என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aamir khan"

    • ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
    • இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், மாஸ்டர் மகேந்திரன் நடிக்கின்றனர்.

     ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கூலி என்று பெயரிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது.

    இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், மாஸ்டர் மகேந்திரன் நடிக்கின்றனர். மற்ற நடிகர்களை குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.

    இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ஒரு பான் இந்தியன் திரைப்படத்தை இயக்கப்போவதாகவும் அதில் நடிகர் அமீர்கான் கதாநாயகனாக நடிக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கப்போகும் படங்களுக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லோகேஷ் கனகராஜின் இயக்குனர் பயணம் மாநகரம் படம் மூலம் தொடங்கியது.
    • தற்போது ரஜினிகாந்த்தை வைத்து `கூலி' படத்தை இயக்கி வருகிறார்.

    லோகேஷ் கனகராஜின் இயக்குனர் பயணம் மாநகரம் படம் மூலம் தொடங்கியது. மிகச் சிறப்பான கதைக்களத்துடன் மாநகரம் படத்தை கொடுத்து அனைத்து தரப்பினரின் புருவத்தையும் உயர்த்த செய்திருந்தார்.

     இவர் திரையுலகில் வந்த சில வருடங்களிலேயே கமல், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களை வைத்து மாஸ்டர், விக்ரம், லியோ, கைதி-1 படங்களை இயக்கினார். தற்போது நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து `கூலி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

     கடந்த 2019-ம் ஆண்டில் நடிகர் கார்த்தியை வைத்து `கைதி' எனும் படத்தை லோகேஷ் இயக்கிருந்தார். இந்த படம் வெளிவந்த போது கைதி-2 ம் பாகம் உருவாகும் என அறிவித்தனர்.

    ஆனால், லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து உச்ச நடிகர்கள் படம் இயக்குவதில் பிசியாக இருந்ததால் கைதி-2 படம் உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் அடுத்ததாக பாலிவுட் நடிகர் அமீர் கானை வைத்து `பான் இந்தியா' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

    ஆனால் லோகேஷ் கனகராஜ் கூலி படம் முடிவடைந்த பிறகு கைதி 2-ம் பாகத்திதை தான் இயக்குவார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்திய திரையுலகில் மிக சிறந்த நட்சத்திரமாக கின்ன்ஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
    • இந்த விருதை நடிகர் அமீர் கான் வழங்கி சிரஞ்சீவியை கவுரவித்தார்.

    தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. தற்பொழுது இந்திய திரையுலகில் மிக சிறந்த நட்சத்திரமாக கின்ன்ஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

    சிரஞ்சீவி இதுவரை 24000 நடன ஸ்டெப்புகளை 537 பாடல்களில் 156 படங்களில் 45 வருடங்களுக்குள் செய்ததால் இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளனர்.

    இந்த விருதை நடிகர் அமீர் கான் வழங்கி சிரஞ்சீவியை கவுரவித்தார். நேற்று இந்த விருது சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது. இதே செப்டம்பர் 22 ஆம் தேதி 1978 - வது வருடத்தில் இவர் நடித்த முதல் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    விருதை பெற்ற சிரஞ்சீவி " என்னுடைய சினிமா பயணத்தில் நான் கின்னஸ் சாதனையெல்லாம் செய்வேன் என எதிர்பார்த்தது இல்லை. இது தற்செயலாக அமைந்த ஒன்று. என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு, இயக்குனர்களுக்கு மற்றும் என் அன்பார்ந்த ரசிகர்களுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு நடிப்பதைவிட நடனத்தில் ஆர்வம் அதிகம். அதனால் கூட எனக்கு இந்த விருது கிடைத்திருக்கலாம்." என கூறினார்.

    சிரஞ்சீவி தற்பொழுது மல்லிடி இயக்கத்தில் விஸ்வம்பரா திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தப் படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது.
    • புதிய படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஆமீர் கான். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திரையுலகில் கவனம் செலுத்தி வரும் ஆமீர் கான் 'சித்தாரே ஜமீன் பர்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது.

    ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியிருக்கும் சித்தாரே ஜமீன் பர் படத்தில் ஆமீர் கான் ஜோடியாக ஜெனிலியா நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆமீர் கான் நடிக்க இருக்கும் புதிய படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    அந்த வகையில், ஆமீர் கான் தமிழில் வெளியாகி, இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்ற கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கஜினி பட தயாரிப்பாளர்களான அல்லு அரவிந்த் மற்றும் மது மந்தெனாவிடம் பேசிய ஆமீர் கான், படத்தின் கருவை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    தமிழில் சூர்யா, அசின், நயன்தாரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான கஜினி திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. மேலும் இந்தப் படத்தின் இந்தி ரீமேக் வசூலை குவித்தது. அந்த வகையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உண்மையில் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சீன மொழியில் டப்பிங் செய்து அலிபாபா குழுமம் சீனாவில் வெளியிட்டுள்ளனர்.
    • அமீர் கான் நடித்த 'தங்கல் ' திரைப்படம் சீனாவில் ₹1,400 கோடி வசூலித்தது

    இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இது விஜய் சேதுபதியின் 50 வது படம் ஆகும்.

    இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகாராஜா' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது.

     

     

    இதற்கிடையே 'மகாராஜா' திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து அலிபாபா குழுமம் சீனாவில் வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படம் 40,000 திரைகளில் நேற்று முன்தினம் [நவம்பர் 29] வெளியாகியுள்ளது. அதற்கு ஒருநாள் முன்பு சிறப்புக் காட்சியும் திரையிடப்பட்டது.

    இந்நிலையில் முதல் நாள் வசூலாக மகாராஜா ரூ. 5 கோடி எட்டியுள்ளது. சிறப்பு திரையிடலுடன் சேர்த்து ரூ. 10 கோடி வசூல் ஆகியுள்ளது.

     

    அமீர் கான் நடித்த 'தங்கல் ' திரைப்படம் சீனாவில் ₹1,400 கோடி வசூலித்து நிகழ்த்திய சாதனையை மகாராஜா திரைப்படமும் நிகழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடையே எழுத்துள்ளது.

    • ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி."
    • படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.

    இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினி நேற்று ஜெய்பூர் சென்றார். இதை தொடர்ந்து இந்தி நடிகரான அமீர் கானும் நேற்று ஜெய்பூர் விமான நிலையத்தில் காணப்பட்டார். இவர்களின் புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.

     

    கூலி திரைப்படத்தில் அமீர் கான் எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் கிளம்பியுள்ளது. இதற்கு முன் திலிப் ஷங்கர் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ஆதங் ஹி ஆதங் என்ற திரைப்படத்தில் ரஜினி மற்றும் அமீர் கான் இணைந்து நடித்தனர்.

     

    பரவி வரும் செய்தி உண்மையெனில் இவர்கள் இருவரும் 29 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு ஏதேனும் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடுவர் என எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • லோகேஷ் கனகராஜ் தற்பொழுது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • பாலிவுட் நட்சத்திர நடிகரான அமீர்கான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் தற்பொழுது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. கூலி திரைப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகர்ஜூனா, உபேந்திரா, அமீர்கான், சௌபின் சாஹிர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பல நேர்காணலில் இரும்புகை மாயாவி என்ற திரைப்படத்தை குறித்து அவர் கூறியுள்ளார். அத்திரைப்படமே அவரின் டிரீம் ப்ராஜக்ட் எனவும் கூறியுள்ளார். இப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்பொழுது இப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகரான அமீர்கான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இரும்பு கை மாயாவி திரைப்படம் ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். ஆனால் இத்தகவலை குறித்து லோகேஷும் அமீர்கானும் எதும் செய்திகளை கூறவில்லை. இதனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • ஜீனத் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

    இந்திய அளவில் பிரபலமான பாலிவுட் நடிகர் அமீர் கான். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் ஒரு படத்திற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் தன்னை வருத்திக் கொள்வார். அந்த அளவிற்கு இவர் நடிப்பின் மீதும் சினிமா துறையின் மீதும் அதிக அர்ப்பனிப்பும் ஈடுபாடும் கொண்டவர்.

    இந்த நிலையில், அமீர் கானின் தாயார் ஜீனத் உடல்நல குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜீனத்-க்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில் அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    அமீர்கான் நடிப்பில் வெளியாகவுள்ள ‘லால் சிங் சத்தா’ படத்தின் டிரைலர் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
    ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump) திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதில் நடிகர் டாம் ஹாங்க்ஸ் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில், கற்பனை கலந்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்தை தழுவி பாலிவுட்டில் 'லால் சிங் சத்தா' என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. 

    இதில் டாம் ஹாங்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். மேலும் கரீனா கபூர், நாகசைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    லால் சிங் சத்தா
    லால் சிங் சத்தா

    'லால் சிங் சத்தா' படத்தின் டிரைலர் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப் போட்டியின் இன்னிங்ஸ் இடைவேளையின் போது வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதன் டிரைலர் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


    • அமீர் கான் - கரீனா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லால் சிங் சத்தா.
    • இப்படம் வெளீயாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

    ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump) திரைப்படத்தை தழுவி பாலிவுட்டில் 'லால் சிங் சத்தா' திரைப்படம் உருவாகி சமீபத்தில் வெளியானது. இதில் இந்தி நடிகர் அமீர்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

     

    லால் சிங் சத்தா

    லால் சிங் சத்தா

    அத்வைத் சந்தன் இயக்கியிருந்த இந்த திரைப்படம், ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் ஈட்டவில்லை. இதற்கு காரணம் 'பாய்காட் லால் சிங் சத்தா' என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளத்தில் டிரெண்டானது தான் என்று கூறப்பட்டது.

    லால் சிங் சத்தா

    லால் சிங் சத்தா

     

    'லால் சிங் சத்தா' படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட அமீர்கான் தனது சம்பளத்தை வாங்காமல் விட்டுக் கொடுத்து விட்டதாக தகவல் வெளியானது. சம்பளத்தை வாங்கினால் தயாரிப்பு நிறுவனத்துக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படும் என்று கருதி தோல்விக்கு தானே பொறுப்பு ஏற்று இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்பட்டது.

     

    லால் சிங் சத்தா

    லால் சிங் சத்தா

    லால்சிங் சத்தா படத்தை விரைவில் ஓ.டி.டியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக இந்தி படம் திரைக்கு வந்து 6 மாதங்களுக்கு பிறகே ஓ.டி.டி.யில் வெளியிடுவது வழக்கமாக உள்ளது. ஆனால் தியேட்டரில் வெளியாகி தோல்வியை சந்தித்த லால்சிங் சத்தா படத்தை மட்டும் முன்கூட்டியே ஓ.டி.டியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • அமீர் கான் - கரீனா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லால் சிங் சத்தா.
    • இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றது.

    ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump) திரைப்படத்தை தழுவி பாலிவுட்டில் 'லால் சிங் சத்தா' திரைப்படம் உருவாகியது. இதில் இந்தி நடிகர் அமீர்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.


    லால் சிங் சத்தா

    அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் ஈட்டவில்லை. இதற்கு காரணம்  'பாய்காட் லால் சிங் சத்தா' என்ற ஹேஷ்டேக்  ட்ரெண்டானது தான் என்று கூறப்படுகிறது.


    லால் சிங் சத்தா

    இந்நிலையில், 'லால் சிங் சத்தா' திரைப்படத்திற்கு நடிகர் அமீர்கான் ஊதியம் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது, அமீர்கான் தனது நடிப்புக்கான கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்தால், படக்குழுவிற்கு கிட்டத்தட்ட ரூ.100 கோடி நஷ்டம் ஏற்படும் என்பதால் தனக்கு சேர வேண்டிய ஊதியத்தை வேண்டாம் என அமீர்கான் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ள படம் லால் சிங் சத்தா.
    • இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump) திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில், கற்பனை கலந்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்தை தழுவி தற்போது பாலிவுட்டில் 'லால் சிங் சத்தா' என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.


    லால் சிங் சத்தா

    இதில் இந்தி நடிகர் அமீர்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


    லால் சிங் சத்தா

    சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் முன்னோட்ட காட்சியில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, "அன்பு, காதல், மனிதநேயம் அனைத்தும் பேசும் படமாக "லால் சிங் சத்தா" அமைந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் இந்த மாதிரியான ஒரு படம் அவசியம்.

    எப்போது எல்லாம் நாம் மோசமாக உணர்கிறோமோ அப்போது நம்மை ஊக்கப்படுத்த பார்க்கும் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். அமீர்கான் சார் நீங்கள் கிரேட்" என்று பேசினார்.

    ×