search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadhaar revision camp"

    • பள்ளி மாணவர்களுக்கு ஆதார் திருத்த முகாம் நடந்தது.
    • 5 வயதை கடந்த மாணவ-மாணவிகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

    மானாமதுரை

    மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் ஆதார் அட்டை திருத்த முகாம் நடைபெற்றது. எமனேசுவரம், தெ.புதுக்கோட்டை ஆகிய அஞ்சலகங்கள் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் ஆதார் அட்டைகளை புதுப்பித்து கொள்ளவும், பெயர், முகவரி, புகைப்படம், கைரேகை, கைப்பேசி எண் உள்ளிட்ட திருத்தங்கள் செய்யவும் 5 வயதை கடந்த மாணவ-மாணவிகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுரு நாதன், ஆசிரியர்கள் செய்தனர். அஞ்சல் துறை சார்பில் வர்த்தக மேலாளர் பாலு, தபால் அதிகாரி தீனதயாளன், தொழில் நுட்ப உத வியாளர்கள் மஞ்சுளா, நந்தினி, செண்பகா தேவி ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர். 

    ×