search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aatishi"

    • மூன்று முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
    • கெஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்ததாக டெல்லி மந்திரி ஆதிஷி தெரிவித்திருந்தார்.

    டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநிலத்தின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.

    இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகும்படி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. நேற்றோடு 3-வது முறையாக சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

    இந்த நிலையில்தான் அவரது வீட்டில் சோதனை நடத்தி, அதன்பின் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில மந்திரி ஆதிஷி அதிர்ச்சி தகவலை தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டிற்கு முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவரது வீடு இருக்கும் பாதை மூடப்பட்டு அங்கு வசிப்பவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆதிஷி கூறியதுபோல் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இச்சம்பவம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை இடத்த மத்திய அமைப்பு முடிவு.
    • அமலாக்கத்துறை மூன்று முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகவில்லை.

    டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை மூன்று முறை சம்மன் அனுப்பியுடம் அவர் ஆஜராகவில்லை. நேற்று 3-வது முறையாக ஆஜராகவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்த வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என டெல்லி மாநில மந்திரி ஆதிஷி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில் "நாளை (இன்று) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்த இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    டெல்லி மந்திரி ஆதிஷி

    அதிஷியின் எக்ஸ் பக்க பதவி டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சிபிஐ சுமார் 9 மணி நேரம் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியது. இருந்த போதிலும் இந்த வழக்கில் அவரை குற்றவாளி என சேர்க்கவில்லை. நவம்பர் 2-ந்தேதி மற்றும் டிசம்பர் 21-ந்தேதிகளில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்து. நேற்று 3-வது முறையாக ஆஜரான சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×