என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prashant Kishor"

    • தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பீகாரில் பாத யாத்திரை நடத்தி வருகிறார்.
    • அப்போது பேசிய அவர், நிதிஷ்குமார் பா.ஜ.கவுடன் இன்னும் தொடர்பில் உள்ளார் என்றார்.

    பாட்னா:

    பீகாரில் பாத யாத்திரை நடத்தி வரும் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளார்.

    பா.ஜ.க.வுக்கு எதிராக நிதிஷ்குமார் தேசிய அளவில் கூட்டணி உருவாக்கி வருவதாக மக்கள் நினைத்து வருகின்றனர். ஆனால் அவர் பா.ஜ.க.வுடன் தொடர்பு வைத்திருப்பதை அறியும்போது அவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைவார்கள். ஏனெனில் அவர் தனது கட்சி எம்.பி.யும், மாநிலங்களவை துணைத்தலைவருமான ஹரிவன்ஷ் மூலம் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளார்.

    இதற்காகவே அவரது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்யுமாறு நிதிஷ்குமார் கேட்கவில்லை.

    தேவை ஏற்படும்போதெல்லாம் மீண்டும் பா.ஜ.க.வுக்குச் சென்று அவரால் இணைந்து செயல்பட முடியும் என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும். அப்படி கூட்டணி வைத்தால் ஆச்சரியம் இல்லை என தெரிவித்தார்.

    பிரசாந்த் கிஷோரின் இந்த குற்றச்சாட்டை ஐக்கிய ஜனதாதளம் மறுத்துள்ளது.

    • அரசியலில் நிதிஷ் குமார் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்.
    • நிதிஷ் குமார் அர்த்தமற்று பேசி வருகிறார்.

    பாட்னா :

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கும், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே நல்லுறவு நிலவிய காலம் என்று ஒன்று உண்டு. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய துணைத்தலைவர் என்ற நிலைக்கெல்லாம் பிரசாந்த் கிஷார் உயர்ந்தார்.

    ஆனால் அதன் பின்னர் 'ஒரே உறையில் இரு வாள்' பிரச்சினை வெடித்தது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வளர்ந்தன. அதன் விளைவாக பிரசாந்த் கிஷோர் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி விட்டார்.

    தற்போது பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமார் அரசை விமர்சித்து வருகிறார்.

    இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நிதிஷ்குமார், பிரசாந்த் கிஷோர் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

    அதாவது அவர், "பிரசாந்த் கிஷோர் பா.ஜ.க.வுக்காக வேலை செய்து வருகிறார், ஒரு கால கட்டத்தில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை காங்கிரசில் இணைத்து விடுமாறு எனக்கு அவர் ஆலோசனை வழங்கினார்" என்ற தகவலை வெளியிட்டார்.

    இது பீகார் அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தற்போது பீகாரில் 3,500 கி.மீ. தொலைவிலான பாதயாத்திரையை தொடங்கி உள்ள பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமாருக்கு பதிலடி கொடுத்து, ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    நிதிஷ் குமாருக்கு (வயது 71) வயோதிகம் ஒரு பிரச்சினையாகி வருகிறது. அவர் மாயையில் சிக்கி இருப்பதாக தோன்றுகிறது.

    ஒன்றைச் சொல்லிவிட்டு, அவர் முடிக்கும்போது தொடர்பே இல்லாத வேறொன்றுக்கு தாவி விடுகிறார். நான் பா.ஜ.க.வுக்கு வேலை செய்வதாக அவர் நம்புகிறார் என்றால், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று நான் அவருக்கு எதற்காக நான் ஆலோசனை கூறப்போகிறேன்?

    நிதிஷ் குமார் அர்த்தமற்று பேசி வருகிறார்.

    'டெல்யூஷனல்' (மாயை) என்ற ஆங்கில வார்த்தை, நிதிஷ்குமாருக்கு சரியாக பொருந்துகிறது. அரசியலில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார். அவர் யாரை நம்பவில்லையோ, அவர்களைத்தான் சூழ்ந்து இருக்கிறார். இது அவருக்கு பயத்தை தருகிறது. அந்த நடுக்கத்தில்தான் அவர் அர்த்தமற்று பேசி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வழிநெடுகிலும் அவரை ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
    • இந்த யாத்திரை 12 முதல் 15 மாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாட்னா :

    பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதற்காக 'ஜன் சுராஜ்' என்ற பெயரில் பிரசார தளம் ஒன்றை தொடங்கி உள்ளார். இதன் ஒரு பகுதியாக பீகாரில் பாதயாத்திரை நடத்தப்போவதாக அவர் அறிவித்து இருந்தார்.

    அதன்படி காந்தி பிறந்த தினமான நேற்று, பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பிதிகர்வரா காந்தி ஆசிரமத்தில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார். வழிநெடுகிலும் அவரை ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

    மாநிலம் முழுவதும் 3,500 கி.மீ. தொலைவுக்கு தனது ஆதரவாளர்களுடன் பாதயாத்திரை மேற்கொள்ளும் பிரசாந்த் கிஷோர், ஒவ்வொரு பஞ்சாயத்துகளுக்கும் சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். இந்த யாத்திரை 12 முதல் 15 மாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக பாதயாத்திரை குறித்து துனது டுவிட்டர் தளத்தில், 'மிகவும் பின்தங்கிய மற்றும் ஏழை மாநிலமான பீகாரின் அமைப்பு முறையை மாற்ற முடிவு செய்துள்ளேன்' என குறிப்பிட்டு இருந்தார்.

    கடந்த மக்களவை தேர்தலில் மோடிக்காக வியூகங்களை வகுத்த பிரசாந்த் கிஷோர், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் இன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார். #PrashantKishor #NitishKumar #JDU
    பாட்னா:

    பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சிகள் தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் பல திட்டங்களை வகுத்து கொடுப்பதுடன், பிரசாரத்தை ஒருங்கிணைப்பதில் சிறந்தவர் என்ற பெயரை பெற்றவர். கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின் போதும், 2014 மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க கிஷோர் பணியாற்றினார்.

    பின்னர் பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்காக பணியாற்றி வெற்றியை தேடிக் கொடுத்தார். ஆனால், உ.பி.,யில் காங்கிரஸ் சார்பாக களமிறங்கிய அவரது வியூகம் வெற்றி பெறவில்லை. இதனால், சில நாட்கள் அவர் அமைதியாக இருந்தார். 

    இந்நிலையில், இன்று பாட்னாவில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ்குமார் முன்னிலையில், அக்கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்தார். 
    ×