என் மலர்
முகப்பு » Aadhaar burning
நீங்கள் தேடியது "Aadhaar burning"
- உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆதார் அட்டை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- 15 ஆண்டுகளாக பணி செய்து வந்த 28 பணியாளர்களை திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 15 ஆண்டுகளாக பணி செய்து வந்த 28 பணியாளர்களை திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 35 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையிலும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை.
ஆகையால் ஆதார் அட்டை நகலை எரித்து எங்களுக்கு குடியுரிமை தேவையில்லை கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் நிறுத்தி வைக்கப்பட்ட பிடிப்பு தொகை வழங்க வேண்டும் என கோஷத்தில் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
×
X