என் மலர்
நீங்கள் தேடியது "a world record"
- இவர் கோயம்புத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்
- வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்டு நிறுவனமும் சேர்ந்த விக்கிக்கு உலக சாதனை விருது வழங்கியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தை சேர்ந்த முத்து- உமாபதி தம்பதியின் மகன் விக்கி. இவர் கோயம்புத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். விக்கி சிலம்பம் போட்டியில் 2 உலக சாதனைகளை படைத் துள்ளார். கள்ளக்குறிச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்த சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளில் பங்கேற்று அதிக கேடயங்கள், பதக்கங் கள், சான்றிதழ்களை வென்றுள்ளார். இந்நிலை யில் 3 மாதங்களுக்கு முன் பானை மீது நின்று 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தார். இதை பாராட்டி குளோபல் நிறுவனம் விருது வழங்கியது.
அதைத்தொடர்ந்து புதிய முயற்சியாக முட்டி போட்டு கொண்டே 2 கைகளிலும் சிலம்பும் சுற்றிக்கொண்டு 12.36 நிமிடத்தில் 1 கிலோ மீட்டரை கடந்து சாதனை படைத்தார். எக்சலண்ட் புக் ஆப் ரெக்கார்டு நிறுவனம் மற்றும் வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்டு நிறுவனமும் சேர்ந்த விக்கிக்கு உலக சாதனை விருது வழங்கியது. இந்நிலையில் விருதுகள் மற்றும் சான்றிதழ்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத் தின் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆகியோரிடம் காண்பித்து வாழ்த்துக்கள் மற்றும் ஆசிபெற்றார். அப்போது ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், மாநில மருத்துவர் அணி செயலாளர் கம்பன், அண்ணாதுரை எம்.பி., எம்.எஸ்.குமார் முகிலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.