என் மலர்
நீங்கள் தேடியது "Prasanth"
- அந்தகன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- ஒவ்வொரு பண்டிகை தினத்திலும் சிறப்பு போஸ்டர் ஒன்றை அந்தகன் படக்குழு வெளியிட்டு வந்தது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் பிரசாந்த், பின்னர் திரை துறையில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்தார். தற்போது சினிமாத்துறைக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.
அவர் நடிப்பில் சென்ற வாரம் வெளியான அந்தகன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்தகன் படம் வெளியானத்தை அடுத்து, சுதந்திர தினத்தன்று அந்தகன் படத்தின் சிறப்பு போஸ்டர் வராதா? என்று நெட்டிசன்கள் இன்று மீம்ஸ்களை பறக்கவிட்டு வந்தனர்.
ஏனெனில் கடந்த 2 ஆண்டுகளாக ஒவ்வொரு பண்டிகை தினத்திலும் சிறப்பு போஸ்டர் ஒன்றை அந்தகன் படக்குழு வெளியிட்டு வந்தது. படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிப்போனாலும் சிறப்பு போஸ்டர் மட்டும் தவறாமல் விடும். இந்த சிறப்பு போஸ்டர்கள் அந்த சமயத்தில் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்தகன் படத்தின் சிறப்பு போஸ்டரை நடிகர் பிரசாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சிறப்பு போஸ்டரை பகிர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Happy Independence day ?? #Andhaganthepianist pic.twitter.com/Pjs23YF6Sl
— Prashanth (@actorprashanth) August 15, 2024
- கோட் திரைப்படத்தில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
- நடிகர் பிரசாந்த், 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் பிரசாந்த், பின்னர் திரை துறையில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்தார். தற்போது கம் பேக் கொடுக்கும் வகையில், மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், நடிகர் பிரசாந்த், 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.
'அந்தகன்' படம் வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 9-ந்தேதியே வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15-ந்தேதிக்கு தங்கலான், டிமாண்டி காலணி 2 வெளியாக உள்ள நிலையில், இதனை கருத்தில் கொண்டு அதற்கு முன்னரே 'அந்தகன்' படத்தை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விரைவில் வெளியிடப்படும். இப்போது விஜய் சாருடன் G.O.A.T படத்தில் நடிக்கிறேன்.
- கட்சி தொடங்கியுள்ள, விஜய்க்கு என் வாழ்த்துகள். அவரை என் சகோதரர் என்றே சொல்லலாம்.
"பெரும் பொருட்செலவில் 'அந்தகன்' படம் பண்ணியிருக்கோம். கூடிய விரைவில் தியேட்டரில் ரிலீஸ் ஆகும்" என்று நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்ட நடிகர் பிரசாந்த் பொதுமக்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "இன்னைக்கு ஜாலியாக நெல்லை பார்க்க வந்தேன், வந்த இடத்தில் வேலை செய்துவிட்டு மீண்டும் கிளம்புகிறேன். ஹெல்மெட் ஒரு லைஃப் ஜாக்கெட் என்கிறார்கள். இது லைஃப் ஜாக்கெட் மட்டுமல்ல, குடும்ப கோட். சாலை விபத்துகளால் பலர் உயிரிழக்கின்றனர். ஹெல்மெட் இல்லாததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கிறது.
அதனால்தான் இந்த ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எனது ஆதரவாளர்கள் சார்பாக நிறைய வேலைகளைச் செய்துள்ளோம். விரைவில் வெளியிடப்படும். இப்போது விஜய் சாருடன் G.O.A.T படத்தில் நடிக்கிறேன். இரண்டு மூன்று புதிய அழைப்புகள் வந்தன. விரைவில், நானும் இந்த பகுதியில் ஏதாவது செய்வேன். G.O.A.T படம் சூப்பராக போய்க் கொண்டிருக்கிறது. தியேட்டர் வந்து ஜாலியாக எஞ்சாய் பண்ணுங்க எல்லோரும் என்று கூறினார்.
கட்சி தொடங்கியுள்ள, விஜய்க்கு என் வாழ்த்துகள். அவரை என் சகோதரர் என்றே சொல்லலாம். மக்களுக்கு சேவை செய்யும் பணி என்பதற்கு ஹார்ட் வொர்க் உட்பட பல கமிட்மெண்ட் இருக்க வேண்டும். விஜய் சாரிடம் அது அதிகம் உள்ளது. எனக்கெல்லாம் அது ரொம்ப கஷ்டம், அதற்கு தைரியம் வேண்டும்.நான் நடிகனா நடித்துக் கொண்டிருக்கிறேன். நடிகன் மட்டுமே இப்போதும். என்னால் மக்களுக்கு என் மூலமாக என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறேன். மக்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு நான் அவர்களுக்கு கைமாறாக இதுபோன்ற பணிகளை செய்கிறேன். அரசியல் நோக்கம் எதுவுல்லை ஏன்னு தெரிவித்துள்ளார்.
- ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவுகளாக காட்சி அளித்தன.
- தமிழக அரசு சார்பில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது.
கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் அணைகள் நிரம்பியதால் சுமார் 1 லட்சம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவுகளாக காட்சி அளித்தன. லட்சக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் தவித்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தமிழக அரசு சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6 ஆயிரம், மற்றவர்களுக்கு ரூ.1000 என வழங்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடிகர் பிரசாந்த், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் மழையால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. இதற்கு முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.
- நடிகர் பிரசாந்த் தற்போது நடித்துள்ள படம் 'அந்தகன்'.
- இந்த படத்தின் இடம்பெற்றுள்ள கண்ணிலே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் அந்தகன். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தை தமிழில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.
இதில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.
இந்நிலையில் அந்தகன் படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணிலே வீடியோ பாடலை அறிவித்தபடி இன்று மாலை 6 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
- நடிகர் பிரசாந்த் தற்போது நடித்துள்ள 'அந்தகன்'.
- இந்த படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் அந்தகன். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தை தமிழில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.
இதில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.
இந்நிலையில் அந்தகன் படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணிலே வீடியோ பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- நடிகர் பிரசாந்த் தற்போது நடித்து வரும் படம் 'அந்தகன்'.
- இந்த படத்தின் பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் அந்தகன். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். 'அந்தகன்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.
அந்தகன் போஸ்டர்
மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். படம் முழுவதும் முடிந்த நிலையில் இறுதிகட்ட காட்சிக்காக "டோர்ரா புஜ்ஜி" என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் விஜய்சேதுபதி இணைந்து பாடியுள்ளனர்.
அந்தகன் போஸ்டர்
இந்த பாடலுக்கு நடனம் அமைத்து இயக்க நடிகர் பிரபுதேவா இணைந்துள்ளார். பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 நடன கலைஞர்கள் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டதும் 'அந்தகன்' படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 'அந்தகன்' படத்தை கலைப்புலி எஸ் தாணு உலகமெங்கும் திரையிட திட்டமிட்டு வருகிறார்.
- 90-களின் காலக்கட்டத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகர் பிரசாந்த்.
- இவர் நடித்து வெளியாகவுள்ள படம் அந்தகன்.
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90-களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் அந்தகன். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார்.
பிரசாந்த்
இந்நிலையில் நடிகர் பிரசாந்த் மீது பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த குமுதினி என்ற பெண் சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நடிகர் பிரசாந்த் ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளதாக வாய்மொழி புகார் ஒன்றை சென்னை, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.
பிரசாந்த்
இதனிடையே பிரஷாந்த் தரப்பில் இருந்து பொய் புகார் அளித்திருப்பதாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் அந்த பெண் மீது புகார் கொடுத்துள்ளார்கள். மேலும், இந்த இரு தரப்பு புகார் மனு மீதும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
- 90-களின் காலக்கட்டத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகர் பிரசாந்த்.
- இவர் நடித்து வெளியாகவுள்ள படம் அந்தகன்.
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90-களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் அந்தகன்.
இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.
வின்னர்
இதைத் தொடர்ந்து பிரசாந்த், வடிவேல் நடிப்பில் வெளியான வின்னர் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்ததை அடுத்து வின்னர் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு நடிகர் பிரசாந்த் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அவர் கூறுகையில், "அந்தகன் விரைவில் வெளியாகும். வின்னர் 2-ஆம் பாகம் முதல் பாகத்தை விட மிக பிரமாண்டமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார். இந்த தகவலினால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.