search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aari arujunan"

    • இயக்குனர் காகா எழுதி, இயக்கியிருக்கும் குறும்படம் வார் ஆன் டிரக்ஸ்.
    • இந்த குறும்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் குறும்படம் 'வார் ஆன் டிரக்ஸ்' ( War On Drugs) . இயக்குனர் கே.வி.ஆனந்தின் முன்னாள் இணை இயக்குனரான காகா எழுதி, இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை ஆர்.கே.ஜி குரூப்பின் ஜி.சந்தோஷ் குமார் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு கேபி இசையமைக்க, ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    வார் ஆன் டிரக்ஸ்

    போதைப்பொருள் பழக்கம் நம் இளைய சமுதாயத்தை முற்றிலுமாக அழித்து கொண்டிருக்கிறது. போதைப்பழக்கத்தில் சிக்கிக்கொள்வோரை மீட்க அரசும் காவல்துறையும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒரு முயற்சியாக போதைப்பொருள் பயன்பாட்டின் கெடுதல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த குறும்படம் உருவாகியுள்ளது.

    இந்த குறும்படத்தினை வேலூர் காவல்துறை டிஐஜி ஆனி விஜயா. ஐபிஎஸ் கே.எஸ். பாலகிருஷ்ணன், பிவிஎஸ்சி மற்றும் ஆர்கேஜி இன்ஃபோடெயின்மெண்ட் இணைந்து வெளியிட்டனர். 

    ×