரிந்துரை
- இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படலாம் என கடந்த சில மாநிலங்களாகவே பேசப்பட்டது
புதுடெல்லி:
இலக்கியம், கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் 12 பேரை மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக, குடியரசு தலைவர் நியமனம் செய்யலாம். இதற்கு தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்களை மத்திய அரசு பரிந்துரை செய்யும்.
அவ்வகையில், மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைக்கதை எழுத்தாளரும் இயக்குனருமான விஜயேந்திர பிரசாத் மற்றும் கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா கோவில் நிர்வாகி வீரேந்திர ஹெக்டே ஆகியோர் மாநிலங்களவைக்கு மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடியுடன் பி.டி.உஷா
இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படலாம் என கடந்த சில மாநிலங்களாகவே பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா உள்ளிட்ட 4 பேரை நியமன எம்.பி.க்களாக நியமிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்ட தகவலை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- இளையராஜா மூன்று தலைமுறைகளுடன் இணைந்து இசையமைத்துள்ளார்.
- நாக சைதன்யா நடித்து வரும் என்சி22 படத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர்.
ஏறத்தாழ 50 ஆண்டுகாலம் தமிழர்களின் கூடவே கொண்டாட்டம், கோபம், கொதிப்பு, தவிப்பு, சோகம் எல்லாவற்றிலுமே பயணப்பட்டு வந்து கொண்டிருப்பவர் இளையராஜா. திரைப்படத்துறையில் 3 தலைமுறை சக இசையமைப்பாளர்களோடு இளையராஜா இசையமைத்து வருகிறார். கிட்டத்தட்ட 1000 படங்கள். 7000 பாடல்களுக்கு மேல் இளையராஜா இசையமைத்துள்ளார்.

எ பியூட்டிஃபுல் பிரேக் அப்
தற்போது 'எ பியூட்டிஃபுல் பிரேக் அப்' என்ற ஆங்கிலப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாக உருவாகியுள்ளது. அஜித்வாசன் உக்கினா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் க்ரிஷ் முத்ரகடா மற்றும் மேட்டில்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்காக "பவ் டை சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா"-வின் மாயாஜாலமான அசல் ஒலிப்பதிவுகளை இளையராஜா உருவாக்கியுள்ளார். சமீபத்தில் இளையராஜா அளித்திருந்த ஒரு நேர்காணலில், "எ பியூட்டிஃபுல் பிரேக் அப் திரைப்படத்தையும், அதன் இயக்குனரையும் இளையராஜா பாராட்டியிருந்தார்.

எ பியூட்டிஃபுல் பிரேக் அப்
12வது தாதாசாஹேப் பால்கே திரைப்பட விழா விருதுகளில் சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவில் ஸ்ரீகாந்த் கண்டாலாவுக்கும் சிறந்த படத்திற்கான விருதையும் 'எ பியூட்டிஃபுல் பிரேக் அப்' திரைப்படம் பெற்றது. மேலும் சில சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்குபெற்று, சிறந்த படமாக இப்படம் தேர்வாகி வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற 'கம் ஃப்ரீ மீ' பாடல் உலக இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது.
- இசையமைப்பாளர் இளையராஜாவின் 80-வது பிறந்த நாள் சமீபத்தில் நிறைவடைந்தது.
- சென்னை மற்றும் கோவையில் நடைபெற்ற இவரது இசை நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழில் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவின் 80-வது பிறந்த நாள் சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை அடுத்து அவரது இசை நிகழ்ச்சிகள் சென்னை மற்றும் கோவையில் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து நாளை மதுரை ஒத்தக்கடை பள்ளிக்கூட வளாகத்தில், 'இசை என்றால் இளையராஜா' கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக இளையராஜா மதுரைக்கு வந்துள்ளார். இந்த நிலையில் அவர் இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்தார்.

இளையராஜா
தெற்கு கோபுர வாசல் வழியாக கோவிலுக்குள் சென்ற இளையராஜா பக்தர்களோடு பக்தராக நின்று சுவாமி மற்றும் அம்மன் சன்னதி, கால பைரவர் சன்னதி என மொத்தமாக 45 நிமிடங்கள் கோவிலில் வழிபாடு செய்தார். மேலும் தமிழ் வருட பிறப்பு, ஆங்கில வருடப்பிறப்பு, பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் இளையராஜா மீனாட்சியம்மன் கோவிலில் வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது.