search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆடி மாதம் திருமணம் நடத்தலாமா?
    X

    ஆடி மாதம் திருமணம் நடத்தலாமா?

    • பொதுவாக ஆடிமாதம் திருமணம் நடத்துவதில்லை.
    • அதனால் உடல் நலத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய மாதம் இது.

    பொதுவாக ஆடிமாதம் திருமணம் நடத்துவதில்லை.

    எந்த சூழ்நிலையிலும் ஆடி மாதம் திருமணம் செய்வதை முன்னோர்கள் ஆமோதிப்பதில்லை.

    தமிழ் மாதங்களில் நான்காவது மாதமான ஆடிமாதத்தை ராசியில்லாத மாதமாகவே கருதி வருகின்றனர்.

    இதிலிருந்து ஏதோ ஒரு விஷயம் இதன் பின்னால் உள்ளதை உணரலாம்.

    ஆடி மாதத்துக்குப் பின் வரும் ஆவணி மாதம் நிலவின் குளுமை நிறைந்த மாதம் என்றும்

    அதனால் ஆவணியிலே திருமணம் செய்யலாம் என்று சொல்வது வழக்கம்.

    திருமணம் மட்டுமின்றி முக்கிய சடங்குகளும் ஆடிமாதம் நிகழ்வதைத் தவிர்த்து வருகிறார்கள்.

    திருமணம் என்பது மனதாலும், உடலாலும் எதிர்கொள்ள வேண்டிய வைபவம்.

    அதனால் இதற்கு மிகவும் கவனம் தேவை.

    ஆடிமாதம் பொதுவாக உடல் நலத்துக்கு உகந்த மாதம் அல்ல.

    இயற்கை உடல் நலத்துக்கு எதிராக இருக்கும்.

    அதனால் உடல் நலத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய மாதம் இது.

    இந்த காரணத்தாலேயே ஆடிமாதம் திருமணம் போன்ற சடங்குகள் நிகழ்வதில் தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×