என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Aadi amman"
- அன்று வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும்.
- அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும்.
அன்றைய தினம் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்து விளக்கேற்றி, நிவேதனமாக பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து, லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும்.
அன்று வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும்.
அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும். ஆடி வெள்ளியில்தான் வரலட்சுமி விரதம் வரும்.
சில வருடங்களில் இது ஆவணியிலும் அமைந்துவிடும். இவ்வாண்டு ஆவணி முதல் வெள்ளியில் வரலட்சுமி விரதம் வருகிறது.
பொதுவாக ஆடி வெள்ளிகளில் மாலை ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும். 108, 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வார்கள்.
தருமபுர ஆதின தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடி வெள்ளியில் நவசக்தி அர்ச்சனை செய்வார்கள்.
ஒன்பது சிவாச்சாரியார்கள் ஒன்பது வகை மலர்களால் ஒன்பது சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை எனப்படும்.
புதுச்சேரி அருகே வங்கக் கடலோரம் அமைந்துள்ள வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் முதல் வெள்ளியிலிருந்து கடைசி வெள்ளி வரை எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் விசேஷ பூஜைகளும், விதம் விதமான பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறும்.
ஐந்தாம் வெள்ளியன்று தேர்த் திருவிழா நடைபெறும். இதை அரசாங்க விழாவாகக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள்.
புதுச்சேரி கவர்னர் தேர்வடத்தை இழுத்து விழாவைத் தொடங்கி வைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.
ஆடி மாதம் முழுதும் இவ்வூரில் விழாக்கோலம்தான்.
சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்துகின்றனர்.
இவ்வம்மன் காதுகளில் உள்ள தாடங்கங்களில் ஸ்ரீ சக்கரம் உள்ளது. ஆடி வெள்ளியன்று, இவ்வம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார்.
எனவே பள்ளிப் பிள்ளைகள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுதல் அதிக சிறப்பாகும்.
வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் குழுக்களாக 108, 1008 குத்துவிளக்குப் பூஜைகளை செய்யலாம்.
அம்மன் பூஜை செய்யும் இல்லத்தில் செல்வம் சேரும்.
திருவானைக்காவலில் ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமிதேவியாகவும், உச்சிக்கால வேளையில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள்.
ஆடி வளர்பிறை துவாதசியில் துளசி பூஜை செய்வதால் பல நற்பலன்களைப் பெறலாம்.
துளசி மாடம்முன் கோலமிட்டு, மாடத்திற்குப் பொட்டிட்டு, துளசிக்கு மாலையிட்டுப் பூஜிக்க வேண்டும். குளித்தபின்தான் துளசிக்கு நீரூற்ற வேண்டும்.
பிள்ளையார்பட்டி விநாயகருக்கு தினமும் 108 மோதகம் படையல்
வேறு எந்த தலத்திற்கும் இல்லாத பல சிறப்புகளைக் கொண்டவராக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வீற்றிருக்கிறார்.
மற்ற விநாயகரின் உருவத்திலிருந்து பிள்ளையார்பட்டி விநாயகர் முற்றிலும் மாறுபட்டவர்.
குடைவரைக் கோவிலாக உள்ள இக்கோவிலில் புடைப்புச் சிற்பமாக விநாயகர் வடிவம் அமைந்துள்ளது.
இரு கைகளுடன், பாச அங்குசம் போன்ற படைக்கலன்களின்றி காணப்படுகிறார்.
கால்களை மடக்கிய நிலையில் அமர்ந்த கோலத்தில், கையில் சிவலிங்கத்தை தாங்கிக் கொண்டு வீற்றிருக்கிறார்.
உலக நன்மைக்காக சிவதியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். கிரீடம் இல்லாமல் சடை முடி தாங்கி எளிமையானவராக உள்ளார்.
இவருக்கு முற்காலத்தில் தேசி விநாயகர் என்றே பெயரே வழங்கி வந்திருக்கிறது. தினமும் இவருக்கு 108 மோதகங்கள் படைக்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தியன்று முக்குருணி அளவில் (சுமார் 24 கிலோ அரிசியால் செய்த கொழுக்கட்டை) ஒரே மோதகத்தைப் படைக்கின்றனர்.
- சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.
- கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கைகூடும்
ஆடி மாத வளர்பிறை செவ்வாய் கிழமை அல்லது வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் 6 மணிக்கு மேல் வீட்டின் தென்மேற்கு பகுதியில் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த கன்னிப் பெண்களை மனதில் நினைத்து தலை வாழை இலையில் வடை, பாயாசத்துடன் உணவு, சர்க்கரை பொங்கல், அதிரசம் அல்லது பணியாரம் போன்ற இனிப்பு பண்டங்களை தேங்காய் வெற்றிலை, பாக்கு வாழைப்பழத்துடன் படைக்க வேண்டும்.
மேலும் இறந்த கன்னியின் வயதுக்கு ஏற்ற உடை (பாவாடை, சட்டை, தாவணி, சேலை ) மஞ்சள் கிழங்கு, கண்ணாடி, சீப்பு, வளையல், பொட்டு, வாசனையான ஜாதி மல்லி, குண்டு மல்லி மரிக்கொழுந்து படைக்க வேண்டும். தீபம் ஏற்ற வேண்டும்.
போட்டோ வைக்க வேண்டிய அவசியம் இல்லை.சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் நிரப்பி கன்னியை பூஜையில் ஆவாகனம் செய்து உங்களின் கோரிக்கைகளை கூற வேண்டும்.
பிரார்த்தனை நிறைவேற உங்களின் ஆத்மார்த்த ஈடுபாடு மற்றும் வழிபாடு மிக முக்கியம்.
இதை கூட்டாக பகை மறந்து அங்காளி, பங்காளிகளுடன் இணைந்து வழிபட பலன் இரட்டிப்பாகும்.
பிறகு பூஜையில் படைத்த உணவை பயபக்தியுடன் அனைவரும் உண்ண வேண்டும்.
படைத்த ஆடை மற்றும் மங்கலப் பொருட்களை (மூங்கில் கூடை நார்ப்பெட்டியில்) வைத்து பின்னர் வீட்டின் தென்மேற்கு பகுதியான கன்னி மூலையில் உயரமான இடத்தில் இந்த பெட்டியை வைக்க வேண்டும். முதலாண்டு வைத்து படைத்த கன்னிப் பெட்டியை மறு ஆண்டுதான் எடுக்க வேண்டும்.
கன்னி பெட்டி உள்ள அறைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் இடலாம்.
மறு வருடம் கன்னி வழிபாடு செய்யும் போது வீட்டை சுத்தம் செய்து விட்டு பெட்டியை திறக்க வேண்டும். பெட்டியை திறந்தவுடன் பூ வாசம் மணக்கும். பூ வாசம் மணந்தால் கன்னி தெய்வம் துடியாக இருப்பதாக நம்பிக்கை. அதற்குள் வைத்திருந்த துணியை குடும்பத்தில் உள்ள நிறைவேறாத பிரார்த்தனை உள்ள பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.
இதை பல குடும்பத்தினர் வீட்டு சாமி கும்பிடுதல் என்றும் கூறுவார்கள். இந்த வழிபாட்டை ஆடி மாதங்களில் கடை பிடிக்க முடியாதவர்கள் தை மாதங்களிலும் வழிபடலாம். கன்னி தெய்வத்தை வழிபட வெள்ளிக்கிழமையை விட செவ்வாய்கிழமை தான் ஏற்ற நாள்.
சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் செய்வினை கோளாறு நீங்கும். பேய் பிசாசு அண்டாது. நோய் நொடிகள் தீர்ந்து விடும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள்.
- இப்படி ஒரு கன்னி வழிபாடு பல குடும்பத்திற்கு தெரியவும் செய்யாது.
- பெற்றோர்கள் செய்து வந்த பூஜையை குடும்பத்து ஆண் வாரிசுகள் தொடர வேண்டும்.
பெண்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் தமிழ்நாட்டில் தொன்று தொட்டே இருந்து வருகிறது. ஒவ்வொரு தமிழ் குடும்பத்திலும் பிறந்த பெண் குழந்தைகளை மகாலட்சுமியின் அம்சமாகவே பாவிக்கிறார்கள். பூமியில் பிறந்தவர்கள் இறந்தால் அவர்களை தெய்வத்திற்கு சமமாக பாவிப்பது நமது மரபு.
அதுவும் வீட்டில் பிறந்த ஒரு பருவப்பெண் மணம் முடிக்காமல் கன்னியாக இறந்தால் அவளை கன்னி சக்தியாக வழிபடும் பண்பாடு நமது மரபில் இருந்து வருகிறது.
இறந்த கன்னிப் பெண்கள் தமது குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் சக்தி படைத்தவர்கள்.
ஒரு பருவப் பெண் கன்னி கழிந்தால் மட்டுமே முழுமையான பெண்ணாகிறாள்.பண்டைய காலத்தில் பால்ய விவாகம் (குழந்தை திருமணம்) மிகுதியாக இருந்தது. மருத்துவ வசதிகள் குறைவாக இருந்த காரணத்தால் நோய் தாக்கம் அல்லது இயற்கை சீற்றம் போன்ற பல்வேறு காரணத்தால் கணவன் இறந்தால் தன் வாழ்நாள் முழுவதும் கன்னி கழியாமல் , மறு திருமணமும் செய்யாமல் தன் புகுந்த வீட்டில் அல்லது பிறந்த வீட்டு உறுப்பினர்களுக்கு சேவை செய்தே தங்கள் வாழ்நாளை கழித்தனர். பல குடும்பங்களில் திருமணமாகாமல் கன்னியாகவே இருந்து உடன் பிறந்தவர்களின் குழந்தைகளையும் வளர்த்து இருக்கிறார்கள்.
பழங்காலத்தில் ராஜ குடும்பத்தினர், ஜமீன்கள் போன்ற பலர் அழகிய பருவ வயது பெண்களை தார்மீகமற்ற முறையில் கன்னிகைகளை கைப்பாவைகளாக பயன்படுத்தி வந்தார்கள். இது பற்றிய பல்வேறு புராண சம்பவம் மற்றும் கதைகளை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.
பல கன்னிப் பெண்கள் தங்கள் கன்னித்தன்மையையும் , பாரம்பரிய குடும்ப கவுரவத்தை காக்கவும் தாங்களே தங்களை மாய்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு சில குடும்பங்களில் பருவம் அடைந்த பருவப் பெண்கள் காதலித்தால் குடும்ப கவுரவத்தை காக்க பருவமடைந்த கன்னியை உடன் பிறந்தவர்கள் அல்லது பெற்றோர்கள் கொலையும் செய்து இருக்கிறார்கள்.
இந்தக் கன்னிகள் தங்களின் சராசரி வாழ்வைத் தவற விட்டவர்கள். அல்லது துச்சமாகத் தூக்கியெறிந்தவர்கள்.
கன்னித்தன்மையைக் கொடுத்து தாய்மையைப் பரிசாகப் பெறாமலேயே இறந்தவர்கள். இதனாலேயே சராசரி பெண்கள் ரட்சிக்கும் தெய்வ நிலைக்கு உயர்ந்து விட்டவர்கள்.
மிக பிரபலமாக கன்னி தெய்வங்கள் போற்றப்படுவதற்கு இது போன்ற பல காரணங்கள் உண்டு. தன் கன்னித்தன்மை வேறு குடும்பத்து ஆணுக்கு கொடுத்து மனித குலத்தை விருத்தி அடையச் செய்யும் பெண்கள் மகாசக்திகள் தான்.
பெண்களால் மட்டுமே ஒருவரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். கணவனுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது தன் பிறந்த வீட்டு சீதனத்தை கொடுத்து குடும்ப கவுரவத்தை காக்கிறார்கள். பல பெண்கள் கருக்கலைப்பில் தங்கள் உயிரையும் இழந்து இருக்கிறார்கள்.
தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை கண்டறிய உருவாக்கப்பட்ட ஸ்கேன் என்ற கருவி பல பெண் குழந்தைகளை தாயின் கருவறையிலேயே கல்லறையாகச் செய்து பெண்களின் விகிதாசாரத்தை குறைத்துவிட்டது. தாயின் கருவறையில் இறந்த பல பெண் குழந்தைகளின் சாபம் தான் குழந்தையின்மை மற்றும் திருமணத்தடைக்கு பிரதானமான காரணம். நாட்டில் பெண்களை விட ஆண்களே அதிகமாக இருப்பதால் தான் திருமணம் என்ற அத்தியாயமே இல்லாமல் பல ஆண்கள் இருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல கலாச்சார மாற்றத்தால் குடும்பத்தில் கன்னியாக இறந்த கன்னிகைகளை வழிபட தவறி விட்டனர். இல்லையில்லை மறந்தே விட்டனர்.
இப்படி ஒரு கன்னி வழிபாடு பல குடும்பத்திற்கு தெரியவும் செய்யாது. பெற்றோர்கள் செய்து வந்த பூஜையை குடும்பத்து ஆண் வாரிசுகள் தொடர வேண்டும்.
காலச் சூழல் காரணமாக வழிபாட்டை மறந்து வாழ்ந்த பல குடும்பங்கள் வீழ்ந்து போய் வாழ்ந்த சுவடே இல்லாமல் இருக்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்