என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AB DeVilliers"

    • ஜூலையில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட் தொடரில் விளையாட உள்ளேன் என்றார் டிவில்லியர்ஸ்.
    • டி வில்லியர்சின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    டர்பன்:

    தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் ஏ.பி.டிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பப் போவதாக அறிவித்துள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் டிவில்லியர்ஸ் கிரிக்கெட் போட்டிக்குத் திரும்ப வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தார்.

    முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்ற உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட் (WCL) என்ற தொடர் மிகவும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக டிவில்லியர்ஸ் பங்கேற்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இந்நிலையில், வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட் தொடரில் விளையாட உள்ளேன் என டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பேட்டியளித்த டிவில்லியர்ஸ், 4 ஆண்டுக்கு முன் நான் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றேன். மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற நினைப்பு இல்லாமல் இருந்தேன். காலம் செல்ல மீண்டும் எனக்கு கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்ப வேண்டும் என்ற நினைப்பு தோன்றுகிறது.

    அதற்கு காரணம் நான் என்னுடைய மகன்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுகிறேன். அப்போது எனக்குள் இன்னும் கிரிக்கெட் வேட்கை இருந்ததை உணர முடிந்தது. எனவே தற்போது ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அது மட்டுமின்றி பேட்டிங் பயிற்சியும் செய்து வருகிறேன்.

    இதன்மூலம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட் தொடரில் நான் விளையாட தயாராகி விடுவேன் என தெரிவித்துள்ளார்.

    இந்த தென் ஆப்பிரிக்க அணியில் காலிஸ், கிப்ஸ், ஸ்டெயின், இம்ரான் தாகிர் போன்ற வீரர்களும் விளையாட உள்ளனர்.

    டி வில்லியர்சின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, சமீபத்தில் ஓய்வு பெற்ற டிவில்லியர்சுக்கு டுவிட்டரில் வாழ்த்து செய்தி பதிவு செய்துள்ளார். #ABDRetires #ABDevilliers #ViratKohli

    தென்னாப்ரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறினார். இது அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் டிவில்லியர்ஸ் விளையாடும் ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனான விராட் கோலி, அவருக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் டிவில்லியர்சை சகோதரர் என குறிப்பிட்டுள்ளார்.



    கோலி பதிவு செய்துள்ள டுவிட்டில், சகோதரா, உன் வாழ்வில் இனி நீ செய்யும் அனைத்தும் செயல்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள். நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய நேரத்தில் பேட்டிங் செய்யும் முறையை மாறிவிட்டீர்கள். இனி உன்னுடைய குடும்பத்துடன், உனது அற்புதமான பயணத்திற்காக வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கோலி கூறியுள்ளார். #ABDRetires #ABDevilliers #ViratKohli
    தென்ஆப்ரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #ABDeVilliers #ABDRetires #Mr360

    ஏபி டிவில்லியர்ஸ் தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி விரைவாக 50, 100, 150 ரன்கள் அடித்த தென்ஆப்ரிக்கா வீரர் எனும் சாதனையையும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவிரைவாக 50 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனைகளைப் படைத்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இவர் மட்டையாளராகவும் , விக்கெட் கீப்பராகவும் துவக்கத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கினார். மத்திய வரிசையில் இறங்கும் இவர் பல திசைகளிலும் அடித்து விளையாடும் வல்லமை படைத்தவர். நவீன காலத் துடுப்பாட்டப் போட்டிகளில் புதுமையான பேட்ஸ்மேன் என அறியப்படுகிறார். மேலும் விக்கெட் கீப்பர் மற்றும் பல திசைகளிலும் அடித்து விளையாடும் சில வித்தியாசமான முறைகளால் இவர் மிஸ்டர் 360 எனும் புனைபெயரால் அழைக்கப்படுகிறார். 

    2004-ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். 2005-ம் ஆண்டின் துவக்கத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். 2006-ம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் இவர் அறிமுகமானார். அவரின் பேட்டிங் சராசரி இரு வடிவங்களிலும் 50-ற்கும் அதிகமாக உள்ளது.

    தென்ஆப்ரிக்கா டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாகவும் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயத்தினால் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக நீடித்து வருகிறார். பின் 2017 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் ஆகியவற்றின் தோல்விகளால் ஒருநாள் போட்டி கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகினார்.



    டிவில்லியர்ஸ் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடினார். ஆனால் அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. 

    இந்நிலையில், 123 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டிவில்லியர்ஸ், அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். #ABDeVilliers #ABDRetires #Mr360
    ×