என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Aadi Month"
- இந்த ஆண்டு ஆடிப்பூரம் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
- ஆடிப்பூரம் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது.
ஆடி மாதத்திலேயே அம்பாளுக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பூரம். ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும். ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள் என்கின்றன புராணங்கள். ஆண்டாள் அவதார நட்சத்திரமும் ஆடிப்பூரம்தான். இந்த ஆண்டு ஆடிப்பூரம் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பொதுவாக ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். ஆடிப்பூரம் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது.
இது அம்பாளுக்குரிய திருநாளாகும். இந்த நாளில்தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை தொடங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.
அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். ஆனால் இதில் வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரமாகும். அன்னை உளம் மகிழ்ந்து அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம் ஆகும்.
இந்த ஆடிப்பூரத்தில் அம்பாளின் அருளை பெற ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும் என்பது நம்பிக்கை.
- ஆடி மாத பவுர்ணமியான இன்று ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
- சங்கரன்கோவிலில் அரியும் சிவனும் ஒருங்கே இணைந்து ஓர் உருவில் காட்சி கொடுத்தனர்.
சங்கரன்கோவில்:
சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக அரியும் சிவனும் ஒண்ணு என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், சங்கரநாராயணராக தோன்றிய அற்புதமான திருத்தலம், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம்.
இக்கோவிலில் ஆடி மாத பவுர்ணமியான இன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
இங்குள்ள கோமதி அம்மன் சன்னிதி முன், நடு மண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கிறது. இந்த நாகச்சுனை இருக்கும் இடத்தில் அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர்.
சங்கன் சிவபெருமான் மீதும், பதுமன் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தி கொண்டிருந்தனர். இருவரும் சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என தங்களுக்குள் வாதம் செய்தனர். இது பற்றி தெரிந்து கொள்ள பார்வதி தேவியிடம் சென்று முறையிட்டனர்.
அம்பாள் ஈசனை வேண்ட, அவர் அம்பாளை பொதிகை மலைப்பகுதியில் புன்னை வனத்தில் தவம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பாள் தற்போது சங்கரநாராயணர் கோவில் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்து தவம் செய்தார். அப்போது ஈசன் சங்கர நாராயணராக வந்து அம்பாளுக்கு காட்சி கொடுத்தார்.
அரியும் சிவனும் ஒருங்கே இணைந்து ஓர் உருவில் காட்சி கொடுத்தனர். இந்தக் காட்சியை அம்பாளின் அருளால் சங்கனும், பதுமனும் தரிசித்து நற்பேறு பெற்றனர்.
சங்கரநாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில் தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடைபிடிக்கிறான்.
அதேபோல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான்.
இவ்வாறு தவம்செய்த அம்பாளுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக திருக்காட்சி கொடுத்த மாதம் ஆடி மாதம் என்கிறது புராணம். இதைத்தான் இன்று ஆடித்தபசு என கொண்டாடுகிறோம்.
- சங்கரன்கோவிலில் ஆடி தபசு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
- பெரிய பாளையத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
1. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.
2. சென்னை புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில் பெரிய பாளையத்தம்மன் கோவிலில் தான் ஆடி திருவிழா மிக, மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
3. கள்ளழகர் கோவிலில் விமரிசையாக ஆடித் தேரோட்டம் நடைெபறும்.
4. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு 5 நாட்கள் நடை திறந்து பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.
5. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீவனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதம் இந்த கோவிலில் பிரமாண்ட தீ மிதி திருவிழா நடைபெறும். சுற்று வட்டாரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
6. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.
7. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைக்கொட்டு விழா நடை பெறும் பத்து நாட்களில், ஆடி வீதி நான்கிலும் அம்மன் வலம் வருவார்.
8. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் ஆண்டாளுக்கு ஆடிப்பூர உற்சவம் மூன்று நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும்.
9. கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவில் ஆடிப் பதினெட்டில் மும்மூர்த்திகளும் காவிரிக்கு எழுந்தருள்வார்கள். அன்று இரவு பச்சை மண்ணில் பானை செய்து, மா விளக்கு, காதோலை, கருகமணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை அதில் வைத்து விட்டு வருவர்.
10. தமிழ்நாட்டில் பண்டை காலத்தில் காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி ஆகிய 3 நதிகளிலும் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த 3 ஆறுகளில் தண்ணீர் பெருகுவதை முவ்வாறு பதினெட்டு என்று குறிப்பிட்டுள்ளனர்.
11. ஆடி மாதம்தான் கிராம தெய்வங்களான மதுரை வீரன், கருப்பண்ணசாமி போன்றவைகளுக்கு சிறப்பான பூஜைகள் நடத்தப்படும்.
12. ஆடி மாதம் குற்றால ஈசனை வணங்கி அருவியில் குளித்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
13. திருச்சி அருகே உள்ள திருநெடுங்காநாதர் கோவிலில் ஆடி மாதம் முழுவதும் சூரிய ஒளி மூலவர் மீது படுவது சிறப்பாக கருதப்படுகிறது.
14. சேலத்தில் ஆடிமாதம் நடக்கும் செருப்படிதிருவிழா தமிழகத்தில் வேறு எங்கும் காணமுடியாத விழாவாகும். வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம் கொண்டு வருவார்கள். பூசாரி பக்தர் மீது 3 தடவை மெல்ல நீவிவிடுவார்கள். இதுதான் செருப்படித் திருவிழா.
15. சென்னை திருநின்றவூரில் உள்ள நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து மஞ்சள் ஆடை தரித்து பய பக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.
16. கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் மூன்று தேவிகளுக்கும் முதல் மூன்று வாரங்கள் பூக்களால் தினமும் அலங்காரம் செய்வார்கள். நான்காவது வாரம் காய்கறிகளால் அலங்காரம் செய்வார்கள். ஐந்தாவது வாரம் பல வகை பழங்களால் அலங்காரம் செய்வார்கள். கடைசி வெள்ளியன்று வரலட்சுமி நோன்பு விழா நடைபெறும். அதில் மாங்கல்ய சரடு வைத்துப் பூஜித்து பெண்மணிகள் அனைவருக்கும் வழங்குவார்கள்.
17. ஆடி மாதத்தில் திருநெல்வேலி திரிபுரபேரவியையும் மகாமாரியம்மனையும் வணங்குவது சிறப்பாகும்.
18. செஞ்சிக் கோட்டை அருகே உள்ள கமலக்கண் ணியம்மன் ஆலயத்தில் ஆடிமாதம் பெரிய அளவில் விழா நடைபெறும். அப்ேபாது 10,000 ேபருக்கு அன்னதானம் அளிப்பார்கள்.
19. தகடூரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி ஆலயத்தில் உள்ள சூலினி துர்க்கை அம்மனின் முழு உருவத்தை ஆடி மாதம் மூன்றாம் செவ்வாயில் மட்டுமே மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை தரிசிக்கலாம். மற்ற நாட்களில் முக தரிசனம் மட்டுமே.
20. தருமபுர ஆதீன தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடிவெள்ளியில் நவசக்தி அர்ச்சனை செய்வார்கள். 9 சிவாச்சாரியார்கள் 9 வகை மலர்களால் 9 சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை எனப்படும்.
21.புதுச்சேரி அருகே வங்க கடலோரம் அமைந்துள்ள வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் முதல் வெள்ளியில் இருந்து கடைசி வெள்ளிவரை எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் விசேஷ பூஜைகளும் விதவிதமான பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறும். தேரோட்டத்தை அரசாங்க விழாவாகக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள். புதுச்சேரி கவர்னர் தேர்வடத்தை இழுத்து விழாவைத் தொடங்கி வைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. ஆடி மாதம் முழுவதும் இவ்வூரில் விழாக் கோலம்தான்.
22.சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்துகின்றனர். இந்த அம்மன் காதுகளில் உள்ள தாடகங்களில் ஸ்ரீசக்கரம் உள்ளது. ஆடி வெள்ளியன்று இந்த அம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார். எனவே பள்ளிப் பிள்ளைகள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.
23. திருவானைக்காவலில் ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமிதேவியாகவும் உச்சிக்கால வேளையில் பார்வதியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள்.
24. ஆடிப் பவுர்ணமி அன்றுதான் திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலய பஞ்சவர்ண லிங்கம் உதங்க முனிவருக்கு ஐவண்ணங்களைக் காட்டியருளியது. அதனால் இவருக்கு ஐவண்ணநாதர் எனப் பெயர். காலை முதல் மாலை வரை இந்த லிங்கம் ஐந்து வண்ணங்களில் காட்சியளிக்கும்.
25. திருவல்லிக்கேணி எல்லை அம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் அடுக்கி ''சுவாசினி பூஜை'' நடைபெறுகிறது. இப்பூஜை, சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
- ஆன்மிகப் பயணமானது 6 மண்டலங்களில் வருகின்ற 19.07.2024 அன்று தொடங்குகிறது.
- சிறப்பு தரிசனத்துடன் உணவு, பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, 2024-2025-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் மூத்த குடிமக்கள் பயன் பெறும் கட்டணமில்லா ஆடி மாத அம்மன் கோவில்களுக்கான முதற்கட்ட ஆன்மிகப் பயணம் சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் 19.07.2024 அன்று தொடங்குகிறது.
ஆடி மாத அம்மன் கோவில் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்கள் சென்னை மண்டலத்தில் மயிலாப்பூர், கற்பகாம்பாள் கோவில், பாரிமுனை, காளிகாம்பாள் கோவில், திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவில், மாங்காடு, காமாட்சியம்மன் கோவில், திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்க ளுக்கும்,
திருச்சி மண்டலத்தில் உறையூர், வெக்காளியம்மன் கோவில், உறையூர், கமலவள்ளி நாச்சியார் கோவில், திருவானைக்காவல், அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம், மாரியம்மன் கோவில், சமயபுரம், உஜ்ஜையினி மாகாளியம்மன் கோவில் ஆகிய கோவில்க ளுக்கும்,
மதுரை மண்டலத்தில் மதுரை, மீனாட்சியம்மன் கோவில், வண்டியூர், மாரியம்மன் கோவில், மடப்புரம், காளியம்மன் கோவில், அழகர்கோவில், ராக்காயியம்மன் கோவில், சோழவந்தான், ஜனகை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கும், கோயம்புத்தூர் மண்டலத்தில் கோயமுத்தூர், கோனியம்மன் கோவில், பொள்ளாச்சி, மாரியம்மன், அங்காளம்மன் கோவில், ஆனைமலை, மாசாணியம்மன் கோவில், சூலக்கல், சூலக்கல் மாரியம்மன் கோவில், கோயமுத்தூர், தண்டுமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கும்,
தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர் பெரியகோவில், வராகியம்மன் கோவில், தஞ்சாவூர், பங்காரு காமாட்சியம்மன் கோவில், புன்னைநல்லூர், மகா மாரியம்மன் கோவில், திருக்கருகாவூர், கர்ப்பகரட்சாம்பிகை கோவில், பட்டீஸ்வரம், துர்கையம்மன் கோவில் ஆகிய கோவில் களுக்கும்,
திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி, பகவதியம்மன் கோவில், முப்பந்தல், இசக்கியம்மன் கோவில், சுசீந்திரம், ஒன்னுவிட்ட நங்கையம்மன் கோவில், மண்டைக்காடு, பகவதியம்மன் கோவில், குழித்துறை, சாமுண்டியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
ஆடி மாத அம்மன் கோவில் முதற்கட்ட ஆன்மிகப் பயணமானது 6 மண்டலங்களில் வருகின்ற 19.07.2024 அன்று தொடங்குகிறது. இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு தரிசனத்துடன் உணவு, பயணவழிப் பை மற்றும் அந்தந்த கோவில்களின் பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்களுக்கு உதவியாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தருமபுர ஆதீன தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடிவெள்ளியில் நவசக்தி அர்ச்சனை செய்வார்கள்.
- காலை முதல் மாலை வரை இந்த லிங்கம் ஐந்து வண்ணங்களில் காட்சியளிக்கும்.
தமிழ்நாட்டில் பண்டை காலத்தில் காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி ஆகிய 3 நதிகளிலும் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த 3 ஆறுகளில் தண்ணீர் பெருகுவதை "முவ்வாறு பதினெட்டு" என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆடி மாதம்தான் கிராம தெய்வங்களான மதுரை வீரன், கருப்பண்ணசாமி போன்றவைகளுக்கு சிறப்பான பூஜைகள் நடத்தப்படும்.
ஆடி மாதம் குற்றால ஈசனை வணங்கி அருவியில் குளித்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
திருச்சி அருகே உள்ள திருநெடுங்கா நாதர் கோவிலில் ஆடி மாதம் முழுவதும் சூரிய ஒளி மூலவர் மீது படுவது சிறப்பாக கருதப்படுகிறது.
சேலத்தில் ஆடிமாதம் நடக்கும் செருப்படிதிருவிழா தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாத விழாவாகும்.
வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம் கொண்டு வருவார்கள்.
பூசாரி பக்தர் மீது 3 தடவை மெல்ல நீவி விடுவார்கள். இதுதான் செருப்படித் திருவிழா.
சென்னை திரு நின்றவூரில் உள்ள நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து
மஞ்சள் ஆடை தரித்து பய பக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.
கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் மூன்று தேவிகளுக்கும் முதல் மூன்று வாரங்கள்
பூக்களால் தினமும் அலங்காரம் செய்வார்கள்.
நான்காவது வாரம் காய்கறிகளால் அலங்காரம் செய்வார்கள்.
ஐந்தாவது வாரம் பல வகை பழங்களால் அலங்காரம் செய்வார்கள். கடைசி வெள்ளியன்று வரலட்சுமி நோன்பு விழா நடைபெறும்.
அதில் மாங்கல்ய சரடு வைத்துப் பூஜித்து பெண்மணிகள் அனைவருக்கும் வழங்குவார்கள்.
ஆடி மாதத்தில் திருநெல்வேலி திரிபுர பைரவியையும் மகாமாரியம்மனையும் வணங்குவது சிறப்பாகும்.
செஞ்சிக் கோட்டை அருகே உள்ள கமலக்கண்ணியம்மன் ஆலயத்தில் ஆடிமாதம் பெரிய அளவில் விழா நடைபெறும்.
அப்போது 10,000 பேருக்கு அன்னதானம் அளிப்பார்கள்.
தகடூரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி ஆலயத்தில் உள்ள சூலினி துர்க்கை அம்மனின் முழு உருவத்தை
ஆடி மாதம் மூன்றாம் செவ்வாயில் மட்டுமே மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை தரிசிக்கலாம்.
மற்ற நாட்களில் முக தரிசனம் மட்டுமே.
தருமபுர ஆதீன தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடிவெள்ளியில் நவசக்தி அர்ச்சனை செய்வார்கள்.
ஒன்பது சிவாச்சாரியார்கள் ஒன்பது வகை மலர்களால் ஒன்பது சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை எனப்படும்.
புதுச்சேரி அருகே வங்க கடலோரம் அமைந்துள்ள வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில்
முதல் வெள்ளியில் இருந்து கடைசி வெள்ளிவரை எல்லா வெள்ளிக்கிழமைகளிலும்
விசேஷ பூஜைகளும் விதவிதமான பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறும்.
தேரோட்டத்தை அரசாங்க விழாவாகக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள்.
புதுச்சேரி கவர்னர் தேர்வடத்தை இழுத்து விழாவைத் தொடங்கி வைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.
ஆடி மாதம் முழுவதும் இவ்வூரில் விழாக் கோலம்தான்.
சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு
ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்துகின்றனர்.
இவ்வம்மன் காதுகளில் உள்ள தாடகங்களில் ஸ்ரீசக்கரம் உள்ளது.
ஆடி வெள்ளியன்று இவ்வம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார்.
எனவே பள்ளிப் பிள்ளைகள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.
திருவானைக்காவலில் ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமி தேவியாகவும்
உச்சிக்கால வேளையில் பார்வதியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள்.
ஆடிப் பவுர்ணமி அன்றுதான் திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலய பஞ்சவர்ண லிங்கம்
உதங்க முனிவருக்கு ஐவண்ணங்களைக் காட்டியருளியது.
அதனால் இவருக்கு ஐவண்ணநாதர் எனப் பெயர்.
காலை முதல் மாலை வரை இந்த லிங்கம் ஐந்து வண்ணங்களில் காட்சியளிக்கும்.
திருவல்லிக்கேணி அருள்மிகு எல்லை அம்மன் திருக்கோவிலில், ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் அடுக்கி ''சுவாசினி பூஜை'' நடைபெறுகிறது.
இப்பூஜை, சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
- அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.
- கள்ளழகர் கோவிலில் விமரிசையாக ஆடித் தேரோட்டம் நடைபெறும்.
1. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள்
மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.
2. சென்னை புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில் பெரிய பாளையம்மன் கோவிலில் தான்
ஆடி திருவிழா மிக, மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
3. கள்ளழகர் கோவிலில் விமரிசையாக ஆடித் தேரோட்டம் நடைபெறும்.
4. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு 5 நாள் நடை திறந்து பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.
5. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீவனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது.
ஆடி மாதம் இந்த கோவிலில் பிரமாண்ட தீ மிதி திருவிழா நடைபெறும்.
சுற்று வட்டாரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
6. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது.
ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள்.
இதை அந்த பகுதி மக்கள் "ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு" என்று சொல்வார்கள்.
7. ஆடிப் பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும்.
அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.
8. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைக்கொட்டு விழா நடை பெறும் பத்து நாட்களில்,
ஆடி வீதி நான்கிலும் அம்மன் வலம் வருவார்.
9. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் ஆண்டாளுக்கு ஆடிப் பூர உற்சவம் மூன்று நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும்.
10. கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவில் ஆடிப் பதினெட்டில் மும்மூர்த்திகளும் காவிரிக்கு எழுந்தருள்வார்கள்.
அன்று இரவு பச்சை மண்ணில் பானை செய்து, மா விளக்கு, காதோலை, கருகமணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை அதில் வைத்து விட்டு வருவர்.
- பொதுவாக ஆடிமாதம் திருமணம் நடத்துவதில்லை.
- அதனால் உடல் நலத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய மாதம் இது.
பொதுவாக ஆடிமாதம் திருமணம் நடத்துவதில்லை.
எந்த சூழ்நிலையிலும் ஆடி மாதம் திருமணம் செய்வதை முன்னோர்கள் ஆமோதிப்பதில்லை.
தமிழ் மாதங்களில் நான்காவது மாதமான ஆடிமாதத்தை ராசியில்லாத மாதமாகவே கருதி வருகின்றனர்.
இதிலிருந்து ஏதோ ஒரு விஷயம் இதன் பின்னால் உள்ளதை உணரலாம்.
ஆடி மாதத்துக்குப் பின் வரும் ஆவணி மாதம் நிலவின் குளுமை நிறைந்த மாதம் என்றும்
அதனால் ஆவணியிலே திருமணம் செய்யலாம் என்று சொல்வது வழக்கம்.
திருமணம் மட்டுமின்றி முக்கிய சடங்குகளும் ஆடிமாதம் நிகழ்வதைத் தவிர்த்து வருகிறார்கள்.
திருமணம் என்பது மனதாலும், உடலாலும் எதிர்கொள்ள வேண்டிய வைபவம்.
அதனால் இதற்கு மிகவும் கவனம் தேவை.
ஆடிமாதம் பொதுவாக உடல் நலத்துக்கு உகந்த மாதம் அல்ல.
இயற்கை உடல் நலத்துக்கு எதிராக இருக்கும்.
அதனால் உடல் நலத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய மாதம் இது.
இந்த காரணத்தாலேயே ஆடிமாதம் திருமணம் போன்ற சடங்குகள் நிகழ்வதில் தடைவிதிக்கப்பட்டு வருகிறது.
- ஆடி மாதம் அம்மனை வழிபட உகந்த மாதமாகும்.
- அம்மன் வழிபாடு நம் துன்பங்களை போக்கும்.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன. ஆடிமாதத்தின் சிறப்புகளையும், அம்மனை வழிபடவேண்டிய முறைகளையும் காணலாம்.
* ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.
* ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.
* ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.
* ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.
* அம்மனை வழிபடும் போது மறக்காமல் 'லலிதாசகஸ்ர நாமம்' சொல்ல வேண்டும்.
* ஆடி மாதத்தை "பீடை மாதம்" என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், "பீட மாதம்" என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.
* ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.
* ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகளையும் பெறலாம் என்பது ஐதீகம்.
* ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.
* பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.
* ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.
* பெரியபாளையம் கோவிலில் எந்த அம்மன் தலத்திலும் இல்லாத வகையில் 2 மாதங்கள் ஆடி திருவிழா நடைபெறும்.
* ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.
- பசு மற்றும் கன்றுக்கு புதிய வஸ்தி ரங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
- மகா தீபாராதனை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை:
தேவர்களின் இரவு பொழுதாக கருதப்படும் தட்சணாயன புண்ணிய காலம் இன்று தொடங்குகிறது. இதேபோல ஆடிமாத பிறப்பும் இன்று தொடங்கும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான வைணவ தலங்களில் ஒன்றான பாளையில் அமைந்திருக்கும் அழகிய மன்னார் ராஜ கோபால சுவாமி கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி கோ பூஜை மற்றும் சிறப்பு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.
இதனையொட்டி காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு ராஜ கோபால சுவாமி விஸ்வரூப தரிசன மும், அதனை தொடர்ந்து கருடன் சன்னதி முன்பு கோபூஜையும் நடைபெற்றது. பசு மற்றும் கன்றுக்கு புதிய வஸ்தி ரங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொ டர்ந்து லட்சுமி அஷ்டோத்திர சிறப்பு பூஜை களும், குங்கும அர்ச்சனையும் நடைபெற்றது.
தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட பக்தர்களும் பசுவிற்கு அகத்திக்கீரை- பழ வகைகளை வழங்கி வழிபாடு செய்தனர்.
- மகன் ஆளுமை செலுத்துவது எப்படி தந்தைக்கு ஆபத்தாகும் என்றால், ஒருவன் நாட்டிற்கு இராஜா ஆக வேண்டும் என்றால் முதலில் அவன் தந்தைக்கு ஓய்வு தர வேண்டும்.
- சித்திரையில் பிறக்கும் ஆண் பிள்ளைகள் எந்த அளவிற்கு வளர்ச்சியின் உச்சிக்கு செல்கிறதோ அந்த அளவிற்கு அவனின் தந்தை வீழ்ச்சியின் உச்சிக்கே சென்று விடுவார்.
சித்திரையில் ஆண் பிள்ளைகள் பிறந்தால் தகப்பனுக்கு ஆகாது. அந்த பிள்ளை தலை எடுக்கும் போது தகப்பனின் தலை சாயகூடும். ஆகையால் தான் ஆடியில் திருமணமும் செய்வதில்லை, தம்பதிகளையும் பிரித்து விடுகின்றனர் என்று கூறுகின்றனர். இந்த கூற்றுக்கு ஏற்றார் போல "சித்திரை அப்பன்தெருவிலே" என்று ஒரு பழமொழியே உள்ளது.
வான்மண்டலத்தில் சூரியன் தனது முழு சக்தியை வெளிப்படுத்தும் மாதம்(உச்சம்) சித்திரை. அந்த மாதத்தில் பிறக்கும் அனைத்தும் ஆளுமை செலுத்தும் என்பதே மறுக்க முடியாத உண்மை. காரணம் ஆளுமை திறன் என்பது சூரியனின் குணம்.
அதாவது சித்திரையில் பிறக்கும் ஆண் பிள்ளைகள் இயற்கையாகவே ஆளுமை திறனோடு தான் பிறக்கும். ஆகையால் தான் அது அவனின் தந்தைக்கு ஆபத்தாகிவிடுகிறது.
மகன் ஆளுமை செலுத்துவது எப்படி தந்தைக்கு ஆபத்தாகும் என்றால், ஒருவன் நாட்டிற்கு இராஜா ஆக வேண்டும் என்றால் முதலில் அவன் தந்தைக்கு ஓய்வு தர வேண்டும். ஒரு உரையில் இரண்டு கத்திகள் இருக்கக்கூடாது என்பதே விதி. ஆகையால் தான் சித்திரையில் பிறக்கும் ஆண் பிள்ளைகள் எந்த அளவிற்கு வளர்ச்சியின் உச்சிக்கு செல்கிறதோ அந்த அளவிற்கு அவனின் தந்தை வீழ்ச்சியின் உச்சிக்கே சென்று விடுவார்.
ஆனால் அவர்கள் சொல்வது போல உயிர் பலி கேட்பதற்கு எல்லாம் வாய்ப்பு மிக மிக குறைவு. ஒருவேளை அக்குழந்தை ஆயிரத்தில் ஒருவன், லட்சத்தில் ஒருவன், கோடியில் ஒருவன் போன்ற நிலைக்கு உயருமேனில் அப்படி நடக்க வாய்ப்புள்ளது. அதுவும் 100% கிடையாது.
இன்னும் புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் உங்கள் பலம் கூட கூட உங்கள் தந்தையின் பலம் குறைந்துவிடும். நீங்கள் ஒரு தலைவனை போல உங்கள் குடும்பத்தை வழிநடத்துவீர்கள். உங்கள் தந்தை ஒரு பிள்ளையை போல உங்கள் நிழலில் வாழ தொடங்கிவிடுவார், அவ்வளவுதான்.
ஆனால் இவ்விதி பெண்பிள்ளைகள் பிறந்தால் பொருந்தாது. காரணம் சூரியன் என்ற கிரகத்தை குறிக்கும் உறவு காரகத்துவங்கள் யாதெனில் தந்தை மற்றும் மூத்த மகனே. ஆகையால் சித்திரையில் பெண்பிள்ளைகள் பிறந்தால் தகப்பனுக்கு நன்மையே அன்றி தீமை கிடையாது.
ஆடியில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்வதும் சித்திரையில் ஆண்குழந்தை பிறப்பதும் ஒரு தந்தைக்கு வேண்டுமானால் பெரிதளவு நன்மையில்லாமல் இருக்கலாம். ஆனால் பிறக்கும் அக்குழந்தைக்கு அது நன்மையே.
என்னதான் நாம் தவிர்த்தும் பிரித்தும் வந்தாலும் இதை எல்லாம் மீறி சிலர் ஆடியில் சேர தான் போகிறார்கள், சித்திரையிலும் குழந்தை பிறக்க தான் போகிறது. காரணம் இயற்கையின் கட்டமைப்பு அப்படி. அதை மீற இங்கு யாரால் முடியும்?
-கோகுல மணிகண்டன்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்