search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Assembly"

    • சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தாக்கல் செய்கிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பட்ஜெட் லோகோவை வெளியிட்டுள்ளார்.

    தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.

    சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பட்ஜெட் லோகோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,

    சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட… என்று பதிவிட்டு லோகோவை அவர் வெளியிட்டுள்ளார்.

    ரூ என்ற எழுத்துடன் 2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை எல்லார்க்கும் எல்லாம் என்று பட்ஜெட் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

    • சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
    • சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

    தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.

    சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

    கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிடுவார். வரும் நிதியாண்டான 2025-26-ம் ஆண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவைக்கு அளிப்பார்.

    இந்த நிலையில் மாநில திட்டக் குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட "தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25"-யை (Economic Survey of Tamil Nadu 2024-25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

    • பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
    • தமிழ்நாடு பட்ஜெட் சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்ய ஏற்பாடு.

    தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

    இந்த நிலையில், நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட்டை சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்கள், மெரினா கடற்கரை, பாண்டி பஜார் சாலை, டைடல் பார்க் சந்திப்பு, கிண்டி பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் 100 பகுதிகளில் பட்ஜெட் நேரலை செய்யப்பட இருக்கிறது.

    • இந்த பட்ஜெட், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு தீட்டி வருகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

    கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிடுவார். வரும் நிதியாண்டான 2025-26-ம் ஆண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவைக்கு அளிப்பார்.

    2021-ம் ஆண்டு தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பற்றி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அதுதொடர்பான அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் வெளியிட வாய்ப்பு உள்ளது.

    சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் மக்களை கவருவதற்கான பல்வேறு திட்டங்கள் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இந்த பட்ஜெட், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அடுத்த 2026-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் வருகிறது. தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டைதான் இந்த அரசு தாக்கல் செய்ய முடியும். எனவே தற்போது தமிழக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்தான் முழுமையாக இருக்கும். அதனால் இந்த பட்ஜெட் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

    பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு தீட்டி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே உள்ள திட்டங்களில் அளிக்கப்படும் உதவித்தொகை இந்த பட்ஜெட் மூலம் அதிகரிக்கப்படுமா? உரிமைத்தொகை பெறுவோரின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா? இலவசமாக பெண்கள் பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? போன்ற கேள்விகளை பெண்கள் மத்தியில் பட்ஜெட் எழுப்பியுள்ளது.

    இந்த பட்ஜெட் உரையை சட்டசபையில் 2 மணி நேரம் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு படிப்பார். அவர் படிக்க படிக்க அந்த தகவல்கள் நேரலையில் வெளியிடப்படும். அவையில் வைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டரில் பட்ஜெட்டை எம்.எல்.ஏ.க்கள் வாசிப்பார்கள். பட்ஜெட்டை அமைச்சர் வாசித்து முடித்ததும் அவையின் அன்றைய நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.

    அதன் பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் நடத்தப்படும். அவையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை எடுக்க வேண்டும்? என்பது உள்பட அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சபாநாயகர் வெளியிடுவார்.

    பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் மறுநாளில் வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் தாக்கல் செய்வார். அந்த வகையில் வேளாண்மை பட்ஜெட் 15-ந் தேதி (சனிக்கிழமை) தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 17-ந் தேதி சட்டசபையில் பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடங்கும்.

    அப்போது சட்டசபையில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் கருத்துகளை எடுத்துரைப்பார்கள். 4 அல்லது 5 நாட்கள் இந்த விவாதம் நடைபெற்று, எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளுக்கு நிதித்துறை அமைச்சர் பதில் அளித்து பேசுவார். அதன் பின்னர் சில நாட்கள் இடைவெளி விடப்பட்டோ அல்லது தொடர்ச்சியாகவோ சட்டசபை நடைபெறும். அப்போது ஒவ்வொரு அரசுத் துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடத்தப்படும்.

    அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் தேதிகளில் அந்தந்த துறைக்கான விவாதம் நடத்தப்பட்டு, அன்றே அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். பின்னர் துறைகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதி ஒதுக்கீடு குறித்து எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, அந்தத் துறைக்கு நிதி ஒதுக்கப்படும்.

    இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

    2025-2026-ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் 2024-2025-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியவை வரும் 21-ந் தேதியன்று அவைக்கு அளிக்கப்படும்.

    • தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் கூட்டத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார்.
    • கவர்னர் உரையுடன் தொடங்கும் முதல் கூட்டத்தில், அரசின் ஒராண்டுக்கான செயல்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும்.

    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 17ம் தேதி முதல் 19ம் தேதிவரை நடைபெற்றது. அந்த கூட்டத் தொடரை கவர்னர் இன்று முடித்து வைத்துள்ளார். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் முதல் வாரம் கவர்னர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். இந்த முறை மழை பாதிப்பு தொடர்பான நிவாரணப் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதால் 2023ஆம் ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடரை பொங்கலுக்கு பின்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் கூட்டத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். தொடர்ந்து அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். அத்துடன் அன்றைய சட்டசபை கூட்டம் நிறைவடையும். கவர்னர் உரையுடன் தொடங்கும் முதல் கூட்டத்தில், அரசின் ஒராண்டுக்கான செயல்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகும்.

    இந்தி திணிப்பிற்கு எதிரான கருத்துகள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாகவும் உரையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

    • தி.மு.க. அரசின் செயல் திட்டம் குறித்தும், அரசு நிறைவேற்ற இருக்கும் புதிய திட்டங்கள் குறித்தும் ஆளுநர் உரையில் வெளியிடப்படும்.
    • கூட்டத்தொடரில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர், பொங்கலுக்கு முன்பே ஜனவரி முதல் வாரத்தில் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். அதில் அரசுத் திட்டங்கள் மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் பற்றி ஆளுநர் குறிப்பிடுவார். தி.மு.க. அரசின் செயல் திட்டம் குறித்தும், அரசு நிறைவேற்ற இருக்கும் புதிய திட்டங்கள் குறித்தும் ஆளுநர் உரையில் வெளியிடப்படும்.

    இந்நிலையில், தமிழக அமைச்சரவை ஜனவரி 4ம் தேதி 11 மணிக்கு கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் குறித்தும், கூட்டத்தொடரில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, அ.தி.மு.க. பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப உள்ளது. சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை, நெய் விலை, வெண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் பற்றி உறுப்பினர்கள் காரசாரமாக விவாதிக்க வாய்ப்பு உள்ளது.

    • சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.
    • தற்போதைய சூழ்நிலையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.

    இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அடுத்த இருக்கை ஒதுக்கப்படும்.

    கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போதைய சூழ்நிலையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

    • கவர்னர் ஆர்.என்.ரவி 9-ந்தேதி சட்டசபையில் உரையாற்ற இருப்பதையொட்டி சம்பிரதாயப்படி அவரை சபாநாயகர் நேரில் சென்று அழைப்பு விடுக்க வேண்டும்.
    • மரபுபடி சபாநாயகர் அப்பாவு இன்று கிண்டி மாளிகைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.

    சென்னை:

    ஆண்டு தோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் 2023-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 9-ந்தேதி கூடுகிறது.

    அன்றைய தினம் காலை 10 மணிக்கு கூடும் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரை நிகழ்த்துவார். அதில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், சாதனைகள், முக்கிய அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெறும்.

    சட்டசபை கூடும் தேதியை சபாநாயகர் அப்பாவு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி 9-ந்தேதி சட்டசபையில் உரையாற்ற இருப்பதையொட்டி சம்பிரதாயப்படி அவரை சபாநாயகர் நேரில் சென்று அழைப்பு விடுக்க வேண்டும்.

    அந்த மரபுபடி சபாநாயகர் அப்பாவு இன்று கிண்டி மாளிகைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.

    அப்போது சட்டசபையில் உரையாற்ற வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை கவர்னர் ஏற்றுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது சட்டசபை செயலாளர் சீனிவாசன் உடன் இருந்தார்.

    9-ந்தேதி சட்டசபையில் கவர்னர் ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்ததும் அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு தமிழில் அந்த உரையை வாசிப்பார். இந்த உரை முழுமையாக தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகும். அத்துடன் அன்றைய கூட்டம் முடிவடையும்.

    அதன் பிறகு அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யும்.

    அநேகமாக 11-ந்தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டம் முடிந்ததும் பட்ஜெட் தாக்கல் செய்ய பிப்ரவரி மாதம் மீண்டும் சட்டசபை கூடும்.

    சட்டசபை கூட்டத்தொடரில் ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சியினர் சரமாரி புகார் தெரிவிக்கவும், விமர்சனங்களை முன் வைக்கவும் பல்வேறு விஷயங்களை பட்டியல் எடுத்து வைத்துள்ளனர். இவற்றுக்கு பதிலடி கொடுக்க ஆளும் கட்சி அமைச்சர்களும் தயார் நிலையில் பல்வேறு குறிப்புகளை தயார் செய்து வருகின்றனர்.

    இதனால் சட்டசபை கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கொள்கை முடிவுகள் சம்பந்தமாக அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக எடுத்துக்கூறினார்.
    • ஒவ்வொன்றுக்கும் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

    சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் புதிதாக அமைச்சரவையில் இடம்பெற்ற உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 34 அமைச்சர்களும் பங்கேற்றனர்.

    இதில் உதயநிதி ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் வரிசையில் துரை முருகன், ஐ.பெரியசாமி. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு அடுத்தபடியாக அமர்ந்திருந்தார்.

    அமைச்சரவை கூட்டம் தொடங்கியதும் தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சி நிரலை பட்டியலிட்டார்.

    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கொள்கை முடிவுகள் சம்பந்தமாக அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக எடுத்துக்கூறினார். பின்னர் ஒவ்வொன்றுக்கும் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.

    இதில் பல்வேறு தொழில் கொள்கைகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டதாக தெரிகிறது. தமிழக சட்டசபை அடுத்த வாரம் 9-ந்தேதி கூடும் நிலையில் அரசின் திட்டங்கள், புதிய கொள்கை முடிவுகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    தமிழக அரசின் சாதனைகள், திட்டங்கள், அரசின் நிலைப்பாடுகள் சட்டசபையில் கவர்னர் உரையில் இடம்பெறும் என்பதால் இன்றைய அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    • சட்டசபை 11, 12-ந்தேதிகளில் 2 நாட்கள் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
    • தேவைப்பட்டால் 13-ந்தேதி வரை நடத்துவதற்கு முடிவு செய்வார்கள்.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரம் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நடத்துவது மரபாக உள்ளது.

    அந்த வகையில் இந்த ஆண்டு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சட்டசபை கூட்டம் தொடங்க உள்ளது.

    முதல் நாள் கவர்னர் ஆர்.என்.ரவி காலை 10 மணிக்கு உரையாற்ற உள்ளார். இதற்காக அவர் காலை 9.30 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு வருவார். 9.50 மணி அளவில் சட்டசபை வளாகத்தில் அவரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் இருவரும் மரபுபடி பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள்.

    பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபைக்குள் அழைத்து செல்லப்படுவார். அவருக்கு முன்னதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்து இருப்பார்கள்.

    கவர்னர் வந்ததும் அவர்கள் அனைவரும் எழுந்து வணக்கம் தெரிவிப்பார்கள். பதிலுக்கு கவர்னர் வணக்கம் தெரிவித்து விட்டு அமருவார். அதன் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை நிகழ்ச்சிகள் தொடங்கும்.

    கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட உரையை வாசிப்பார். அவர் உரையாற்றி முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு தமிழாக்கத்தை வாசிப்பார். அதுவரை கவர்னர் சபையில் அமர்ந்து இருப்பார்.

    வழக்கமாக கவர்னர் உரை புத்தகமாக தயாரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு முதல் காகிதம் இல்லாத உரையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கணினி திரையில் உள்ள உரையை கவர்னரும், சபாநாயகரும் பார்த்து படிப்பார்கள்.

    கவர்னர் உரை முடிந்ததும் கவர்னர் ஆர்.என்.ரவியை மரபுபடி வழியனுப்பி வைப்பார்கள். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில் சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்வார்கள்.

    10-ந்தேதி சட்டசபை கூடியதும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டத்தை ஒத்திவைக்க வாய்ப்புள்ளது. எனவே சட்டசபை 11, 12-ந்தேதிகளில் 2 நாட்கள் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. தேவைப்பட்டால் 13-ந்தேதி வரை நடத்துவதற்கு முடிவு செய்வார்கள்.

    சட்டசபை கூடுவதை முன்னிட்டு பேரவை வளாகத்தை சுத்தப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. நாளை வரை சட்டசபை முழுவதையும் சுத்தப்படுத்தி தயார்படுத்த உள்ளனர். ஒலிப்பெருக்கிகளை சோதனை செய்து வருகிறார்கள்.

    எம்.எல்.ஏ.க்கள் தங்கும் அறைகளும், தலைவர்களின் அறைகளும் வர்ணம் பூசப்பட்டு தயார்படுத்தப்பட்டு வருகிறது. நாளை மாலைக்குள் இந்த பணிகளை முடித்து விட திட்டமிட்டு உள்ளனர்.

    சமீபத்தில் தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டார். இதையடுத்து சட்டசபையில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன் வரிசையில் அமரும் வகையில் இருக்கை அமைக்கப்பட்டு உள்ளது. இதுவரை பின் இருக்கையில் இருந்த உதயநிதி ஸ்டாலின் இந்த ஆண்டு முதல்-அமைச்சர் அந்தஸ்துடன் முதல் வரிசைக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கூட்டத்தொடரில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் விவகாரம் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது. சில சட்ட திருத்த மசோதாக்களும் கொண்டு வரப்பட உள்ளது.

    • சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்வார்கள்.
    • கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட உரையை வாசிப்பார்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரம் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நடத்துவது மரபாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு நாளை (திங்கட்கிழமை) சட்டசபை கூட்டம் தொடங்க உள்ளது.

    முதல் நாள் கவர்னர் ஆர்.என்.ரவி காலை 10 மணிக்கு உரையாற்ற உள்ளார். இதற்காக அவர் காலை 9.30 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு வருவார். 9.50 மணி அளவில் சட்டசபை வளாகத்தில் அவரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் இருவரும் மரபுபடி பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள்.

    பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபைக்குள் அழைத்து செல்லப்படுவார். அவருக்கு முன்னதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்து இருப்பார்கள்.

    கவர்னர் வந்ததும் அவர்கள் அனைவரும் எழுந்து வணக்கம் தெரிவிப்பார்கள். பதிலுக்கு கவர்னர் வணக்கம் தெரிவித்து விட்டு அமருவார். அதன் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை நிகழ்ச்சிகள் தொடங்கும்.

    கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட உரையை வாசிப்பார். அவர் உரையாற்றி முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு தமிழாக்கத்தை வாசிப்பார். அதுவரை கவர்னர் சபையில் அமர்ந்து இருப்பார்.

    வழக்கமாக கவர்னர் உரை புத்தகமாக தயாரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு முதல் காகிதம் இல்லாத உரையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கணினி திரையில் உள்ள உரையை கவர்னரும், சபாநாயகரும் பார்த்து படிப்பார்கள். கவர்னர் உரை முடிந்ததும் கவர்னர் ஆர்.என்.ரவியை மரபுபடி வழியனுப்பி வைப்பார்கள்.

    அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில் சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்வார்கள்.

    10-ந் தேதி சட்டசபை கூடியதும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டத்தை ஒத்திவைக்க வாய்ப்புள்ளது. எனவே சட்டசபை 11, 12-ந்தேதிகளில் 2 நாட்கள் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. தேவைப்பட்டால் 13-ந்தேதி வரை நடத்துவதற்கு முடிவு செய்வார்கள்.

    • தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
    • ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. காலை 10 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை தொடங்கினார்.

    ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முழக்கங்கள எழுப்பினர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இன்று இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவருக்கும் அருகருகே இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    ×